நீலக்குயில் தேசம்4---ப்ரியா

வகுப்பறைக்குள் அமர்ந்து தோழிகள் மூவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கயல்விழி திடீரென வெளியில் பார்க்க அவனை கண்டுகொண்டாள்...ஏய் அங்க பாருடி அவன்....அவன் எப்டி இங்க????என்று கண்களில் கேள்விகளுடன் கைக்காட்டிய திசையை நோக்கிய தோழிகளுக்கு ஆச்சர்யம் இவனா?இவன் எப்டி....ஐயோ மாட்டிக்கிட்ட கயல் செமையா மாட்டிக்கிட்டா என்று அஜிதா சொல்ல....எனக்கு தெரியாதுப்பா நான் இந்த விளையாட்டுக்கு வரல ஆள விடுங்கப்பா..என்று சொல்லி சிரித்தாள் ஷீபா......!

என்னடி நீங்க வேற காமெடி பண்ணாதீங்க இவன் இங்க படிக்க வந்தானா?இல்லை படிச்சிட்டிருக்கானா?இல்ல வேற எதுக்காவது வந்தானா என்றே தெரியவில்லை அதுக்கமுன்னாலா இப்டி பேசாதீங்க என்று கயல் தன் தோழிகளை கடிந்து கொண்டாள்.

அவன் ஒருநாள் கயல் பள்ளியில் படிக்கும் போது ஒருமுறை கயலிடம் வந்து "உன்னை நான் லவ் பண்றேன் 6மாதமாக உன் பின்னாலேயே வருகிறேன் தெரிந்துதான் இப்படி செல்கிறாயா?இல்லை உண்மையிலேயே நான் உன் கண்ணில் படவில்லையா?...." என்று கேட்டுக்கொண்டே அவள் பின்னால் சென்றான். தினமும் தோழிகள் மூன்று பேரும் சேர்ந்தே தான் பள்ளிக்கு செல்வார்கள் ஆனால் அன்று செய்முறைத்தேர்வின் காரணமாக தோழிகள் பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை தக்க சமயம் பார்த்து தோழிகள் இல்லாத நேரத்தில் இப்படி கேட்டுவிட்டான் அவன்........பதில் பேசாமல் இவள் அவனை ஒரு முறைமுறைத்துவிட்டு சென்றுவிட்டாள்....!

அன்றுமாலை தன் தோழிகளிடம் நடந்த விஷயத்தை சொன்னவள் மிகவும் கோவமாக இருந்ததால் தோழிகள் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர் அடுத்தநாள் அவன ஒரு கை பார்த்துக்கலாம் நீ கவலை பாடாதேன்னு ஆதரவாய் பேசினர்.

அடுத்தநாள் வழக்கம் போல் மூவரும் சேர்ந்து போய்க்கொண்டிருக்கும் போது எதிரே அவன் இவர்கள் கண்களில் பட பொது இடமென்றும் பார்க்காமல் அவனை திட்டி தீர்த்து விட்டனர்......படிக்கிற பொண்ணுக்கிட்ட இப்படி எல்லாம் வந்து பேசுறா தில் இருந்தா அவங்க வீட்டுல வந்து பேசு என்று கத்தினாள் ஷீபா சிலர் வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல் திட்டிவிட்டும் சென்றனர் அவனுக்கு அது பெரிய அவமானமாக போனது அதன் பிறகு அவன் இவர்கள் கண்ணில் படவே இல்லை........ஒருவருடத்திற்கு மேல் ஆனது இன்று மறுபடியும் இந்த சனியனை பார்க்க வேண்டியதாயிற்று என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் கயல்.........!

ம்......என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம் எல்லாம் அவன் செயல்......என்னடி பலமா யோசிக்கிறது போல தெரியுது அடுத்து வரக்கூடிய பிரச்சனைக்கு எப்டி முற்றுப்புள்ளி வைக்கலாம்னா என்று கிண்டலடித்தாள் ஷீபா.....ஏய் சும்மா இரு முதல் நாள் புது இடம் அமைதியாய் இரு சாயங்காலம் பேசிக்கலாம் என்று மௌனமானாள்.

வெளியில் நின்ற அவனிடம் உள்ளிருந்து ஒரு பெண் போய் பேசிவிட்டு வந்ததை கயல் கவனிக்கத்தவறவில்லை அந்த மாணவியையும் தெளிவாக பார்த்து வைத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அவன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான் வகுப்பில் அமைதி நிலவியது பேராசிரியை வந்து அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு அனைத்து மாணவர்களின் பெயர் மற்றும் சொந்த ஊரையும் சொல்லிவிட்டு அமரும்படி சொல்ல...?அனைவருமே சொல்லி முடித்து விட்டு அமர்ந்தார்கள்.

