நிரல்யா -6

நிரல்யா மனம் முழுக்க அலைப்பாயும் ஆனந்தத்தில் வீட்டில் நுழைகிறாள்……


அம்மா !! அம்மா !! என நிரல்யா சாந்தியை ஏலம் விட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறாள்……. சாந்தியிடம் இருந்து பதிலே இல்லை……


“ ஹலோ மிஸ்ஸஸ் . சாந்தி எங்க போய்ட்டீங்க “


மறுபடியும் பதில் இல்லை…...


வீடு முழுக்க நோட்டம் விட்ட நிரல்யாவிற்க்கு சாந்தி இல்லாததால் சற்று கலவரமாக இருந்தது….


“ என்ன இது அம்மா எங்கையும் சொல்லாம போக மாட்டாங்களே…………வீடு வேற திறந்து இருக்கு “ என மனதின் உள்ளே புலம்பிக்கொண்டு இருந்தாள்……..சட்டென யோசனை வந்தவளாய் தன் அம்மாவின் அலைப்பேசியை தொடர்புக்கொண்டாள்……..


“ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய். “


என்ற பாடல் ஒலித்தது… அதைக்கேட்ட நிரல்யாவின் முகமே சோகத்தில் மாறியது காரணம் அது நிரல்யாவின் அருகே இருந்த மேஜை மீது ஒலித்துக்கொண்டிருந்தது….


“ இந்த அம்மா-வ போன் –அ கையில எடுத்துட்டு போனு எத்தனவாட்டி சொன்னாலும் கேக்கவேமாட்டாங்க …. இவுங்கள திருத்தவே முடியாது…. சரி பக்கத்து வீட்ல விசாரிப்போம் “ என நம்பிக்கையோடு சென்றாள்….. ஆனால் அங்கும் தகவல் கிடைக்கவில்லை….


” இப்ப என்ன பண்ணுறது ??? அப்பா-க்கு போன் பண்ணலாமா ?? இல்ல அதும் சரி வராது....ஒரு வேள அம்மா பக்கத்துல எங்கையாவது போய் , நா தேவ இல்லாம அப்பா-வ டென்ஷன் ஆக்கிட்டேனா !!!…. அப்பறம் அப்பா-க்கு தேவை இல்லாத டென்ஷன் ஆகிடும் ….அப்பறம் அவருக்கு அங்க வேலையையும் ஓடாம , இங்க வரவும் முடியாம இருதலைக்கொள்ளியா தவிப்பாரு…… சரி கொஞ்ச நேரம் பொறுத்து பாப்போம்…. ” என்று தனக்கு தானே சமாதானம் பண்ணிக்கொண்டாடிருந்தாள்….


அப்பொழுது சமையல்கட்டில் ஒரு தட்டு விழும் சத்தம் கேட்டது….


” பூனையா இருக்கும் ” என தனக்கு தானே அலட்சியமாய் கூறிக்கொண்டாள்…..


அப்பொழுது மீண்டும் ஒரு தட்டு விழும் சத்தம் கேட்க , அவள் மூளைக்குள் சுர்ரென்று மின்சாரமாய் பல எண்ணங்கள் எட்டிப்பார்த்தது….


” அய்யய்யோ!! ஒரு வேள திருடனா இருப்பானோ????? இந்த அம்மா-வ வேற ரொம்ப நேரமா காணோம்…..வீடும் திறந்து இருக்கு….ஒன்னும் புரியலயே…..
முருகா நீ தான் என்ன காப்பாத்தனும் !!! ” என அவள் புலம்பிக்கொண்டிருக்கையில் ” ஒரு வேள இந்த படத்துல காட்டுறமாறி கத்தி முனையில…!!!! அப்போ அம்மா ??????????????? ” என அவள் கண்களுடன் மன எண்ணங்களும் பெரிதாய் விஷ்வரூபம் எடுத்தது வாய் பேசாது சிலையாகி போனாள் சில நொடிகளில்…….……..


