தீட்டுவோம் திருந்த பாப்போம்

என்னுடைய இந்த கட்டுரை எந்த ஒரு திரைப்படத்திற்கான முன்னோட்டமோ... அதற்கான விரிவுரையோ அல்ல. இதனை படிக்கும் நீங்கள் என்னை பாராட்டுவதற்கும் கருத்திடுவதர்க்கும் அல்ல.. என்னோட மனசுல பட்டத சொல்லப்போறேன்.....

நேத்து ஒரு படம் பார்த்தேன்.. புதுப்படம் தான்... அந்த படத்த பத்தி நெறைய எதிர்மறையான கருத்துக்கள் கேலி கிண்டல் எல்லாமே நெறைய வந்துகிட்டு இருக்கு... அதனால இத எழுதுறேன் ..

அந்த படத்தோட கதாநாயகன் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு குளிர்பான வெளம்பரத்துல நடிச்சார். அப்ப அதுல அவரு நடிச்சாரே. இப்ப அதையே அவரு வேண்டாம்ன்னு சொல்றாரே எப்படின்னு கேட்டு ஏகப்பட்ட விமர்சனம்.. நக்கல் நையாண்டி.. இதெல்லாம் நேர்ல சாத்தியமா..? சினிமாவுக்கு நல்லா இருக்கும்னு பொதுக்கருத்து வேற....

ஏண்டா..? உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லையா..? அவரு போட்ட சட்டை மாதிரி நேர்ல போடலாம். அவரு பாடர பாட்டு மாதிரி நீங்க நேர்ல கத்தலாம்.. பொண்ணுகிட்ட காதல் சொல்ற மாதிரி நீங்களும் சொல்றீங்க. இது மட்டும் முடியாதோ..? படத்துல சொல்லப்பட்டிருக்கிற விஷயம் என்ன..? நம்மளோட வளங்கள் சுரண்டப்படுது..அவ்வளவுதான் அதுக்கு எதிரா என்ன செய்யலாம்ன்னு
யோசிங்கடா..!! அவரும் நம்ம கூட இறங்கி போராடுவாருன்னு எதிர் பாக்காதீங்க.. அவருக்கு அது பொழைப்பு.. நம்ம பொழப்பு போறத பத்தி அழகா சொல்லிட்டு அடுத்த வேலைய பாக்கப் போயிருவாங்க.

நம்ம பொழப்புக்கு நாமதா தீர்வு தேடிக்கணும்.. உங்களுக்கெல்லாம் விவசாயம் பத்தி பேசுனது நக்கலா இருக்கு. முதுகு வளையலை... ம்ம்ம்ம்ம்...? எல்லாம் maDonald கொழுப்பு மண்டி வளைய விடாம வச்சிருக்கு. சரி... ரொம்ப முயற்சி பண்ணி அவரையே கூட்டிகிட்டு வந்து போராட வச்சோம்னா அவர கிட்ட போய்நின்னு செல்பி எடுத்துகிரதுக்கே எல்லாருக்கும் நேரம் சரியா இருக்கும்.

யாரையாவது நக்கல் பண்ணியும் பெரிய ஆள் ஆகலாம்கிறது ஒரு யுக்தி.. அவ்வளோதான்.! அதையே காலம்பூரா புடிச்சி தொங்கிகிட்டே இருந்தா உங்க பொழப்ப எப்ப பாப்பீங்க...? செய்திய பாருங்க.. முழிச்சிக்கங்க.... இன்னும் காலம் இருக்கு... விவசாயம்னா நெல்லு போட்டு அறுக்கிறது மட்டும் இல்ல... ஆடு மாடு பூ.. பழம்.. இல்லை... காய் கனி... கோழி... நெறைய இருக்கு.. செய்றதுக்கு.. யோசிங்க... branded தேடி போறத விட்டுட்டு ஒரு brand உருவாக்கலாமே... !!!

எத்தன பேரு நான் சொல்ற வரிசையில் இருந்து படிக்கிறீங்கன்னு தெரியலை.. உங்களுக்கு நியாயமா பட்டா பகிருங்க.... இது மாதிரி இருக்கவங்ககிட்ட எடுத்து சொல்லுங்க.... ஏதாவது நல்லது நடக்குதா பாப்போம்...!! நன்றி

எழுதியவர் : தறுதலையான் (24-Oct-14, 7:56 am)
சேர்த்தது : கட்டாரி
பார்வை : 257

சிறந்த கட்டுரைகள்

மேலே