ஆதங்கம் - ஒரு பக்க கதை

தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது ரகுராமனுக்கு.
மீனா..அது மீனாவேதான். எத்தனை காலமாயிற்று
பார்த்து. காதல் பரவசத்தில் உருகி உருகி திரிந்தது
எல்லாம் மனதில்நினைவு வர, லேசாக வியர்த்தது.
-
ஏங்காவது மறைந்து கொள்ளலாமா என்று
நினைப்பதற்குள் அவளும் கவனித்து விட்டாள்.
-
மெல்ல அருகில் வந்தவள், 'எப்படியிருக்கீங்க?' என்றாள்
இயல்பாக.
-
ம். ஏதோ இருக்கேன். எத்தனை வருஷமாச்சு!
நல்லாருக்கியா மீனா' எனும்போது ஒரு பைக்
சர்ரென்று வந்து நின்றது. அதிலிருந்த இளைஞன் '' ஏறுங்க'
என்றான் மீனாவைப் பார்த்து.
-
யாரது மீனா?
-
இதுவா! இவன்தான் என் செல்லப்பேரன். கொஞ்ச
நேரம்கூட காலாற நடக்க விடமாட்டான். உடனே பைக்
எடுத்துகிட்டு வந்திருவான். என் மேல் கொள்ளை
பிரியம், வரட்டுமா! என்று வண்டியில் ஏறிக்கொண்டாள்.
-
மீனாட்சி கொடுத்து வைத்தவள். நம் பேரன் ஒரு
முறையாவது இப்படி வண்டியில் கூட்டிப் போயிருப்பானா?
என்று மனதில் நினைத்துக்கொண்டு, மெல்ல நடக்க
ஆரம்பித்தார் ரகுராமன்.
-
--------------------------------------
>ஜி.சசிகுமார்
நன்றி: குமுதம்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (30-Oct-14, 11:59 am)
பார்வை : 152

மேலே