அரசியல் பேய்கள்

அரசியல் பேய்கள்

1947 ஆம் ஆண்டு உலகச் சரித்திரத்தில் முக்கியமான நிகழ்வு இந்தியா,பாகிஸ்தானின் விடுதலை.அன்று தொடங்கிய கஷ்மீர் எல்லைப் பிரச்னை 65 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை.ஒரு நாடு தன் எல்லையை விடுத்து மற்றொரு நாட்டின் பகுதியை உரிமை கொண்டாடுவது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்கும்.இதற்கெல்லாம் ஒரு படி மேல போய் நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவிற்குள் திவிரவாதத்தை ஏவுவது,மதம் என்னும் பெயரில் காஷ்மீர் முஸ்லிம் மக்களின் மனதில் நஞ்சை விதைப்பது,எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவது போன்ற இழி செயல்களைச் செய்து வருகிறது.

இப்பொது அதுமீறலின் உச்சத்தை எட்டியுள்ளது.எல்லைப்புற மக்கள் முப்பதயிரதிற்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர்.இதற்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கையை எடுப்பதைத் தவிர்த்து நம் அரசியல் தலைவர்கள் ஒருவர் ஒருவர் மாற்றி ஒருவர் குறைச் சொல்லிக்கொண்டிருகின்றனர். ஏன் ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூட பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை??மத்திய அரசை சாடுவது மட்டும் தான் இவர்கள் வேலையா?நம் நட்டின் அரசோ பேச்சில் மட்டும் வீரம் காட்டிக்கொண்டிருக்கிறது.இப்படிபட்ட நிலைமையில் பாதிகப்பட்ட மக்களைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை.அரசியல் பிழைப்பு நடத்துவதையே அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக வைத்திருக்கும் இவர்களை அரசியல் பேய்கள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது????

எழுதியவர் : விஷ்ணு பிரதீப் (29-Oct-14, 9:54 pm)
சேர்த்தது : விஷ்ணு பிரதீப்
Tanglish : arasiyal peigal
பார்வை : 111

சிறந்த கட்டுரைகள்

மேலே