லஞ்ச லாவண்யம்னா என்னப்பா -

எங்கள் காலத்தில் தீப்பெட்டிப் படங்கள்
இப்போதைய குழந்தைகளுக்கு ஸ்டிக்கர் படங்கள்.
எவ்வளவு ஒட்டினாலும் எங்காவது இடம் தரும்
கதவுகளின் விசால மனம் வீட்டை விடப் பெரிது
-
>கலாப்ரியா
-
--------------------------------------------
-
பயணங்கள் வலிகளை மறக்கச் செய்யும்,
சிலசமயம் பாஸ்வேர்டுகளையும்.
என்ன வெச்சேன்?
-
>உமாநாத் செல்வன்
-
-----------------------------------------
-
முதிர்ந்த வயதில் நிகழ்கின்ற மரணம், மரத்திலிருந்து
பிரிகின்ற பழுத்த இலையென ஓசையின்றி உதிர்கின்றது.
-
>ஜோதிமணி
-
---------------------------------------------
-
உறங்கும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருப்பதை
விடவா தியானம் அமைதியைத் தந்து விடப் போகிறது..!
-
>ஸ்ரீநந்தினிதேவி
-
----------------------------------------
-
லஞ்சம் தெரியும், கையூட்டு
லாவண்யம் தெரியும், அழகு
லஞ்ச லாவண்யம்னா என்னப்பா?
-
.>நான் ராஜாமகள்
-
-----------------------------------------
--வலையில் வசீகரித்தவை

_________________
அன்புடன்
அ.இராமநாதன்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (20-Nov-14, 12:58 pm)
பார்வை : 200

சிறந்த நகைச்சுவைகள்

மேலே