கடலோடு சில நிமிடங்கள்-----------நிஷா

கருநீல நிறம் கொண்டு என்
கண்ணுக்குள் சிரிக்கின்றாய்....
கண்ணீரின் சுவை கொண்ட நீ என்
கால் தழுவி செல்கின்றாய்....

எத்தனை முறை வந்துபோகிறாய்
என்னருகினிலே.....
எத்தனை முறை தொட்டு போகிறாய்
என் கால்களையே...

ஓய்வென்று நீ எடுத்ததில்லை
ஒரு நொடி கூட. ...
ஓசையோடு ஆசையாய் வந்து
ஓடியாடி விளையாடுகிறாய்...

மட்டி பிடிக்கும் மழலையர்க்கும்
குட்டி குட்டி குழந்தைகளுக்கும்
உனை ஒட்டி வரும் அனைவருக்கும்
ஊஞ்சலாகிப் போகிறாய்......

ஓங்கி உயர்ந்த பனைமரத்தை உன்
சுனாமி அலையால் ஜெயித்திட்டாய்
எட்டி நிற்கும் ஒட மரத்தை உன்
சுவாசக்காற்றால் தாலாட்டுகிறாய்...

உன் கரையோர மண் தொட்டு
நடந்திட்டால்...
ஊனமான கால் கூட உடன்
ஊக்கம் பெற்று நடக்குமாமே....


உலகின் அதிசயங்கள் ஒவ்வொன்றும்
உள்ளடக்கி வைத்துள்ளாய்..
ஓயாத அலைகளிலே நீ உள்ளத்தை
கொள்ளை கொள்கிறாய்...

திமிங்கலமும் உன் கூட
சிரித்துத்தான் பேசிடுமே
ஆங்காங்கே சிறு மீன்கள் உனக்குள்
துள்ளித் துள்ளிக் குதித்திடுமே...

உன்னழகை காண்பதற்கு என்
இருகண்கள் போதவில்லை...
உன்னழகை வர்ணிக்க
உவமையேதும் எனக்கில்லை...

எழுதியவர் : நிஷா (30-Oct-14, 7:32 am)
பார்வை : 276

மேலே