கருப்பு வெள்ளை

குரு ; ஏண்டா ?சோகமா இருக்க?

ரகு; நேற்று சினிமாவுக்கு போனேண்டா ரொம்ப வேதனையா இருக்குடா

குரு;ஏன் ?என்னாச்சுடா ?

ரகு; பிரபல நிறுவனம் ... அவங்க தியேட்டர்ல படம் பார்த்தேண்டா ? டிக்கெட் 120 ரூபாய் கொடுத்து ....அதான் வேதனையா இருக்கு

குரு; அநியாயமா இருக்கு விலை ஏத்திட்டான்களா ?

ரகு; இல்லடா ....போய் படம் பார்த்தேன்.. படம் முடியும் போது ஒரு சிலருக்கு மட்டும் டிக்கெட் கொடுத்தாங்க எனக்கும் சேர்த்து....இருட்டுல தெரில...வெளியில வந்து பார்த்தேன் ஒரே ஷாக்...

குரு; என்னாச்சு?

ரகு; டிக்கெட் 50 ரூபாய் போட்டுருக்கு

குரு அப்போ 120 ரூபாய்க்கு டிக்கெட் தரலையா?

ரகு; கம்ப்யூட்டர் பில் டா

குரு; அடக் கடவுளே!

ரகு; என்ன இளிச்சவாயன் நினைச்சுட்டாங்க போல ....இதுக்கு பேர்தான் கருப்பை வெள்ளையாக்குறதா?

குரு; இல்லடா ? கருப்பு மேல வெள்ளை அடிச்சிருக்காங்கடா..... ?ஹா ஹா ஹா

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (31-Oct-14, 7:43 am)
Tanglish : karuppu vellai
பார்வை : 172

மேலே