அன்றையதினம் முதல் நாள் என்பதால் வகுப்புகள் நடத்தப்படவில்லை கல்லூரியில் எப்படிஎல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்ற விதிமுறைகளும் சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது. 2மணிக்கு முன்னாள் வீட்டிற்கும் வந்து சேர்ந்தாயிற்று.

இதுவரை அவளிடம் நிறையபேர் வந்து காதலிக்கிறேன்னு சொல்லிருக்காங்க அதாவது கயல் எட்டாம் வகுப்பு படிக்குபோதே அவளை நிறைய பேர் பின் தொடர்ந்திருக்கின்றனர் இவள் மனக்கட்டுபாட்டின் காரணமாக இதுவரைக்கும் அவள் மனதில் யாரும் வரவில்லை அதற்கும் காரணம் அவளுடைய அந்த கனவுக்காதலன்தான்.....!

ஆனால் இவள் தோழிகள் இருவருமே காதல் வலையில் விழுந்துவிட்டனர் அது உண்மைக்காதலா? இல்லை அறியாப்பருவ விளையாட்டா? என்று தெரியவில்லை ஆனால் அது இவளுக்கு பிடிக்கவும் இல்லை காதலைப்பற்றி பேசுவார்கள் ஆனா எல்லைமீறி பேசிக்கொள்வதில்லை.

ஆனால் இன்று வகுப்பில் நடந்த அந்த சம்பவம் இவள் மனதை உறுத்திக்கொண்டிருந்தது........

அவர்கள் வகுப்பில் மொத்தம் 17மாணவர்கள் அதில் ராகேஷ் என்ற மாணவன் மட்டும் கயலுக்கு மிகவும் நெருக்கமானவன் போல் அடிக்கடி அவளை திரும்பி பார்த்துக்கொண்டிருந்தான் யாரிவன் எதற்காக நம்மளையே பார்க்கிறான் என்று சற்று வெறுப்புடன் அவனைப்பார்த்தாலும் அவனது பார்வையில் கொஞ்சம் நிதானம் தவறிதான் போயிருந்தாள் கயல்......எப்படியாது அவன் பார்வையிலிருந்து தான் விலக வேண்டும் இல்லன்னா கஷ்டம் அப்டி ஒரு பவரான ஈர்க்கும் பார்வை அவனது பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறதே.....அவன் நம்ம குடும்பத்துல ஒருத்தன் மாதிரியும் எத்தனையோ வருடங்கள் ஒன்றாக பழகிய மாதிரியும் ஒரு உணர்வு மனதிற்குள் ஏனோ ஒரு தடுமாற்றம்??????

யாராக இருக்கும்?அவன் பார்வையின் அர்த்தம் என்ன? அவன் கண்ணில் படாமல் எப்படி விலகுவது?????என்ற எண்ணத்தில் மொட்டைமாடியில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள் கயல்........!

அந்த நேரம் பார்த்து அங்கு வந்தார் கயலின் அம்மா சுசீலா ;என்னமா முதல் நாள் கல்லூரிக்கு போயிட்டு வந்ததும் இப்படி இருக்கிறாய் என்ன ஆச்சு என்று கேட்டார்?

அவளது முகத்தில் பல மாற்றங்கள் மட்டுமல்ல கேள்விக்குறியாய் எண்ணற்ற கேள்விகள் இருப்பதையும் அதற்கு இன்னும் விடை கிடைக்காமல் குழப்பமாக இருக்கிறாள் என்பதனையும் அவள் தாய் பார்த்ததும் கண்டுபுடித்துவிட்டார்.

எப்படியாவது இன்று அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிவிடவேண்டும் & அம்மாவிடமும் அந்த விஷயத்தைப்பற்றி கேட்டுவிடவேண்டும் என்று பக்கத்தில் சென்றாள் கயல்.

அம்மா அது வந்து... என்று இழுத்தாள்........என்னடி தயக்கம் எதுனாலும் தயங்காமல் பேசு என்று அவள் பேச்சுக்கு ஆர்வமூட்டினார்.

அம்மா நான் யாரையாவது காதலிக்கிறேன்னு சொன்னா சேர்த்து வைப்பியாமா?என்று அமைதியாய் கேட்டாள் கயல்.........அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு சிலைப்போல் நின்றாள் அவள் அம்மா அவள் கண்முன் ராஜலெட்சுமியின் முகம் வந்து நின்றது......என்னடி ராஜலெட்சுமி மாதிரி வந்து பேசுறா? என்று கேட்டாள் கயலின் அம்மா சுசீலா.....!

ராஜலெட்சுமியா?யாருமா அது என்று புரியாமல் கேட்டாள் கயல்.........






தொடரும்...........!

எழுதியவர் : ப்ரியா (25-Nov-14, 3:31 pm)
பார்வை : 354

மேலே