திருமந்திரம்

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே.-திருமூலர்

வேறுபாடின்றி தேவையறிந்து வேண்டுவோர்க்கு கொடுங்கள். அவரிவர் என்று வேறுபாடு காட்டாதீர். வரும் விருந்து பார்த்திருந்து உண்ணுங்கள். பழையதானவற்றை உண்ணாதீர். வேட்கையோடு படபடவென விரைந்து உண்ணாதீர். கரைந்துண்ணும் காகம் போல் காலமறிந்து இருங்கள்.-

எழுதியவர் : சுடரோன் (24-Oct-14, 8:04 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
பார்வை : 815

மேலே