நீலக்குயில் தேசம்2---ப்ரியா

நீலக்குயில் தேசம்2---ப்ரியா

கயல்விழி 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல இருக்கிறாள்.ரொம்ப பேரழகியாக இல்லை என்றாலும் பார்த்ததும் அனைவருக்கும் பிடிக்கும் முகத்தோற்றம் கொண்டவள் அடர்ந்த நீண்ட கூந்தல்.....சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே சுண்டியிழுக்கும் பெரிய அழகிய காந்த விழிகளை பெற்றிருந்தாள் கயல்விழி......கயல் என்றாலே அவள் கண்கள் தான் அனைவருக்கும் பிடித்த ஒன்று அவள் கண்களுக்கு மயங்காதோர் யாருமில்லை என்றே சொல்லலாம் அவ்ளோ அழகு.....!

இறைவன் அவளுக்கு கொடுத்த அற்புதமான பரிசு என்ன அப்டீனு கேட்டா என்கண்கள் தான் அப்டீன்னு அவள் பெருமையா சொல்ற அளவுக்கு பிரமாதமாய் இருந்தது.

அப்பா இல்லை..... இவள் சிறு வயதாய் இருக்கும் போதே இறந்து விட்டார் அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறாள். அப்பா இல்லை என்ற குறை சிறிதும் தெரியாத அளவுக்கு அம்மா அளவுக்கதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்து வருகிறார்.அதனால் அவளுக்கு அப்பா இல்லை இல்லை என்ற ஏக்கம் இதுவரைக்கும் இருந்தது இல்லை....!

அப்பா அம்மாவின் சொந்த ஊர் குழித்துறை என்பதால் பிறந்தது முதல் இங்கே தான் வாழ்ந்து வருகின்றனர் இவள் படிப்பிற்காக வெளியே செல்லலாம் என ஒரு திட்டம் போட்டாள் ஆனால் வேண்டாமென அவள் தாய் நிராகரித்துவிட்டாள் அதுமட்டுமல்ல அவள் அம்மா பக்கத்து ஊரில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் நம் ஊர்தான் எப்போதுமே சிறந்தது என சொல்லி சொல்லியே அம்மா அவளை வளர்த்து வருகிறார்.

சொந்தபந்தமென்றால் அவர்கள் இரு தாத்தாப்பாட்டிகளும் மட்டும்தான்.

அப்பாவின் அப்பா மற்றும் அம்மா, அப்புறம் அம்மாவின் அம்மா.(அம்மாவின் அப்பா இறந்து விட்டார்).
கயல்விழியின் அம்மாவின் அம்மா(பாட்டி) கயல் வீட்டில்தான் தங்கி உள்ளார்.

அப்பாவின் அப்பாவும் அம்மாவும் தனி வீட்டில்தான் வசித்து வருகின்றனர் வசதியான குடும்பம் என்பதால் தனியே வேலையாட்களை வைத்திருக்கின்றனர் இந்த தாத்தாப்பாட்டி குடும்பம்.....தினமும் தாத்தா பாட்டிக்கூட சந்தோசமாய் பேசி மகிழ்ந்தாலும் அவர்கள் இங்கு வந்து தங்கமாட்டார்கள் ஆனால் கயல் அடிக்கடி தாத்தா வீட்டில் தங்குவாள். அவர்கள் கொஞ்சம் பிடிவாத குணம் கொண்டவர்கள் கயலின் அம்மாவின் அம்மா இவர்கள் வீட்டிலிருப்பதால் என்னவோ அவர்கள் இங்கு வருவதில்லை....!

ஆனால் பேத்தியைப்பார்க்காமல் அவர்கள் இருவரும் ஒருநாளும் இருந்ததுமில்லை கயலிடம் கொள்ளைப்பிரியமாய் இருந்தனர் இருவரும்.
இரு குடும்பமுமே மிகவும் வசதி படைத்தவர்கள் அந்த ஊரின் பெரும் பணக்காரர்களில் ஒருவராய் புகழோடு இருந்தனர்.

அப்பா இல்லை என்றாலும் பொண்ணை நல்லா வளர்த்திருக்கா என்று சொல்ற அளவுக்கு கயல் மிகவும் நல்ல பொண்ணாக திகழ்ந்தாள், ஆண்பிள்ளைக்கு ஆண்பிள்ளையாகவும் பெண்பிள்ளைக்கு பெண்பிள்ளையாகவும் தன் தாய்க்கும் தாத்தாபாட்டிக்கும் இருந்தாள் கயல்.

கயல் பேரழகி இல்லை ஆனாலும் அந்த ஊரில் அவளை விடவும் அழகு யாருமில்லை என்றே சொல்லலாம்.

இவளுக்கு இரண்டு தோழிகள் அஜிதா,ஷீபா...... பசங்களால் இவளுக்கு ஏதாவது தொந்தரவு என்றால் அவர்களே தீர்த்துவிடுவார்கள்.அப்படிப்பட்ட திறமையான தோழிகள் இருவரும்.

12-ம் வகுப்புவரை ஒரே பள்ளியில சேர்ந்தே படித்தவர்கள் பக்கத்துல பக்கத்துலதாதான் அவர்கள் வீடும் இருந்தது இப்பொழுது கல்லூரியிலும் 3பேரும் சேர்ந்தே காலடி எடுத்து வைக்கின்றனர்.........!

இன்றுதான் முதல் நாள் கல்லூரிக்கு போக ஆயத்தமாகின்றனர்......கயல் பெரிய பொண்ணான நாள் முதல்நாளாக வந்ததுதான் அந்த கனவு அன்று முதல் இன்று வரை அடிக்கடி அதே காட்சியை கனவில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள் ஆனால் அதற்கான முடிவு இதுவரைக்கும் கிடைத்தபாடில்லை.....!



தொடரும்....!

எழுதியவர் : ப்ரியா (20-Nov-14, 4:03 pm)
பார்வை : 397

மேலே