இன்றைய தீபாவளி

உழைத்தவன் கூட
உற்சாகமாய்க் கொண்டாடும் தீபாவளி.
பிழைப்பவன் கூட
பூரிப்பில் கொண்டாடும் தீபாவளி.

சூரியன் சுடுவதற்குள்
சூரியனையே சுடுகின்ற
சூதுவாது அறியாதவர்கள் கொண்டாடும் தீபாவளி.

வண்ண வண்ண வெடிகள் ஆயிரம்
விண்ணை முட்டும் விதவிதமாக
கண்ணும் கையும் கொட்டும் தீபாவளி.

புத்தாடை இடைஉடுத்தி
பூரிப்பை முகத்தில் உடுத்தி
பூஞ்சட்டி கொளுத்தி
புன்னகையை வெடிக்கும் தீபாவளி.

பாட்டன் பாட்டியும்
அப்பா அம்மாவும்,
அண்ணன்,தம்பியும்,
அக்கா,தங்கையும்,
பிள்ளையும்,மருமகளும்,
மாப்பிள்ளையும்,மகளும்,
பேரன்,பேத்தியும், - கூட்டாக
போற்றிக் கொண்டாடும் இன்றைய தீபாவளி.

உறவெல்லாம் ஒன்று கூடி
பிரிவெல்லாம் வெடித்து சிதறும்
புகையாய் மாறி
பொங்கபானைப் போல்
பொங்கி வெடிக்கும் ஆனந்த தீபாவளி.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (22-Oct-14, 4:53 am)
Tanglish : indraiya theebavali
பார்வை : 1839

மேலே