ராஜா ராணி -2

சென்னை் விநாயகம் வீட்டில்்:் "அதென்னவோ தெரியலை வைதேகி(மீராவின் அத்தை), ஆனால் கொஞ்சம் பயமாக தான் இருக்கு...

எதுக்குடி

கிருஷ்ணாவுக்கு வயசாகுதல ஒரு நல்ல பொண்ணா, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணாஅவனுக்கு அமைஞ்சா நல்லா இருக்கும் என்று கூறியது நம் ஹீரோவோட அம்மாவும்,வைதேகியின் நெருங்கிய தோழியுமா சகுந்தலா.

”“அதெல்லாம் நீ கவலைப்படாதே, சகு(சகுந்தலா) எல்லாம் நல்லபடியா நடக்கும்... உன் நல்ல மனசுக்குநல்ல மருமகள் கிடைப்பாள்...

”“ஆமாம் மீராவுடைய தங்கை எப்படி இருக்கா?

அமுதாவா? நல்லா இருக்கா சகு... இப்போ மூணாவது மாசம்...

”“ஓ! அப்படியா? அவள் பேமிலி எப்படி?

”“அவங்களும் நல்லவங்க தான்... எனக்கு கவலை எல்லாம் மீராவை நினைச்சு தான்! இன்னும் எத்தனை நாள் அவள் இப்படியே இருக்க முடியும்?

”“ஏன் இப்படியே இருக்கனும்? இவ்வளவு நாள் தான் அது செய்யனும் இது செய்யனும்னு சாக்கு போக்கு சொல்லிட்டு இருந்தா, இனி மேல் என்ன? அது தான் எல்லோரையும் நல்ல விதமா செட்டில் பண்ணியாச்சே?

”“ஏதாவது சொன்னால் கேட்டால் தானே? கல்யாணத்தை பத்தி பேச்சை எடுத்தாலே அமைதியாகிடுறா! நாங்க இருக்கும் வரை பரவாயில்லை, எங்களுக்கு அப்புறம், அவளுக்கு யார் இருக்கிறது?

”“ச்சேச்சே, இதெல்லாம் என்ன பேச்சு வைதேகி? நீ கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா சொல்லு..

“நானும் எப்படி எப்படி எல்லாமோ கேட்டு பார்த்துட்டேன்... ஹுஹும், ஒருமுன்னேற்றமும் இல்லை...

”“அப்படி எப்படி கேட்டீட? என்னோட பேசாதேன்னு சொன்னீயா? என்னை உயிரோடு பார்க்க முடியாதுன்னு சொன்னீயா?

”வைதேகி திகைத்து போய் பார்த்தாள்.

“என்ன வைதேகி அப்படி பார்க்குற? எத்தனை படம், சீரியல் பார்க்கிறோம்... இது தானே ஸ்டண்டர்டா பசங்களை மிரட்ட சொல்லும் வசனம்?

”“ம்ம்ம்...

”“மீரா கொஞ்சம் சென்டிமென்ட்டல் டைப்... இப்படி எல்லாம் சொன்னால் கட்டாயம் கேட்பாள்... இந்த தடவை கட் அண்ட் ரைட்டா பேசிடு... அவள் கேட்கலைன்னா ஒரு இரண்டு நாள் பேசாமலும் இரு...

”“பேசாமலா?”“

ஆமாம் வைதேகி, உங்க மருமகள் சந்தோஷமா வாழனுமா வேண்டாமா?

”“இது என்ன கேள்வி சகுந்தலா், அவள் சந்தோஷமா, நீடூழி வாழனும்...

”“அடுத்த தடவை வரும் போது மீரா போட்டோ ஓன்னு கொடு டி... நானும் தெரிந்தவர்களிடம் சொல்லி வைப்பேன் ல...

”“அடுத்த தடவை என்ன இப்போவே தரேன்்..

பையில் இருந்து வைதேகி எடுத்து கொடுத்த போட்டோவை வாங்கி பார்த்த சகுந்தாலாவின் மனம் கனிந்தது. எத்தனை சிம்பிளாக இருக்கிறாள்! ஆனால் அதிலும் களையாக இருக்கிறாள்!

