குற்றஉணர்வு -வித்யா

குற்றஉணர்வு-வித்யா

காணும் கனவுகளெல்லாம் மேகங்கள் போல களைந்து போகும் போது வானம் பார்த்த மண்ணாய் மனம் தவித்துப் போகிறது. குறுகியகால இலட்சியங்கள்(short term goal) ,நீண்ட கால இலட்சியங்கள்(long term goal) என நிறைய கனவுகளோடு பயணப்படும் போது பாதைகள் பாதங்களை மறுக்கிறதா........இல்லை பாதங்கள் பாதை மாறிப் போகிறதா என யோசிக்கும் போது கனவுகள் களைந்து நிர்வாணமாய் நிற்பதை மட்டுமே உணர முடிகிறது.

பொறியியல் மாணவர்களில் பெரும்பாலானோர் software கம்பெனி ஊழியர்களாகும் கனவுகளிலேயே மிதக்கின்றனர். இன்னும் சிலரோ எந்த குறிக்கோளும் இல்லாமல் படித்து arrear அளவுக்கதிகமாக வைத்தும் கவலையின்றி இருக்கின்றனர். பின்புஇருக்கவே இருக்கிறது ME என்று பெயருக்கு ME படித்து ஆசிரியர் ஆகிவிடலாம் என்று நினைக்கின்றனர்.

ஆசிரியப்பணி ஒரு அறப்பணி.....அதை சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும். கடனுக்கு செய்யாமல் கடமையாக நினைத்துச்செய்ய வேண்டும்..... அதற்கு முதலில் நம்மிடம் தகுதி இருக்கிறதா..... முழு ஈடுபாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் இதில் இளம் தலைமுறையினரின் எதிர்காலமும் இருக்கிறது.

கரும்பலகையில் நான்கு எழுத்து எழுதிவிட்டால் மட்டும் நானொரு ஆசிரியன் என்று மார்தட்டிச் சொல்லிட முடியாது. மனசாட்சிப்படி நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று பார்த்து பின் தொடருதல் நலம். இதுவரையிலும் இல்லாவிடிலும் தகுதியை வளர்த்துக் கொண்டு முழு ஈடுப்பாட்டோடு இருக்க முயற்சி செய்வதே பாதி சேவை செய்தது போலாகும்.....!!

உண்மைகள் சுடும்....அப்போது உள்மனம் குற்ற உணர்வில் கூனிக் குறுகும்......தெரிந்ததை சொல்லிக் கொடுப்பதை விட தெரிந்துக் கொண்டு சொல்லிக் கொடுப்பதே உத்தமம்...........

ஒற்றைசூரிய வருகையில்
ஓராயிரம் பூக்கள்
மலருகின்றன........!!

எழுதியவர் : வித்யா (18-Nov-14, 9:30 pm)
பார்வை : 313

சிறந்த கட்டுரைகள்

மேலே