நிரல்யா -7

” ஹே நிரல்யா வந்துட்டீயா , அட அதுக்குள்ள மீட் பண்ணிட்டீங்களா ரெண்டு பேரும் “ என சாந்தி கேட்க


“ அம்மா !! எங்க போன ?? இப்படியா கதவ திறந்து போட்டு போவ ??? இந்த போன் எதுக்கு வச்சு இருக்க…பேசாம வித்துடு….கைல கொண்டு போற பழக்கமே இல்ல…. “ என பதட்டத்திலும் கோவத்திலும் சொல்வதறியாது வார்த்தைகளை தீயாய் கக்கினாள்


“ கடைக்கு போய் கலர் வாங்கிட்டு வரப்போனேன்….அதா நேத்ரன் இருக்கான் –ல அப்பறம் எதுக்கு பூட்டிட்டு போனும்…. ஏண்டி என்ன ஆச்சு ?? நீ ஏன் டென்ஷனா இருக்க ??? நேத்ரன் எங்க ??? “ சாந்தி கேட்க


நிரல்யா திரு திரு திருவென்று மெளனமாய் விழித்தாள்


அவளின் மெளனங்களை புரிந்துக்கொண்ட சாந்தி “ நீ என்ன குட்டி கலாட்டா பண்ண அதுக்குள்ள ??? “


அப்பொழுது நேத்ரனும் கண்களை கழுவிக்கொண்டு திரும்பி வர “ அத நான் சொல்லுறேன்…. என்கிட்ட கேளுங்க பொண்ணா பெத்து வைங்கனா ஜான்சிராணிய பெத்து வச்சு இருக்கீங்க அத்த…. “


“ அச்சச்சோ என்ன ஆச்சு பா உன் கண்ணுக்கு ?? ஏன் இப்படி சிகப்பா இருக்கு ?? ஏய் நிரல்யா எல்லா உன் வேலையா ??? “ என சாந்தி நிரல்யாவை முறைத்தாள்


” ஆமா அம்மா , இப்ப பேச நேரம் இல்ல வந்து தெளிவா சொல்லுறேன் …. இப்ப முதல்ல டாக்டர்-ட கூட்டிட்டு போய்ட்டு வரேன் “ என நேத்ரனை கூட்டிக்கொண்டு வேகமாய் கூட்டிச்சென்றாள்


இருவரும் அவள் வீட்டின் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றனர்….அங்கு மழை நேரம் என்பதால் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது….


“ இதென்ன கொடுமை ஜவுளிக்கட கூட தோற்றுப்போய்டும் போலயே ” என நேத்ரன் வாயை பிளந்தான்…


” ஹா ஹா இப்ப மழை சீசன் –ல அப்படி தான் இருக்கும் நேத்ரன்…. “


“ ஆமா நல்லா சிரி…. ஏன் சிரிக்கமாட்ட….பெப்பர் ஸ்ப்ரே அடிச்சது என் கண்ணுல…. எனக்கு தான எரியும்…. “


“ சரி அதே எத்தனவாட்டி சொல்லுவ…. வேணும் நா அடிச்சேன்… ஆமா நீயேன் இப்படி ஒழிஞ்சுகிட்டு வம்பு பண்ண….அதான் நா திருடனு நெனச்சேன்….. “ என நிரல்யா அப்பாவித்தனமாய் கேட்டாள்


“ அது சரி !! உனக்குனு இருக்க ஒரே ஒரு அத்தப்பையன் நாதான் !! நம்ம குடும்பத்துலையும் நாதான் உனக்கு கிளோஸ் பிரெண்ட் , அதான் உனக்கு ஒரு சர்பரைஸ் குடுக்கலாம்-னு அமெரிக்கா-ல இருந்து வந்தேன்…. எனக்கு இந்த உரிமைக்கூட இல்லையா ”


“ ஹ்ம்ம் இருக்கு….ஆமா எதுக்கு இப்ப இந்த சர்பரைஸ் ??? அப்படி என்ன விஷேசம் வருது “ என நிரல்யா கேட்க


“ அடிப்பாவி உனக்கு மறதி இருக்குனு தெரியும் அதுக்குனு இப்படியா ?????? … சரி விடு அதும் நல்லதுக்குதான்…. சர்பரைஸ் நாளைக்கு தான் தெரியும் … இப்ப சொல்லமுடியாது “ என நேத்ரன் கூறினான்……..


” அடப்பாவி ஏன் இப்படி பண்ணுற… உனக்கு தான் என்ன பத்தி தெரியும்-ல இந்த சர்பரைஸ் சன்பென்ஸ்-லா எனக்கு பிடிக்காதுனு பிளீஸ் பிளீஸ் சொல்லு நாளைக்கு என்ன ?? “


“ சொல்லமாட்டேனே போ … ஸ்ப்ரே அடிச்சல நல்லா வேணும்…. மண்டைய உடச்சுக்கோ …. “


“ சரி சொல்லாட்டி போ !!! ஒன்னும் வேணாம் நானே கண்டுபிடிக்குறேன்… நீ சொல்லாட்டி என்னால கண்டுபிடிக்க முடியாதா என்ன ?? “


“ ஹா ஹா !! நீதான !! முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோ “ என நேத்ரன் நக்கலாய் கூறினான்….


