சின்ன சின்ன ஆசைகள்

நீண்ட நாளாக இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியவில்லை ச்ச்சே....என்னடா இது ரொம்ப வருத்தமாக இருந்தது செல்விக்கு.

செல்வி பத்தாம் வகுப்பு படிக்கும் பருவப்பெண். இந்த வயதில் இதுபோன்ற ஆசைகள் எழுவது இயற்கைதான்.முழு ஆண்டு தேர்வு வருவதற்குள் எப்படியாவது இந்த ஆசையை நிறைவேற்றிட வேண்டும் என அதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

செல்வியின் அம்மா கொஞ்சம் கண்டிப்பானவர் அதனால் அவளிடம் சொல்ல பயந்தாள், பல திரைபடபாடல்களில் இவளது நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிகொண்டிருப்பர் அரைகுறை ஆடைகளில் கதாநாயகிகள்.என்ன செய்ய பெருமூச்சுடன் பார்த்தது தான் மிச்சம் .

அவளின் தோழி வள்ளி இவளது ஆசையை கேட்டு சிரித்தாள் பின் கிண்டல் செய்தாள் இதெல்லாம் ஒரு ஆசையா செல்வி சரி விடு கவலை படாத அக்டோபர், நவம்பர் மாசத்துல உன் ஆசைய நிறைவேத்திக்க நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என ஆறுதலும் கூறினாள். அது சரிதான் வள்ளி ஆனால் அப்போதான் நமக்கு அரையாண்டு பரீட்சை இருக்கே என்ன பண்றது ? பரவாயில்லை செல்வி மருந்து மாத்திரை ஊசியெல்லாம் எதுக்கு இருக்குகிற, செல்விக்கு அவளின் வார்த்தைகள் பிடித்திருந்தது.

அக்டோபர் மாதமும் வந்தது அதோடு சேர்ந்து காற்றழுத்த தாழ்வுநிலை தமிழ்நாடு முழுவதும் இன்னும் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற செய்தியும் செல்வியின் காதில் தேனாய் விழுந்தது.
ஆனால் விடுமுறை விட்டு விட்டால் என் ஆசை தோசைதான்... ஐயோ கடவுளே பள்ளிக்கு விடுமுறை விடக்கூடாது என வேண்டிக்கொண்டாள் வேண்டுதல் பலிக்கவில்லை, மழைகாரணமாக இன்று தூத்துக்குடி,நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற ப்ளாஷ் நியூஸ் கேட்டு வருத்தமடைந்தாள்.

குறுஞ்செய்தி வந்ததற்க்கான மணியோசை கேட்டு அம்மா அது என்ன வந்திருக்குன்னு பாரு செல்வி
என கூறினாள், வேதனையில் இருந்த செல்விக்கு பள்ளி விடுமுறைன்னு செய்தி அனுப்பி இருப்பாங்க வேறென்ன என்பது போல் நினைத்து பார்த்தாள் அச்செய்தியை பார்த்ததும் பல மடங்கு பரவசமடைந்தாள் .
என்ன செய்தி அது.. ? அம்மா அரையாண்டு தேர்வு வரதால எங்களுக்கு மட்டும் அரை நாள் வகுப்பாம் நான் போயிட்டு வரவா.. ?

இச்செய்தி கேட்டு அம்மா வருத்தமானால் விட்டு விட்டு தூறல் போட்டு கிட்டே இருக்கு இதுல எப்புடி பசங்க படிப்பாங்க சளி காய்ச்சல் வந்தா எவ்ளோவ் கஷ்டம், நீ போக வேண்டாம் செல்வி வீட்லே இரு நான் வென டீச்சர் கிட்ட பேசுறேன் இங்க இருந்தே படி.

இல்ல அம்மா வேண்டாம் வேண்டாம் நான் பத்திரமா போயிட்டு வரேன் செல்வியின் பிடிவாதம் பெருமையாக இருந்தது படிப்பின் மீது தான் எவ்ளோவ் அக்கறை என மனதில் நினைத்தவாறே அவளை கிளப்ப ஆயுத்தமானாள்.

