சங்க இலக்கியங்களில் தொல்தமிழ் பழங்குடிகளின் சடங்கு முறைகள்

உலகம் முழுவதும் ஆதிகாலத்தில் இனக்குழு சமூக அமைப்பே நிலவியது. இது உலகளாவிய தன்மையில் இருந்தது. வேட்டைச்சமூக நிலையை வேளாண்மையே மாற்றமடையச் செய்தது. இனக்குழு அமைப்பில் இருந்துதான் மனிதக்கூட்டம் வேறு பரிணாமத்தை எட்டியது.இந்திய சமூக கட்டமைப்பு வட, தென் முனைகளாக பிரிந்திருந்தது. தென் இந்தியச்சமூகம் தமிழ்பேசும் மக்கள் கூட்டமாய் இருந்தபோதும் இனக்குழு அமைப்புகள் சில இருந்தன. "ஆதிச்சமூக அமைப்பாக இனக்குழுக்கள் நிலவின.இனக்குழுக்கள் திணைகளின் அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டிருந்தன.சங்க காலத்திலும் சங்க முற்காலத்திலும் இனக்குழு வாழ்க்கை தமிழகத்தில் நிலவி வந்தது." (கா.சுப்பிரமணியம்,சங்ககாலச் சமுதாயம்,ப.9)

எழுதியவர் : VIMALRAJ (26-Oct-14, 7:19 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
பார்வை : 172

சிறந்த கட்டுரைகள்

மேலே