சிலாகிப்பு

பழுதடைந்துவிட்டது பழைய மின்விசிறி !
புதியதாய் மாற்றிக்கொள்ள முடிவு !
என்றாலும் ஒரு நெருடல் !
அது அழகாய் இருக்கிறது,
என்று சொன்னாயே ஒரு நாள் !
அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும்,
மனதில் மாறாது தந்தியடிக்க !
எப்படி கழற்றுவேன் அதை சுழலாதபோதும்?
விடு இருக்கட்டும் உத்தரத்தில்,
காற்றில்லாவிட்டாலென்ன காதலிருக்கிறதே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Oct-14, 7:26 pm)
பார்வை : 57

மேலே