நிரல்யா -4

தன் படபடப்பை மறைத்தவாரே நிரல்யா வேக வேகமாய் கிளம்பினாள்….எப்படி செல்லப்போகிறோம் என்ற எந்த ஒரு முன் யோசனை இன்றி நடப்பது நன்றாய் நடந்தேறும் என்ற நம்பிக்கையில் நேரத்தை வீணடிக்காது வேகமாய் கிளம்பினாள்….



எங்க கிளம்புற நிரல்யா ??? என அவள் அன்னை தடுத்தாள்.......



அய்யோ மாட்டிக்கிட்டோமா !!!! என்று மனதில் முனங்கியவாரே.........................................................................
அதாம்மா ........அது .........வந்து ........ என்று தயங்கி , சட்டென இன்னைக்கு என் பிரெண்ட் வீட்டுக்கு வரேனு சொன்னேன் மறந்தே போய்ட்டேன் அத…………….அவ எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா……..…போய் பாத்துட்டு வரேன் மா…



அது யாரு எனக்கு தெரியாத பிரெண்ட் …. பவி தவிர உனக்கு யாரும் ரொம்ப கிளோஸ் இல்லையே….



ஹ்ம்ம் பாய் பிரெண்ட்….. ஆளப்பாரு… ஹ்ம்ம்…. என்று செல்லமாக தன் அன்னையை கோபித்துக்கொண்டாள்….. என்னையே சந்தேக படுறீங்களா மிஸ்ஸஸ்.சாந்தி….. இது என் புது பிரெண்ட்…. வந்து நா எல்லாம் தெளிவா சொல்லுறேன்…..இப்ப எனக்கு நேரம் இல்ல….டாட்டா என்று தன் அன்னை அடுத்த கேள்வி கேட்பதுக்குள் சிட்டாய் வீட்டை விட்டு பறந்தாள்…..



இந்த பொண்ண திருத்தவே முடியாது !!!!!!!!! என்று புலம்பிய வாரே சாந்தி தன் வேலையை தொடர்ந்தாள்…..



ஓட்டப்பந்தையமா??? இல்லை இது நடைப்பந்தையமா ??? என்று எல்லோரும் தெருவில் அவளையே உற்று நோக்கினர்…. அந்த அளவிற்க்கு மிக வேகமாய் ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி சென்றாள்….



அப்பொழுது ஒரு குரல்……………………………………………………….



ஹலோ நிரல்யா !! நிரல்யா !! என்று இருசக்கரவாகனத்தில் இருந்து அழைத்தது…..



அவள் காதில் விழவில்லை…..



ஆனாலும் அவளை விடாத அக்குரல் , வேகமாய் முந்திக்கொண்டு வந்து , அவள் வேகத்திற்க்கு அணைப்போடுவதாய் நின்றது….



திக்கென்று தூக்கிபோட்டது அவளுக்கு…….பயத்தில் சற்று கூடுதலாய் கத்திவிட்டாள்….. கலங்கிய குட்டை சிறிது நேரத்தில் தெளிவதுப்போல் சில நொடியில் மெல்லமாய் அவள் பயம் நீங்கி , உற்று நோக்கினாள்…..



நோக்கியவளின் பார்வையில் , பார்க்க நல்ல வாட்ட சாட்டமான உடல் தேகத்துடனும் அடர்ந்த முரட்டுத்தனமான காடுகள் போல் , முகம் நிறைந்த தாடியுடன் ஒருவன் அவ்விருசக்கர வாகனத்தில் இருந்தான்…….



யார் நீ ?????? என்று அவள் கண்களே பயத்தில் பேசின அந்த முரட்டு தாடிக்காரனிடம்………



யாராய் இருக்கும் அந்த தாடிக்காரன்???????????? அவன் நல்லவனா ??? கெட்டவனா ???????நிரல்யாவை என்ன செய்யப்போகிறான் ????? அடுத்து என்ன நடக்கும்... ??? ஒரு இண்டர்வியூக்கு போறதுகுள்ள அடுத்த ஒரு புது பிரச்சனையா ??? நிரல்யா என்ன செய்வாள் ???
.
.
.
.
.
.
.
அடுத்தத்தொடரில் பார்ப்போம்……………….

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (25-Oct-14, 8:43 pm)
பார்வை : 244

மேலே