காலம் சிலரைத்தான் மாமேதை என்கிறது

காலம் சிலரைத்தான் மாமேதை என்கிறது. மக்கள் சிலரைத்தான் மகாத்மாவாக ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி எல்லா காலங்களிலும் மரியாதைக்குரியவராகவும், மறக்கபடாமலும் இருக்ககூடிவர் அம்பேத்கர்.

1891 ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாளில் மகராஷ்டிர மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவரின் குடும்பத்தில் பிறந்தார்

இந்தியாவின் முதல் அறிவர் பட்டம் பெற்ற மாமனிதனை தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டதர்க்காய் ஒதுக்கிவைத்து, புறகணித்தது சாதி இந்துக்களின் சிந்தனை.

உலகிலேயே மிக நீளமாக எழுதப்பட்ட அரசமைப்பு சட்டம் இந்திய அரசுடையது. இந்திய சட்டத்தை உருவாக்கியவரை இந்தியாவை தவிர மற்ற எல்லா நாடுகளும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றது.

நம்முடைய குறுகிய சிந்தனையால்..அம்பேத்கர் ஒரு சாதிய தலைவர், ஒரு மததலைவர் என்றெல்லாம் அவரை நாம் எளிதில் வரையறுத்துவிட முடியாது. புத்தர் சாதி ஒழிப்பை விரும்பினார், ஆகையினால் தான் அம்பேத்கரும் தன இறுதிகாலத்தில் புத்திசத்தை விரும்பினார்.

உலகில் வேறெந்த நாட்டிலும் நடக்காத, மிக மோசமான சக மனித வெறுப்பும், தீண்டாமையும் இந்தியாவில் தான் நடந்து கொண்டிருக்கிறது. மனிதன் குரங்கிலிருந்து பிறந்திருக்கலாம். ஆனால், இன்னும் குரங்காகவே இருந்திருக்கவில்லை.

பொதுக்குளத்தில் குடிக்க நீரெடுக்க கூடாது, விரல்பட்டால் தீட்டு, கோயிலுக்குள் வந்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு, செருப்பு போட்டுசென்றால் தவறு.

நாகரிக வளர்ச்சியில் வேகமாக பயணிக்கும் மனித வர்க்கத்தில் ரத்தகரையோடு காய்ந்து கிடக்கும் இந்த சாதிக்கரையை எப்படி களைவது?

இன்றுவரை லண்டன் நூலகத்தில் காரல் மார்க்ஸ் அம்பேத்கர் படங்கள் மட்டும்தான் இருக்கின்றன... அந்தளவிற்கு அவர்கள் கல்வியின் மீது தீவிர ஈடுபாடு காட்டினார்கள். என்றால் சாதி பாகுபாட்டை கல்வி மூலம் விரட்ட முடியும் என நம்பினார்கள்.

பொருளாதாரம், சட்டம், சமூகம் கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் விரிவான சிந்தனையோடு திகழ்ந்தார் அண்ணல்.
கற்பி, ஒன்று சேர், கலக்கம் செய் என்று இவர் சொன்னது அடிமைத் தலையிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய் சம உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான்...

இந்திய துணைக்கண்டத்தில் சாதியத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை ஒரு பாதுகாப்பு ஆயுதமாக இருக்கும் என நம்பினார் அம்பேத்கர்.

ஆயிரம் ஆண்டுகளாக அடிமை பட்டுகிடக்கிற ஒரு சமூகத்தை எப்படியாவது நிமிர்த்திவிட முடியாதா என்கிற ஏக்கமும், மாற்றிவிடமுடியும் என்கிற தைரியமும் அவரிடம் இருந்தன.

தாழ்த்தப்பட்டவர்கள் என அடையாலபடுத்தபடும் இந்த தேசத்தில்தான் நாசாவின் அறிவியல் களத்தில் ஒரு தாழ்த்தபட்டவன் விஞ்ஞானம் பயின்று கொண்டிருக்கிறான்.

தாழ்த்தப்பட்டவர்கள் அடிமைபடுத்தபட்ட இந்த தேசத்தில் தான் அரசை நடத்துவதற்கே ஒரு தாழ்த்தப்பட்டவர் தேவைபட்டார்.....

வயிற்று உணவுக்கே கஷ்ட்டபட்டும் மக்களில் இருந்துதான்
இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரிசை படுத்தபடார்.

உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டவே ஒரு தாழ்த்தப்பட்டவர்தான் உங்களுக்கு தேவைப்படுகிறார்.

எல்லா அவமானங்களையும் தாங்கி கொண்டு தாழ்த்தப்பட்டவர்கள் எந்த தலத்தில் பயணித்து முன்னேறினாலும் புற்றீசல் போல சாதியத்தின் கொடூர கரங்கள் அவர்களை கொன்று புதைத்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்திய அரசமைப்பு சட்டம் வலியுறுத்தபட்டபோது நதிநீர் ஆதாரங்களின் இணைப்பு குறித்த கருத்தை முன் வைத்தார் அம்பேத்கர்... ஆனால், எப்போதும் போல அப்போதும் புறக்கணிக்கப்பட்டது தாழ்த்தபட்டவர்களின் சிந்தனை என்பதற்காக.

குழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல், இரட்டைக்குவளை முறை, இட ஒதுக்கீடு போன்றவைகளை ஆராய்ந்து இந்திய சாதிய கட்டமைப்பையும் அதன் உண்மை முகத்தையும் உலகுக்கு தோலுரித்து காட்டியவர் அம்பேத்கர்.

சாதிவெறியும் மதவெறியும்தான் மனிதர்களை குறுகிய சிந்தனை உடையவர்களாக மாற்றுகிறது. அதிலிருந்து மீண்டுவராதவரை எந்த மனிதனும் தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள தகுதியற்றவனாய் தான் இருக்கிறார்கள்.

நாகப்பட்டினம் அருகே கீழவெண்மணி கிராமத்தில் 1960 ஆம் ஆண்டில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய ஏழை தலித் விவசாய தொழிலாளர்கள் கடும் அடக்கு முறையை சந்திக்க நேர்ந்ததும், சாதியாலர்களால் அங்கிருந்த குடிசைகளுக்கு தீவைக்கபட்டதும், அதில் பிஞ்சுக் குழந்தைகள் உட்பட அத்தனைபேரும் எரித்து கொலை செய்யப்பட்டதும் யாருக்கும் எளிதில் மறந்து போயிருக்காது.

இப்பொழுதும் கூட சாதி வெறியர்களால் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவதும், உடலளவிலும் மனதளவிலும் துன்புருத்தபடுவதும் ஒவ்வொருநாளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசமென்று மார்தட்டிகொல்கிற இந்தியாவின் முகம் ஆண்டாண்டு காலமாய் சாதியத்தால் மறைக்கபட்டிருப்பதை எப்போது இங்கிருக்கும் தலைவர்கள் உணருவார்கள்..?

இந்த ஒரு மனிதனின் பொறுமை, இந்த ஒரு மனிதனின் சகிப்புத்தன்மை பல்லாயிரக்கணக்கான மக்களின் விடுதலைக்கு வழிவகுத்திருக்கிறது.

மனிதனின் மலத்தை மனிதன் அள்ளவேண்டும் என எந்த கடவுள் சொல்லித் தந்தது உங்களுக்கு. மதத்தின் பெயரால்...சாதியின் பெயரால்...நீங்கள் தீண்டாமையை தூக்கி சுமக்கிறவரை... உங்களை எந்த மக்களும் மனிதர்களாய் ஏற்றுக் கொள்ளபோவதில்லை.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (27-Nov-14, 10:16 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 376

மேலே