இவர்கள் திருந்தமாட்டார்களா

மிகவும் சக்தி வாய்ந்த ஊடகமாக கருதப்படும் சினிமா,பல நிலைகளில் தற்போது தடுமாறி வருகிறது.பதினெட்டு வயது கூட அடையாத பெண் குழந்தைகளைத் திரையில் கதாநாயகிகளாகக் காட்டி அவர்கள் வாழ்வை சீரழித்து வருகிறது.வாழ்க்கை என்பது என்னவென்று தெரியாத பருவத்தில் திருமணம் தண்டனைக்குரிய குற்றம் என்று நம் சட்டம் சொல்கிறது.தன் குழந்தை பருமடைந்த ஒரே காரணத்தினால் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகள் என்றால், பணத்திற்காக தன் குழந்தையை ஆபாசமாக நடிக்க வைக்கும் பெற்றோர்களும் அப்படிதானே,அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது.இது பாலியல் வன்கொடுமையிலும் வன்மையானது.நம் சமூகத்தின் இழிநிலை இது.

பெண்களின் முன்னேற்றம்,சுதந்திரத்திற்காக போராடுவதாய்ச் சொல்லிக்கொள்ளும் அமைப்புகள், சங்கங்கள்,அரசியல் தலைவர்கள் ஏன் இந்த இழிநிலைக்கு எதிராக வாய்திறக்க மறுக்கிறார்கள்????

எழுதியவர் : விஷ்ணு பிரதீப் (29-Oct-14, 9:56 pm)
சேர்த்தது : விஷ்ணு பிரதீப்
பார்வை : 227

மேலே