மீண்டும் ஒரு தட்டு விழ , அச்சத்தம் சிலையாகிய அவள் எண்ணங்களுக்கு தீனிப்போடுவதை நிறுத்தி எதிர்கொள்ளும் துணிவை தந்தது……


” யார் அங்க ??? “


சத்தமே இல்லை…


” கேட்குறேன் –ல…. பதில் சொல்லுங்க “ என நிரல்யா அதட்டி கேட்டாள் ….


மீண்டும் சத்தமே இல்லை…


சரி இனி நாம ஜான்சிராணி-யா மாறவேண்டியத தவிற வேற வழி இல்ல…. என மனதில் புலம்பிக்கொண்டே கையில் பெப்பர் ஸ்ப்ரே-வுடன் சமையல் கட்டை நோக்கி நடந்தாள்….


( பெப்பர் ஸ்ப்ரே தனது தற்காப்புக்காக எப்பொழுதும் தன்னுடன் வைத்திருப்பாள்…தற்கால பெண்களுக்கு அவசியமான ஒன்றுதான்….அது அவளுக்கு இன்றுதான் முதன் முதலில் பயன்படப்போகிறது….அதும் அவளது வீட்டிலே )


சமையல்கட்டை நோக்கி நடக்க நடக்க அவளது இருதயத்துடிப்பு மிக வேகமாக கோல் போட்டுக்கொண்டிருந்தது….. பயத்திலும் பதட்டத்திலும் , அவள் நெற்றியில் இருந்து வடியும் வியர்வைத்துளி சொட்டு சொட்டாய் தரைகளில் வழிக்காட்டிக் கொண்டு இருந்தது…..அவள் அருகே செல்ல செல்ல ஒரு உருவத்தின் நிழல் தரையுடன் நிலைக்கொள்ளாமல் போரிட்டுக் கொண்டிருப்பதை கவனித்ததும் இன்னும் இறுக்கமாக ஸ்ப்ரே பாட்டிலை தயாரான நிலையில் வைத்து பூனையாய் பதுங்கி பதுங்கி வேட்டைக்கு தயாரானாள்…..மறுகணமே சமையல்கட்டில் வேகமாய் உள்ளே நுழைந்து ஸ்ப்ரே-வை சரியாக அந்த நிழலின் சொந்தக்காரனின் மீது அடித்துவிட்டாள்………


அவன் எரிச்சல் தாங்காமல் “ அடிப்பாவி கொலகாரி இப்படி பண்ணிட்டீயே ” என அவன் அலறினான்…..


“ இந்த குறள எங்கையோ கேட்டு இருக்கேனே “ என கூறிக்கொண்டே நிரல்யா சட்டென மேலே அவனை நோக்கினாள்…..


” அச்சச்சோ நீயா ???? “ என நிரல்யா குற்ற உணர்ச்சியில் தவித்தாள்…..


“ நானே தான்….இப்ப ரொம்ப முக்கியம்….அய்யோ!! கண்ணு எரியுதே…… என்ன ஸ்ப்ரே அடிச்சு தொலஞ்ச இப்படி எரியுது கண்ணெல்லாம் “ என அலறினான் அந்த வாலிபன்….


” சாரி !! பெப்பர் ஸ்ப்ரே !! …. “


“ அடிப்பாவி நல்லா வருவ நீ !! எனக்கு கண்ணு போச்சு …. ரொம்ப எரியுதே… “


“ இந்தா முதல்ல தண்ணீயால கண்ண நல்லா கழுவு ….. கொஞ்சம் கேக்கும்…… அப்படியே உடனே டாக்டர்-ட போலாம் ” என நிரல்யா தண்ணீரை கொடுத்தாள்


அவன் கண்களை கழுவிக்கொண்டே இருக்கும் வேளையில் சாந்தி உள்ளே வருகிறாள்….அவளை கண்ட நிரல்யா மனதிற்குள்ளே இன்னைக்கு எனக்கு செம்ம பூஜை தான் சாந்திக்கிட்ட!! முருகா நீ தான் என்ன காப்பாத்தனும் என புலம்பிக்கொண்டாள்..........

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (14-Nov-14, 8:22 pm)
பார்வை : 243

மேலே