திருவாசகம்

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.-மாணிக்க வாசகர்


என்னுடைய அலைபாயும் மனவேகத்தை நீக்கி எனை ஆட்கொண்ட மன்னனின் திருவடி வெல்க.
பிறப்பினை நீக்கும் பின்னிய சடையுடைய ஈசன் அணி கழல்கள் வெல்க.
விலகி நிற்பவர்களுக்கு, எட்டாத தூரத்தில் உள்ள அவன் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்க.
கைக் கூப்பி வணங்குவர் உள்ளத்தில் மகிழ்ச்சியாய் இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்க.
தலை தாழ்த்தி வணங்குபவர்களின் நிலையை உயரச் செய்யும் பெருங்குணத்தான் கழல்கள் வெல்க.

எழுதியவர் : சுடரோன் (23-Oct-14, 4:50 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
பார்வை : 650

மேலே