நிரல்யா -5

நிரல்யா போட்ட கூச்சலில் அனைவரும் அங்கு கூடினர்……


என்னமா என்ன பிரச்சன ??? எதுக்கு கத்துன ??? என்று ஒரு நடுத்தரவயதுக்காரர் நிரல்யாவை கேட்க…..
ஒன்னும் இல்ல அங்கிள் நா வேகமா போய்ட்டு இருந்தேன்….திடீர்-னு இந்த பைக்காரன் வேகமா வந்து இப்படி வழிய மறிச்சு நிக்குறான்…..அதான் பயத்துல கத்திட்டேன்…..


என்ன பா தம்பி உடம்பு எப்படி இருக்கு ??? பாத்து வரமாட்டீயா…. ஒரு அழகான பொண்ணு ரோட்டுல போய்டக்கூடாதே…உங்க ஹீரோயிசம் காட்ட இதான் இடமா ???? உனக்குலாம் அக்கா தங்கச்சி இல்லயா ???? உன்னமாறி ஆளலாம் புடிச்சு ஜெயில்ல போடனும்…..


தாடிக்காரனுக்கு சுர்ரென்று தலைக்கு கோபம் ஏற வார்த்தைகள் தீப்பிழம்பையாய் கக்க ஆயத்தமானான்…..


யோவ் நிறுத்துயா….என்ன சும்மா நீ வாட்டுக்கு பேசிட்டே போற….என்ன நடந்துச்சுனு தெரியுமா உனக்கு….வந்துட்டான் நியாயம் பேச… என்றவன் சட்டென நிரல்யாவின் பக்கம் திரும்பி ஏங்க இப்ப உங்கள என்ன பண்ணிட்டேனு கத்துனீங்க… கையபுடிச்சேனா இல்ல வேற எதும் பண்ணேணா……. பாருங்க நீஙக போட்ட கூச்சல்-ல எல்லாரும் என்ன வில்லன் ஆக்கிட்டாங்க…..புடிங்க இத குடுக்கதான் உங்கள ஓவர் டேக் பண்ணி வந்தேன்……..கூட்டத்தில் இருந்த எல்லோரும் அவன் கையில் என்ன இருக்கிறது என்று ஆவலாய் பார்த்தனர்….


அட ATM card என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் சொல்ல……


வேகமாய் தாடிக்காரன் நிரல்யாவை நோக்கி நா டீக்கடை-ல டீ குடிச்சுட்டு இருந்தேன்….அப்ப இந்த பொண்ணு வேகமா போகும் போது அவ பர்ஸ்-ல இருந்து ஒரு கார்ட் கீழ விழுந்துச்சு….என்னான்னு கிட்டப்போய் பார்த்தா அது ATM card...முக்கியமான கார்ட் கீழ விழுந்தது கூட தெரியாம ஸ்பீடா போச்சு……. சரி போய் குடுக்கலாம்-னு கூப்ட்டா நா கூப்பிட்டது கூட கேக்காம ஜெட் வேகத்துல போயிட்டே இருந்தா….அதான் பைக்ல வந்து ஓவர் டேக் பண்ணேண்….. உடனே அந்த பொண்ணு கத்த நா உங்க எல்லார் கண்ணுக்கும் வில்லன் ஆகிட்டேன்…..


ஹி ஹி சாரி தம்பி அவசரத்துல தப்பா நினச்சு கொஞ்சம் ஓவரா திட்டிட்டேன்….. என சொல்லிக்கொண்டு வழிந்த வண்ணம் மன்னிப்பு கேட்டார் அந்த நடுத்தரவயதுக்காரர்…….


கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவரா தான் பேசிட்டயா….….ஆமா அதென்ன எப்ப பாத்தாலும் என் வயசு பசங்களயே தப்பா நினைக்குறீங்க….ஏன் நாங்க மட்டுமா தப்பு பண்ணுறோம்….ஏன் உங்க வயசுக்காரங்க , வயசான பொக்கவாய் தாத்தா , ஏன் பெத்த அப்பாக்கூட இப்பலாம் தப்பு பண்ணுறாங்க….அவுங்கள-லாம் விட்டுட்டு எப்ப பாத்தாலும் ஏய்யா எங்கலயே குறிவச்சு திட்டுறீங்க…. எங்களுக்கும் குடும்பம் இருக்கு….அக்கா தங்கச்சி – லாம் இருக்காங்க….அத நீங்க அடிக்கடி சொல்லிகாட்ட வேண்டாம்………நாங்களும் பொறுப்பாதான் இருப்போம்…. ஏன் உங்க மனசதொட்டு சொல்லுங்க உங்க வயசுல நீங்க எங்களமாறி எந்த சேட்டையும் பண்ணாமலா வந்தீங்க…..இப்ப-லா எங்களமாறி பசங்க கூடப்பரவால …. ஆனா உங்கள மாறி ஆளுங்க லூட்டி தான் தாங்கமுடியல………போய் பஸ்-ல பாருங்க…அப்ப தெரியும்….அப்பறம் வந்து எங்களப்பத்தி பேசுங்க….லுக் தப்பு பண்றவன்னா இப்படி பப்ளிக்-ல வச்சு எதும் பண்ணமாட்டான்…. பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசு….புரியுதா…… என பட்டாசாய் வார்த்தகளில் வெடித்தான்…..