மழையில் நனைந்தால் உடல் நிலை சரி இல்லாமல் போகும் என பல பாதுகாப்பு கவசங்களை அணிவித்து அனுப்பிவைத்தால் அவளது அன்பு அம்மா.
அட இதென்ன கொடுமை ...? சிறு தூறல் கூட இல்லை பாரேன் பள்ளிக்கு விடுமுறை என விட்டாலே வெயில் தானே அடிக்கிறது , செல்வி சோகத்தோடு கூறினாள் வள்ளிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை இப்போ இல்லன என்ன எப்போவாச்சும் உன் ஆசை நிறைவேறும் பாரு. என பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். சில வீட்டு பாடங்களை முடித்து விட்டு வள்ளி அவளின் வீட்டிற்கு புறப்பட்டாள்.

செல்வி பக்கத்து வீட்டு அக்காவிற்கு பையன் பொறந்திர்க்கான் நானும் அப்பாவும் போயிட்டு பார்த்திட்டு வரோம். நீ பத்திரமா வீட்லே இரு கதவ தாழ்பாள் போட்டுக்க என அவசரமா சொல்லிட்டு அம்மா கிளம்பினாள்.

மூன்று மணி இருக்கும் வானம் இருண்டது முதலில் சிறு தூறலாக விழுந்தது பின் நல்ல மழை பொழிய ஆரம்பித்தது. இதை அறியாதவளாய் உறங்கிவிட்டாள் சன்னலோரம் சிதறிய மழை துளி முகத்தில் பட விழித்தாள்...

அடடா.... மழை !!!!!!!!!! மழை !!!!!!!!!!!!! நல்ல மழை !!!!!!!!!! பெய்யுது வாவ் சூப்பெர்ர்ர்ர்ர்....

வீட்ல வேற யாரும் இல்ல நல்ல சான்ஸ் மிஸ் பண்ண கூடாது...
மாடியை நோக்கி துள்ளி குதித்து ஓடினாள் நனைந்தாள்..... ஆசை தீர தீர நனைந்தாள்.....

சில் சில் மழையே சில் சில் மழையே நீ எங்கே இருந்தாய் என பாடிக்கொண்டே தன்னை ஒரு நாயகியாக மனதில் நினைத்து ஆடினாள் பாடினாள்......

இரு கைகளையும் விரித்து ஆகாயம் நோக்கி முகம் பார்த்தாள்... மழைத்துளிகள் அவளின் அழகு முகத்தில் முத்தமிட்டு சென்றன .பின் அப்படியே பல முறை சுற்றி கீழே விழுந்தாள்.. மலர்ந்து படுத்தாள்..குப்புற படுத்தாள் பின் எழுந்து நடந்தாள் சிலிர்த்தாள்... மெய் சிலிர்த்தாள் ....
எத்தனை நாள் ஆசை இன்று இன்று நிறைவேறி விட்டது என சொல்லிக்கொண்டே நனைந்தாள்.....

இவளை கண்ட மேகமும் குதூகலத்தில் கொட்டி தீர்த்தது...நேரம் செல்ல செல்ல குளிர ஆரம்பித்தது போதும் போதும் இதுவே போதும் என மனதுரைக்க, பல மடங்கு சந்தோசத்துடன் நடந்தாள் அவள் அறை நோக்கி.....

இரவு உணவு அம்மா பரிமாற அமர்ந்து சாப்பிடும்போது
ஆ... ஆ... அச்.... அச்... அச்.... அடுக்கடுக்கான தும்மல்...
அம்மா சபித்தாள் ஆசிரியரை
உள்ளுக்குள் சிரித்தாள் சித்திர பெண் செல்வீ .

- PRIYA

எழுதியவர் : PRIYA (7-Dec-14, 9:24 pm)
பார்வை : 459

மேலே