நிரல்யா -3

ஏ நிரல்யா அந்த போன் ரொம்ப நேரமா கத்து-து என்னனு பாரு…. என சாந்தி சொல்ல



இதோ வரேன் மா !!!!!!!!!!!!!!!!! என்று வேகமாக கதவை தள்ளிக்கொண்டு வெளியே வந்தாள்……



யார் கால் பண்ணி இருப்பா நிரல்யாக்கு..... நமக்கு எப்பவும் All is well சொல்லுற ஒரே ஒரு ஆளு யாருங்க இருக்கமுடியும் ??????? நிச்சயமா தோழமை தாங்க... எந்த ஒரு இக்கட்டான நேரத்துலையும் நம்மக்கூடவே இருந்து நம்மல உயரத்துல தூக்கிவிடும் ஒரு உன்னதமான உறவு தான் ” நட்பு ”....எந்த ஒரு இரத்தபந்தமும் இல்லாம நமக்காக துடிக்கும் ஒரு உறவு நட்பு மட்டுமே.......அதனால தான் திருவள்ளுவர் கூட நட்பின் சிறப்பை இப்படி சொல்லி இருக்கார்.....



” நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை ”


பொருள் :: மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.



கண்டிப்பா இப்ப வரப்போற நேரத்த எதிர்கொள்ள நிரல்யாக்கு அந்தப்பாட்டு ரொம்ப அவசியங்க.....சரி யார் அந்த நிரல்யாவின் தோழமை ??????????



” பவி ” என்று பல் இளித்துக்கொண்டு இருந்தது அலைப்பேசி….பவித்ரா நிரல்யாவின் உயிர் தோழி…. பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்தனர்…இவர்களுக்கு ஜோடி புறா என்ற பட்டப்பெயர் கூட உண்டு……பவி நிரல்யாவிக்கு வலதுகை என்று கூட கூறலாம்…..வலதுகை என்று சொல்ல காரணம் உண்டு அத கீழ நீங்களே பாருங்க…….. அலைப்பேசியை எடுத்து மெல்ல காதில் பொருத்தினாள்….



சொல்லு டி பவி என்ன பண்ணுற ????



முதல்ல நீ எங்க இருக்கனு சொல்லு



நா வேற எங்க இருக்கப்போறேன் வீட்ல தான்…..நீ வேற ஊருக்கு போய்ட செம்ம போர் பவி……..



அடிப்பாவி !!!!!!!!!!!!!!!!!…………….…………….....................................................................................................
நினச்சேன் நீ மறந்து இருப்ப-னு.......... இதுக்கு தான் ரிமைண்டர்-ல போட்டு பழகிக்கோனு தலப்பாட அடிச்சிகிட்டேன்….. நான் இல்லாதப்ப அது உனக்கு யூஸ் ஆகும்-னு ….. சொல்றத கேட்டாதான……….



ஏய் ஏன் இப்ப டென்ஷன் ஆகுற ??? இன்னைக்கு என்ன நாள் அப்படி ???



ஹ்ம்ம்ம் …. நேரா போய் உன் ஹாண்ட்பேக்-க திற…அதுல ஒரு கவர் இருக்கும் அத எடு……………



சரி இரு பாக்குறேன்…என்று சொல்லி தன்னுடைய ஹாண்ட்பேக்-க திறந்து கவரை பிரித்த அவளுக்கு திக்கென்று தூக்கிப்போட்டது…அவள் விழிகள் கோழி முட்டை அளவில் பெரிதாய் விரிந்தன………………….



அச்சச்சோ இண்டர்வியூ கால் லெட்டர்!!!!!!!!!!!!!…..



இன்னைக்கு எனக்கு இண்டர்வியூ-ல சுத்தமா மறந்தே போய்ட்டேன் பவி…. நல்லவேள நீ ஞாயபக படுத்தின…….. நீ எங்க இருந்தாலும் எனக்கு வலதுகை தான் டி செல்லம்…



ஆமா!!ஆமா !!!!!! இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறச்சல் இல்ல…. லூசு இப்பவே மணி 11….. 12 மணிக்கு நீ அங்க இருக்கனும்….. இப்ப எப்படி போவ நீ ???? முதல்ல அத யோசி……. உன் வீட்ல இருந்து நீ அங்க போகவே 1 மணி நேரம் ஆகும்………..



ஆமால………. இப்ப என்ன பண்ணுறது…..அம்மாக்கு தெரிஞ்சா ருத்ரதாண்டவம் ஆடிடுவாங்களே………எப்படியாவது சமாளிக்குறேன்……..சமாளிச்சுதானே ஆகனும்…..வேற வழி………சரி பவி நா அங்கப்போய்டு உனக்கு கால் பண்ணுறேன் டி…..



சரி பாத்து பத்ரமா போ நிரல்….ஆல் தி பெஸ்ட் டி…….



தேங்கியூ டியர் !! என்று அழைப்பை துண்டித்தாள்………



நிரல்யாவின் மூளை படுவேகமாக பதட்டத்துடன் பல எண்ணத்தில் ஓடிக்கொண்டு இருந்தது………



நிரல்யா நேரத்திற்க்கு இண்டர்வியூ செல்வாளா ????? எப்படி செல்வாள் ?????? யார் அவளை அழைத்து செல்வார் ?????? அடுத்து என்ன நடக்கும் ???????

.
.
.
.
.
.
.
அடுத்தப்பகுதியில் பார்ப்போம் ……..

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (19-Oct-14, 7:22 pm)
பார்வை : 301

மேலே