எல்லோரும் சொல்வதறியாது முழித்தனர்……….


அப்பொழுது அந்த நடுத்தரவௌதுக்காரர் ஏம்மா அந்த தம்பி என்ன சொல்லுது-னு தெரியுறதுக்கு முன்னாடியே கத்தி கலாட்டா பண்ணிட்டீயே…..உன்னால காலை-ல எனக்கும் திட்டு பாரு என்று கோபப்பட்டார்…..


நிரல்யா மெளனமாய் இருந்தாள்….அதை ஆமோதிப்பதுப்போல்


யோவ் நிறுத்து என்று தாடிக்காரன் இடைமறிக்க , நீ என்ன வெட்டிப்பஞ்சாய்த்து பண்ணவே வீட்ல இருந்து கிளம்பி இருக்கீயா என்ன ??? உனக்கு வேலை வெட்டியே இல்லையா ??? முதல்ல என்ன திட்டுன…இப்ப இந்த பொண்ணா…. திடீர்னு ஒரு பைக் வந்து குறுக்க நின்னா அதும் என்னமாறி வில்லன் கெட்டப்-ல முரட்டுதனமா இருக்குற ஒரு பையன பாத்த எந்த பொண்ணும் கத்ததான் செய்யும்….நீ வந்து ஓவரா பேசப்போய் தான் நான் உன்ன திட்டுனேன்…. தப்பு உன் மேல , எதுக்கு அந்த பொண்ண திட்டுற…இப்ப டைம் வேற வேஸ்ட் ஆகிட்டு இருக்கு….கிளம்பு கிளம்பு முதல்ல காத்து வரட்டும்….. என்று திட்டினான்…..


இன்னைக்கு யார் மூஞ்சுல முழிச்சேனோ தெரியல……. என்று புலம்பியவாரே அந்த நடுத்தரவயதுக்காரர் விட்டா போதும்-னு போய்விட்டார்…..அனைவரும் அவ்விடத்தை விட்டு கலைந்தனர்......


நிரல்யாவிற்க்கு வார்த்தைகளே வரவில்லை….. சாரி அண்ட் தாங்க்ஸ் என்று தயங்கிக்கொண்டே சொன்னாள்……..


ஹ்ம்ம்… பரவால்லங்க…இனியாவது பாத்து போங்க….ATM card தொலைச்சா இன்னொன்னு கிடைக்கும்…ஆனா அந்த கார்ட் மறுபடியும் வாங்குறதுக்குள்ள நாம படுறபாடு இருக்கே அய்யய்யோ அத சொல்லி மாளாது… நம்மல நாய் மாறி அலையவிடுவாங்க…பெரிய கலெக்டர் உத்யோகம் பாக்குறமாரி ஓவர் சீன்-னா நமக்கு கண்ட எருமைலாம் அட்வைஸ் பண்ணுறே-னு பேர்-ல மொக்கப்போடுவாங்க…அதும் உங்கள மாறி பொண்ணுங்கனா கேக்கவே வேணாம்…ஓவரா அசடு வழிவாங்க...இதெல்லாம் தேவையா.. ??? ஆமா அப்படி எங்க இவ்வளவு வேகமா போறீங்க கார்டு விழுறதுக்கூட தெரியாமா…..


நீங்க குடுத்த அட்வைஸ்க்கும் , கார்ட் குடுத்ததுக்கும் ரொம்ப தாங்க்ஸ்-க…. இப்ப என்கிட்ட பேசக்கூட நேரம் இல்ல… ரொம்ப நன்றி என்று கூறி மறுபதில் கூட எதிர்பாராமல் நிரல்யா ஆட்டோ ஏறி சென்றாள்…..