“ஏங்க, இது தான் மீரா போட்டோ... பத்திரமா வைங்க, நல்ல பையனா யாரவது இருந்தால் பார்ப்போம்...” என போட்டோவை கணவரிடம் கொடுத்தாள் சகுந்தலா்.

திங்கள்கிழமை:

சென்னை ஏர்போர்ட்டில்,விநாயகம், சகுந்தலா், ஜானு மூவரும், வழி மேல் விழி வைத்து கிருஷ்ணாவின்் வருவதற்காக காத்திருந்தனர்... “அம்மா, அம்மா, அண்ணா வந்தாச்சு... அதோ கிரே டி-ஷர்ட்...”ஜானு காட்டிய திசையில் பார்த்த சகுந்தலாவிற்கு இதயமே நின்று போனது போல் இருந்தது...அங்கே கிருஷ்ணாவுடன் பேசியப்படி, ஒரு வெளிநாட்டு இளம்பெண் நடந்து வந்துக் கொண்டிருந்தாள். சகுந்தலாவிற்குபல நாட்களாகவே எங்கே அவளுடைய ஒரே மகன், வெளிநாட்டில் இருந்து யாரையேனும் அழைத்து வந்து இவள் தான் மருமகள் என்று சொல்லி விடுவானோ என்ற பயம் இருந்தது...அதற்கேற்றார் போல் அவனும், ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வருவதை பார்த்து அவளுக்கு மயக்கமே வந்தது...

“அம்மா! அப்பா! ஜானு...” ஆனந்த கூச்சலோடுவந்தவன்,

“ஹை லிட்டா, மீட் மை பேரெண்ட்ஸ் அண்ட் சிஸ்டர்....” என்று கூட வந்தவளுக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.

“இவங்க பெயர் லிட்டா, நம்ம தமிழ்நாட்டை சுற்றி பார்த்து, அதை பற்றி அவங்க பத்திரிக்கையில் கட்டுரை எழுத வந்திருக்காங்க...”அதை கேட்ட பிறகு தான் சகுந்தலாவிற்கு இயல்பாக மூச்சு விட முடிந்தது...

மறுநாள் அதிகாலை:
கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசாதூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்மங்கிய ஒளி... எங்கேயோ சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது...

அழகாக சேலை அணிந்து அவள் நடந்து வந்தாள்... அவளின் கொலுசொலி அவனின் காதுகளுக்குஇன்னிசையாக ஒலித்தது... கண்களை திறந்து பார்த்தான்... தலைக்கு குளித்து, ஈரமாக இருந்த நீண்ட கூந்தலை, வெண்ணிற டவலில் கட்டி வைத்திருந்தாள் அவள்... அவன் இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தான்...மனக் கண்ணில் கண்ட காட்சி கலைந்து எழுந்தான் கிருஷ்... அவ்வப்போது அவன் விழித்துக் கொண்டே காணும் கனவு அது!

ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வைக்கனும்...” சொன்ன விநாயகத்தின் கண்கள் தானாக மேஜை மீது இருந்த மீராவின் போட்டோவின் மீது பதிந்தது.அவரின் பார்வையை தொடர்ந்து பார்த்த சகுந்தலா், அந்த போட்டோவில் தெரிந்த மீராவின் முகத்தையே ஒரு சில வினாடிகள் பார்த்தாள்...

“ஏங்க, நான் ஓன்னு சொல்வேன் தப்பா நினைக்க மாட்டீங்களே?

”“சொல்லுமா, இது என்ன கேள்வி?

”“மீராவையே கிருஷ்க்கு கல்யாணம் செய்து வைத்தால் என்ன?

”விநாயகம் திகைத்து போய் மனைவியை பார்த்தார்.

“என்னங்க இப்படி ஷாக் ஆகுறீங்க? மீராவை பத்தி நமக்கு தெரியுமே... ரொம்ப நல்லபொண்ணு...

”“சகு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! என் மனசிலேயும் இந்தஎண்ணம் இருந்தது... நமக்கு இருப்பதோ ஒரே பையன் அவனுக்கு நீ... இதுக்கு சம்மதிப்பீயோ என்னவோன்னு சந்தேகமா இருந்தது....

