துயர் தீர்க்கும் தோழமை

அவள் ..
துயரத்தில் துவண்டிருந்தாள்
அவளுக்காய்…
மனமுருகி துதி செய்தேன் !
அவள் விதி நொந்து அழுதிருந்தாள் ,
அனைத்தும் செவிமடுத்தேன்.
அவளையே பார்த்திருந்து, காத்திருந்தேன்!
என் விழிகளை நோக்கி..
பின்னும் கலக்கமுற்றாள் !!
சில சொற்கள் வாயுதிர்த்து
ஆறுதல் சொன்னேன் ,
அதற்கும் சிறு முறுவல்தான்….
ஆறவில்லை அவள் !
நீர் கொணர்ந்து, அருகில் சென்று,
கைகளினால் அருகமர்த்தி ,
பருகவைத்தும் …. பயனில்லை!!

இப்படி இவள் கலங்குவதை
இன்றுதானே பார்க்கிறேன்!!
எப்படி சரி செய்வது??
புரியாத சிந்தனையில் எழுந்தபோது….
மெலிதாக, என் தோள்அழுத்தி.. அமரவைத்தாள்..
நானும்…. தோள் கொடுத்து, கண் துடைத்தேன் !

என்ன அதிசயம் !!!!
அழுகை, விசும்பலானது !
விசும்பல், கேவலானது !!

செவி முதல் கால்கள் வரை
எதை ஈடாய் தந்த போதும்
அடங்காத அவள் துயரம்…
தோள் தந்த மறு நிமிடம்..
மறைந்த இடம் தெரியவில்லை…. ! !

அப்போதுதான் ….
அறைந்ததுபோல் புரிந்தது !!
என்றென்றும் துயரம் தீர்ப்பது
தோள் கொடுக்கும் தோழமைதான் என்று !!!

எழுதியவர் : Malinibalaji (31-Oct-14, 3:03 pm)
பார்வை : 462

மேலே