வீட்டோட மாப்பிள்ளையா,,,

ஏன் டாக்டர், ஆபரேசனை பாதியிலிலேயே விட்டுட்டீங்க.?
-
நான் எங்கே விட்டேன்… பேஷன்ட்தான் பாதியிலேயே
விட்டுட்டுப் போயிட்டார்…!
-
————————————————-
-
விசாரணை அதிகாரி வடிவேலு ரசிகர் போலங்குறியே…
ஏன்?
-
பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மென்ட் வீக்’னு ரிப்போர்ட்
கொடுத்திருக்கிறாரே…!
-
—————————————————
-
நீங்க சொன்னது போல வீட்டோட மாப்பிள்ளையா
இருக்க எங்க பையனுக்கு சம்மதம்…
அதே மாதிரி
வீட்டோட மாமனார், மாமியாரா இருக்க எங்களுக்கும்
சம்மதம்தான்..! உங்களுக்கு ஓ.கே.வா…?
-
———————————————–
-
கபாலிக்கு ரொம்ப பயந்த சுபாவம்…!
-
எப்படி சொல்றே?
-
வீட்ல பால் காய்ச்சுனாக்கூட, போலிஸூக்கு மாமூல்
கொடுக்கிறான்..!
-
—————————————————
-
அரண்மனை வைத்தியர் திடீரென்று போர்…போர்..என
ஏன் கத்துகிறார்…?
-
மன்னருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விக்கலை
நிறுத்த முயற்சிக்கிறாராம்…!
-
================================================
நன்றி: ஆனந்த விகடன்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (30-Oct-14, 2:36 pm)
பார்வை : 194

மேலே