“ நா கண்டுபிடிச்சு காட்றேன் பாரு !! இரு இப்ப வந்துடுறேன்… “ என அவள் சிறிது தூரம் வந்து தன் அலைப்பேசியை பவிக்கு உயிர்ப்பித்தாள்…. ஆனா பவி நிரல்யாவின் அலைதொடர்புக்கு உயிர்கொடுக்கவில்லை…


“என்ன பவி போனே எடுக்கமாட்டிக்குறா ?? சரி பிசியா இருப்பா … நாளைக்கு தான் வரேனு சொன்னால… நாளைக்கு வந்ததும் அவள்-ட உதவி கேட்ட கண்டிப்பா கண்டுபிடிச்சு என்ன சர்பரைஸ்-னு என்கிட்ட சொல்லுவா….. “ என மனதில் புலம்பிக்கொண்டிருக்கும் போதே நேத்ரன் அவள் அருகில் வந்தான்…..


” என்ன போலாமா நிரல்யா ?? ”


“அதுக்குள்ள டாக்டர பாத்தாச்சா ??? ” என நிரல்யா கேட்க


“ ஆமா நீ உண்மைய கண்டுபிடிக்க இங்க டிரைப் பண்ணிட்டு இருக்க நேரத்துல நான் டாக்டர பாத்து பேசி மருந்து வாங்கிட்டே வந்துட்டேன்…. “


“ ஓ சாரி நேத்ரன்…என் பிரெண்ட்க்கு போன் பண்ணிட்டு இருந்தேன்… அதான் வரமுடியாம போச்சு….ஆமா டாக்டர் என்ன சொன்னாரு ”


” அதுவா அந்த பொண்ணுகிட்ட ரொம்ப ஜாக்ரதையா இரு-னு சொன்னாரு “


“ ஹ்ம்ம் நீ திருந்தவேமாட்ட !! என்ன கலாய்க்கலனா உனக்கு தூக்கம் வராதே…சரி வா வீட்டுக்கு போலாம்… உன்னால இன்னைக்கு சாந்திகிட்ட பூஜை வேற இருக்கு …. எப்படி சமாளிக்கப் போறேனோ….!! எல்லாம் உன்னால தான் “


” என்னாலயா !! ஹெலோ நீதான்மா என் கண்ண டமேஜ் ஆக்கி இருக்க… வா என் அத்தைக்கு நீ பதில் சொல்லிதான் ஆகனும்…. “


“ இதமாறி எத்தன பாத்து இருக்கேன்…நீயே பாரு என் சாந்திய எப்படி சமளிக்குறேனு “


“ ஹ்ம்ம் பாக்கதான போறோம்…. வாங்க வாங்க போலாம்…இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி ? செயல்-ல காமிங்க மேடம் “ என பேசிக்கொண்டே இருவரும் வீட்டை அடைந்தனர்…


“ இப்ப எப்படி இருக்கு நேத்ரன் ?? டாக்டர் என்ன சொன்னாருப்பா ??? ஊரு-ல இருந்து நீ வந்த நிமிஷத்துல இருந்து ஒன்னுமே சாப்டல… எல்லாம் இவளா-ல தான் , தள்ளுடி நிரல்யா !! முழிக்குற முழியப்பாரு , போய் அந்த காத்தாடிய போடு , நீ உட்காரு நேத்ரன் “ என சாந்தி குமுறினாள்


“ சரி சாந்தி கிட்ட இப்ப என்ன சொன்னாலும் காதுல விழாது.. இப்பதைக்கு மலையேற மாட்டாக…. கொஞ்ச நேரம் கழிச்சு பேசுவோம் “ என அமைதி காத்தாள்


அனைவரும் உணவு உண்டனர்… ஆனால் சாந்தி நெடுநேரம் ஆகியும் நிரல்யாவிடம் பேசவில்லை….நிரல்யாவிற்க்கு ஒன்றும் புரியவில்லை…


“ அம்மா இப்படி இருக்க மாட்டாங்களே !!என்ன நடக்குது…. நேத்ரன் வேற வந்துட்டான் இனி என் மருமகன் என் ஒரே அண்ணண் பையன்னு புலம்பிட்டே இருப்பாங்க…கைலயே பிடிக்கமுடியாது…நா வேற ஸ்ப்ரே அடிச்சு தொலஞ்சுட்டேன்… சரி நாளைக்காவது பேசுறாங்களானு பார்ப்போம்… ” என மனதில் புலம்பிக்கொண்டே நிரல்யா தூங்கச்சென்றாள்


” என்ன நிரல்யா அதுக்குள்ள தூங்கப்போறீயா ??? “ என நேத்ரன் கேட்க


(ஆமா கேள்வியாப்பாரு….எல்லா இவனால தான்…. லூசு பய… பெரிய சர்பரைஸ் தரானாம்… இவனால தான் இப்ப சாந்தி என்கிட்ட பேசமாட்டிக்குறாங்க….என மனதில் புலம்பிக்கொண்டாள்)


“ ஆமா , எனக்கு தூக்கம் வருது… குட் நைட் “ என பாடாரென்று கூறி தூங்கச்சென்றாள்


அவள் சென்ற பின் நேத்ரனும் சாந்தி அம்மாளும் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டனர்… அவர்களின் ரகசியம் காற்றிற்க்கு கூட கேட்கவில்லை…. உங்களுக்கு கேட்டா எனக்கும் சொல்லுங்க……….அப்படி என்ன ரகசியம் பேசி இருப்பாங்க ?????????

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (15-Nov-14, 8:11 pm)
பார்வை : 335

மேலே