ஒல்டு செஃல்பி பட் கோல்டு செல்ஃபி

உலகமே இப்போது செல்ஃபி வெறி பிடித்து அலைகிறது. இன்றைய தலைமுறை மட்டும் செல்ஃபி எடுத்தால் போதுமா? நம் முந்தைய தலைமுறை செல்ஃபி எடுத்திருந்தால் எப்படி இருக்கும்?

இந்த வினோத கற்பனைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் டென்மார்க்கைச் சேர்ந்த ஒலிவியா மூவஸ் என்ற வடிவமைப்பாளர் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனையாளர்.

உலகின் முக்கியமான அருங்காட்சியகங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் புகழ்பெற்ற பழமையான படங்களுக்கு முன் தன் கைகளில் ஏந்திய செல்போனை வைத்து அழகான புகைப்படங்களாக எடுத்துத் தொகுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது அந்தப் புகழ்பெற்ற ஓவியங்களில் வரையப்பட்டிருக்கும் சம்மந்தப்பட்ட நபர்களே தங்களை செல்ஃபி எடுப்பதைப்போல தோற்றமளிக்கிறது.

இவரின் இந்த வினோத புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்ததும் அதிகம் பேர் வாழ்த்துகளைக் குவித்திருக்கிறார்கள். இப்போது இணையத்திலும் இந்தப் படங்களை அதிகம் பேர் ஷேர் செய்கிறார்கள்.

‘‘விளையாட்டாக நான் எடுத்த இந்த செல்ஃபிக்களுக்கு இவ்வளவு வரவேற்பு இணையத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த செல்ஃபிக்களை என்னைத் தவிர யார் வேண்டுமானாலும் எளிதில் எடுக்கலாம்.
கொஞ்சம் கற்பனை மட்டும் இருந்தால் போதுமானது. நம் கைகளை அந்தப் புகைப்படங்களுக்கு முன் வைக்கும் இடம் மிகச் சரியான கோணத்தில் அந்த உருவங்களோடு பொருந்திப் போகுமாறு இருக்க வேண்டும்

முக்கியமாக நாம் நம் செல்போனின் ஃப்ளாஷ்லைட்டை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இந்த ஐடியா சின்னதாய் தோன்றினாலும் என் இன்ஸ்டாகிராம் படங்களைப் பார்த்து இதுவரை டென்மார்க்கின் முன்னணியில் இருக்கும் 8 விளம்பர நிறுவனங்களில் இருந்து பணியாற்ற அழைப்பு வந்துள்ளது!’’ என்று பெருமிதமாக சிரிக்கிறார் ஒலிவியா.

சின்ன கல்லு பெத்த லாபம்போல சின்ன செல்ஃபி பெரிய குல்ஃபி!
-நன்றி: விகடன் -

எழுதியவர் : விகடன் (13-Nov-14, 9:41 pm)
சேர்த்தது : உமை
பார்வை : 123

சிறந்த கட்டுரைகள்

மேலே