“ என்னப்பொண்ணு இவ ” எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கேன் …கொஞ்சம் சிரிச்சிட்டு தாங்க்ஸ் சொன்னா என்னவாம்…. நின்னுக்கூட தாங்க்ஸ் சொல்ல-ல….ஹ்ம்ம் நம்மல மாறி பாங்க்-ல ATM card வாங்க நாலுவாட்டி அலஞ்சா தான் தெரியும் நம்ம பண்ணுண ஹெல்போட அருமை….சரி விடுடா நிரஞ்சன் நீ எப்பவும் கிரேட் தான்…. கடமையை செய் பலனை எதிர்பாக்காதே என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு வேகமாகச்சென்றான்…..


நிரல்யா இண்டர்வியூ முடித்து பெரும் புன்னைகையுடன் வெளியே வந்தாள்…..முதலில் அவள் பவி என்ற
பெயரை அமுத்தி அலைப்பேசிக்கு உயிர்கொடுத்தாள்…..மறுமுனையில் பவி….


ஹாய் நிரல் கங்ராட்ஸ் டி செல்லம்…..


ஹே லூசு… என்ன போன் பண்ணதும் விஷ் பண்ணுற….எதுக்கு ??? என்று புன்னைகையுடன் கேட்டாள் நிரல்யா


வேற எதுக்கு உனக்கு ஜாப் கிடச்சதுக்கு தான்…..


ஹே எப்படி பவி….கரெக்டா சொல்லுற….. எப்படி டி….???


நாதான் உன் ஜோடிப்புறா ஆச்சே!!!!!!……பின்ன கரெக்டா இதக்கூட சொல்ல-லனா எப்படி ??? ஹா ஹா …… என்று புன்னகைத்தாள்…….உன்ன பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா நிரல்??? இண்டர்வியூ-ல பேசியே கவுத்தி இருப்ப நீ….படிப்பு-லையும் முதல்ல…பேச்சும் சும்மா பட்டாசு… பின்ன எவன் வேலை தரமாட்டான் சொல்லு ….. எனக்கு தெரியும் கண்டிப்பா உனக்கு அந்த வேலைகிடைக்கும்-னு…. நீ அந்த வேலைக்கு தகுதியானவ நிரல்…..


சரி சரி….. ரொம்ப ஐஸ் வைக்காத டி…. டீரிட் தரேன்…அதுக்கு தானே இவ்வளவு பிட் போடுற நீ….


ஹா ஹா நீ திருந்தவே மாட்ட டி….சரி நா நாளைக்கு நேர்-ல வந்து உன்கிட்ட நிறைய பேசுறேன்…. இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன் நிரல்….


சரிங்க மேடம் நாளைக்கு வாங்க…நானும் இன்னைக்கு நடந்த எல்லாத்தையும் பத்தி உங்ககிட்ட பேசனும்…..சரி டியர் டேக் கேர் என்று அலைப்பேசியை துண்டித்தாள்……


மறுநொடியில் நிரல்யாவின் அலைப்பேசி அவளை அழைத்தது…..அம்மா காலிங்க் என்று…..


ஹெலோ அம்மா உனக்கு ஒரு குட் நியூஸ்….. என நிரல்யா கூற


அப்படியா!!!!!! என்ன நிரல்யா அது ???….. நானும் ஒரு குட் நியூஸ் வச்சு இருக்கேன் டி உனக்கு…..


அப்படியா அப்ப நீ முதல்ல சொல்லுமா…. என்று நிரல்யா அடம்பிடித்தாள்


இல்ல நீ முதல்ல சொல்லு…. என அவள் அன்னையும் முரண்டு பிடிக்க


சரி ரெண்டு பேரும் சொல்லவேண்டாம் நானே வீட்டுக்கு வந்து சொல்லிட்டு இன்னொரு குட் நியூஸ்-ம் தெரிஞ்சுக்குறேன் மா….


சரி சீக்கிரம் வா….நீ அப்படியே ஷாக் ஆகிடுவா நிரல்யா!!!!!….சீக்கிரம் வா !!!வீட்டுக்கு என அவள் அம்மா அலைப்பேசியை துண்டித்தாள்….


நிரல்யா என்ன குட் நியூஸ்-ஸா இருக்கும்-னு யோசிச்சுட்டே நேராக இனிப்பு வாங்க கடைக்கு சென்றாள்……



என்ன அந்த குட் நியூஸ் ????? அது இன்ப ஷாக்கா ??? இல்ல துன்ப ஷாக்கா ???? எவ்வளவு வோல்ட் நிரல்யா மீது பாயப்போதோ தெரியல.....
.
.
.
.
.
அத அடுத்தப்பகுதியில் பார்ப்போம் ……

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (26-Oct-14, 5:23 pm)
பார்வை : 314

மேலே