”“இவ்வளவு தானா உங்களுக்கு என்னை பத்தி தெரிந்தது...

”“இல்லைம்மா... உன் மனசு தங்கம் எனக்கு தெரியும். ஆனால் சொந்தமகனுக்கு ஒரு விதவையை...

”“ப்ளீஸ்ங்க இப்படி எதையாவது பேசாதீங்க. மத்தவங்களை போல் இல்லையே நாம்... நமக்கு எல்லா விபரமும் தெரியும்...

”ஓர் ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றிய விநாயகம்,“அதென்னவோ சரி தான்... ஆனால் கிருஷ் இதுக்கு சம்மதிக்கனுமே?

”“அதை பத்தி நீங்க கவலையே படவேண்டாம்... நான் பார்த்துக்குறேன்...

”“சகுந்தலா கிருஷ்ணாவிடம் எத்தனைநாள் லீவு் கிருஷ்.

மூனுமாசத்தில மறுபடியும் U.k போகனும் அம்மா.

கிளம்புவதா இருந்தால் கிளம்பு, ஆனால் தனியா இல்லை, கல்யாணம் செய்துகிட்டு மனைவியோட போ..

.”“அப்பாடியோ, ஒரு வழியா எனக்கு 29 வயசாச்சு என்பது உங்களுக்கும் தெரிஞ்சு கல்யாண பேச்சை ஆரம்பிச்சீங்களே!

டேய் ,மூணு வருஷம் முன்பே கேட்டேன், நீதானே திரும்ப வந்தப்புறம் பார்க்கலாம்னு சொன்ன?

”“அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு சொல்வது உடனே மூணு வருஷம் கேட்காமல் அப்படியே அமைதியா இருப்பீங்களா?

”“சரி அதை விடு... உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்...

”“உங்களுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு தான் வேணும்... என்னை பத்தி உங்களை விட வேற யாருக்கு தெரியும்..

.”“எனக்கு பிடிச்ச ஒரு பொண்ணு இருக்கா... ஆனால்...

”“ஆனால் என்னம்மா... உங்களுக்குபிடிச்சா எனக்கு ஓகே! கட்டுடாதாலியைன்னு சொன்னால் நான் பாட்டுக்கு கட்ட போறேன்...

”“...”“

என்னம்மா இப்படி பார்க்குறீங்க?

”“பாவம்டா நீ, இப்படியா கல்யாணத்துக்கு ஏங்கி போய் இருந்த?

”“போங்க அம்மா! எனக்கு வெட்கம் வெட்கமா வருது...” என்று வெட்கப் படுவது போல் கிருஷ்் பாவனை செய்யவும், சகுந்தலாவின் முகம் பூவாக மலர்ந்தது. அதை பார்த்து கிருஷ்ணாவின் முகமும் மலர்ந்தது.

இந்த போட்டோவை பாரு கிருஷ்...

”போட்டோவை வாங்கி பார்த்தவன், அதில் சிம்பிளாக தெரிந்தவளை, தன் மூளையில் இருந்த போட்டோஷாப் (photoshop) கொண்டு அவசரமாக அலங்கரித்து பார்த்தான்... தலையை சற்று தளர்த்தி பின்னி, அழகாக பொட்டு இட்டு, தலையில் மலர் சரம் வைத்து, சின்னதே சின்னதாக ஒரு தங்க சங்கிலியை கழுத்தில் அணிவித்து பார்த்தவன், அசந்து போனான்!

அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சகுந்தலா்,“இவள் பெயர் மீரா... சென்னையில் டீச்சரா இருக்கா...

”“டீச்சரா? பட் தட்ஸ் ஓகே, கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு போகனும்னு அவசியம் இல்லை...

”“ம்ம்ம்...

இவள் ஒரு விடோ...

”“வாட்?” என்று அதிர்ந்து போய் அம்மாவை பார்த்தான் கிருஷ்.

எழுதியவர் : satheesh (6-Nov-14, 7:40 pm)
பார்வை : 493

மேலே