160 பந்துகளில் 486 ரன்கள் உதகையில் உதயமாகும் அடுத்த சச்சின்

தனது 16 ஆம் வயதில் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கினார் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேனும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகனுமான சச்சின் டெண்டுல்கர். அவரை முன் மாதிரியாக கொண்டு உதகையில் ஒரு மாணவர் தனது சாதனையை தொடங்கியிருக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கிடையேயான 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்போட்டியில் உதகை ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளி அணியும், உதகை ஹெப்ரான்ஸ் பள்ளி அணியும் மோதின. 40 ஓவர் அடிப்படையிலான இப்போட்டியில் ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளி மாணவர் சங்குருத் ஸ்ரீராம், 160 பந்துகளில் 23 சிக்சர்களையும், 46 பவுண்டரிகளையும் விளாசி, ஆட்டமிழக்காமல் 486 ரன்களை குவித்து புதியதொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவருடன் ஜோடி சேர்ந்திருந்த தனுஷ் 70 ரன்களை சேர்த்திருந்தார். எதிர்த்து ஆடிய ஹெப்ரான்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 42 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த ஜோடி 40 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 605 ரன்களை குவித்தது.

இதையடுத்து, மாணவர் சங்குருத் ஸ்ரீராம் சாதனை தேசிய சாதனையாக அறிவிக்கப்பட்டது. இது, அவரது வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டிய செயல் எனலாம்.

மென்மேலும், சாதனைகள் படைக்க நாமும் வாழ்த்துவோம் மாணவர் சத்குருத் ஸ்ரீராமை.

-சசி
(மாணவப் பத்திரிகையாளர்)

நன்றி ;புதிய தமிழ் நெட்

எழுதியவர் : சசி (மாணவப் பத்திரிகையாளர (16-Nov-14, 8:16 am)
பார்வை : 218

சிறந்த கட்டுரைகள்

மேலே