உணர்வுகளின் ஊர்வலம்

உள்ளத்து காதலை முதன்முதலில்
உதிர்க்க போகிறேன் - இரு
உணர்வுகளின் ஊர்வலம் இங்கு..

வார்த்தைகளில் வசியம்செய்ய
வழியில்லை...
வரலாறாகட்டும் என
வரைந்திட்டேன் என் காதலை
கடிதத்தில்...

பதில் எனக்கானது இல்லை
பகிரங்கமாய் தெரிந்தும்
பதிலுக்காக நான்...

காத்திருப்பு தேவைப்படவில்லை
காதலும் புலப்படவில்லை
கடிதத்திற்கு பதில் மட்டும்
கிடைத்தது
காலதாமதமின்றி...

காதல் கடிதம் அல்ல... இது
காதல் பற்றிய கடிதம்
காதலிக்கு அல்ல... இது
காதலியின் பெற்றோருக்கு

சாதிக்க பிறந்த காதலை
சாதிக்காக புதைத்தனர்...
மனிதம் கொண்ட உள்ளத்தை
மரணத்தீயில் இட்டனர்...

எதிர்ப்பு தீர்ப்பாயிற்று
எரிதனல் மூட்டப்பட்டது...
இறுதி ஊர்வலத்தில்
இரு உள்ளங்கள்...
உணர்வுகள் ஊர்வலத்தில்...
உடல்கள் திருமணத்தில்...

எழுதியவர் : சுப்புராஜ் (23-Oct-14, 12:56 am)
சேர்த்தது : Subburaj arumugam
Tanglish : unarvukalin oorvalm
பார்வை : 90

மேலே