அமைச்சர் ராமசாமி

அமைச்சர் ராமசாமி புலம்பியவாறே தனது உதவியாளரை அழைத்தார்,அவரிடம்

யோவ்.. எல்லாம் போச்சு யா...
நேத்து பேப்பர் ல தலைவர் பேட்டி குடுத்துருக்கார்..
கப்பல் மற்றும் போக்குவரத்து துறைல
செயல்பாடுகள் சரியில்லை.
உடனடியா அது என்ன னு விசாரிச்சு
சம்பந்தப் பட்டவங்கள பதவிய விட்டு
தூக்கறதா தலைவர் பேசியிருக்கார் யா...
போற போக்க பார்த்தா நம்ம பதவி
கோவிந்தா னு நெனைக்கறேன்..
விசாரிச்சா என் வண்டவாளம் எல்லாம் வெளிய வந்திரும்யா..
தப்பிக்க எதாவது வழி சொல்லு..

உதவியாளர் அமைதியாக கூறினார்..
சார் நீங்க பயப்படாதிங்க.
கப்பல் துறை அமைச்சர் நீங்க இல்லை.
அதுலருந்து நீங்க பொதுப்பணித்துறைக்கு மாறி ஒரு வருஷம் ஆச்சு.
கப்பல் துறை அமைச்சர் முனுசாமி தான்...

அதற்கு அமைச்சர்,
அப்படியா? இது எனக்கு தெரியாம போச்சே. ஆமா நேத்து தான்
முனுசாமி போன் பண்ணி தன்னோட பாதுகாப்பு துறைக்காக ஏதோ ரஷ்யாவோட
ஒப்பந்தம் போடப்போறதா சொன்னான்?
என்னமோ போய்யா..
நம்ம தல தப்பிச்சது..
இதோ இப்பவே போய் தலைவருக்கு ஆதரவா ஒரு அறிக்கை விட்டுட்டு வந்திடறேன்..

எழுதியவர் : கார்த்திக் (20-Nov-14, 9:52 pm)
Tanglish : amaichsar raamasami
பார்வை : 213

மேலே