பச்சை பந்து

நட்சத்திரங்களுக்கு இடையிலே ஜகூ என்ற அமானுஷ்ய சக்தி படைத்த ஒருத்தன் வாழ்ந்து வந்தான்.ஒரு நாள் அவன் பூமியை சுற்றிப்பார்க்க வந்தான் அப்போது மனிதர்கள் யாரும் பூமியில் பிறக்க்வேயில்லை.செடி கொடிகள் மரங்கள் பறவைகள் மட்டும்தான் இருந்தது.. செடி கொடிகள் மரங்களை பார்த்தவுடன் அவனுக்கு பூமியை பிடித்துப்போய்விட்டது. மரங்களுடன் அவனுக்கு காதல் உண்டாகியது. செடி கொடிகள் மரங்கள் எல்லாம் இங்கே எப்படி வந்திருக்கும் என்ற கேள்வி அவனை தூங்கவிடாமல் செய்தது..அந்த நேரத்தில் ஒரு பறவை அவனை நோக்கி வந்தது.பறவையிடம் மரங்கள் எல்லாம் எப்படி வந்தது என்று கேட்டான்.. மரங்கள் விதையிலிருந்து வந்தது என்று பறவை அவனிடம் சொல்லிவிட்டு பறந்து போனது .ஜகூ காடு மலைகளில் எல்லாம் சுற்றி திரிந்து விதைகளை எடுத்துக்கொண்டு மரங்கள் இல்லாத இடத்தில் எல்லாம் விதைகளை விதைத்தான் . மரங்கள் வளரவே இல்லை.. ஜகூ விதையிலிருந்து ம்ரஙகள் வருகிறது என்று சொன்ன பறவையை தேடிப்போனான். அந்தப்பற்வை மலையின் உச்சியில் வாழ்ந்துவந்தது .பறவையிடம் ஜகூ நான் விதைகளை நேற்று விதைத்தேன் ஆனால் மரம் ஏன் இன்னும் வளரவில்லை என்று கேட்டான்.அதற்கு பறவை மரம் வளர மாதங்கள் வருசங்கள் ஆகும் அதுவரைக்கும் நாம் காத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பறவை இரை தேட கிளம்பிபோய்விட்டது. மாதங்கள் வருசங்கள் சீக்கிரமா ஆகணும்னா பூமி இப்ப சுத்துவதை விட வேகமா சுத்த வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான் ஜகூ ..தன்னோட அமானுஷ்ய சக்தியை பயன்படுத்தி பூமியைவிட்டு வெளியே குதித்தான் ஜகூ . பூமியை விட பெரியவனாய் உருமாறி பூமியை பம்பரம் போல கையில் எடுத்து வேகமாக சுழலவிட்டான்.. பூமியெங்கும் ஜகூ விதைத்த விதைகள் மரங்களாக வளர்ந்திர்ந்தது..ஜகூ தலையை குனிந்து பூமியை பார்த்த போது பூமி பச்சை பந்தைப்போல காட்சிதந்தது

எழுதியவர் : ஜெகதீஷ் (21-Oct-14, 7:29 pm)
சேர்த்தது : ஜெகதீஷ்
Tanglish : pachchai panthu
பார்வை : 286

மேலே