சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 18 த ர்சநமு ஸேய நா தரமா – ராகம் நாராயண கௌள

நாராயண கௌள என்ற ராகத்தில் அமைந்த 'த ர்சநமு ஸேய நா தரமா' என்ற பாடலும் பொருளும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

(சின்மய ஸ்வரூபமான பரசிவத்தை) தரிசனம் செய்ய என்னாலாகுமா?
நீயே இதைப் பரிசீலித்து என்னைக் காக்க வேண்டும்.

கோபுரங்களையும், மிகப் பெரிய தூண்களையும், பூமியில் நடப்பெற்ற கற்சிலைகளையும், பெண்களின் நாட்டியத்தையும், தீபங்களின் வரிசைகளையும், அழகிய வாகனங்களையும் சேவித்துப் புறப்பார்வை உடையவனாக ஆனேன். பாவங்களைப் போக்கடிப்பவனே!

அசைந்து கொண்டே பதினாறு பிரதட்சிணங்கள் செய்து கொண்டு, பிறரை நிந்தை செய்யும் வார்த்தைகளை நன்கு பேசிக்கொண்டு, பிறர் பெண்டிரைப் பார்த்து மகிழ்ந்தேனே தவிர, உயரிய ‘சிவ’ என்ற இரண்டெழுத்தை ஜபம் செய்யத் தவறினேன்.

(பரம்பொருளின்) பொன்னிறமான அழகிய தோற்றத்தை என் இதயமாகிய தாமரையில் இருத்திக் கொண்டு, அதை அடிக்கடி தரிசித்து மெய்மறந்து இருப்பது விளையாட்டா? தியாகராஜன் அர்ச்சிக்கும் அழகிய பாதங்களையுடையவனே!

பாடல்

பல்லவி:

த ர்சநமு ஸேய நா தரமா (த)

அனுபல்லவி:

(பரா) மர்சிஞ்சி நீவு நநு
மந்நிம்பவலெநு சிவ (த)

சரணம்:
1. கோ புரம்பு லநு க டு கொ ப்ப கம்ப முல பூ
ஸ்தா பிதம்ப கு சிலல தருணு லாடலநு
தீ பால வருஸலநு தி வ்ய வாஹநமுலநு
பாபஹர ஸேவிஞ்சி ப ஹிர்முகு ந்டை தி சிவ (த)

2. தரலி பதி யாறு ப்ரத ட்சிணமு லொநரிஞ்சி
பர நிந்த்ய வசநமுல பா கு கா டு கநு
ஒருல பா மல ஜூசு சுப்பொங்கி திநி கா நி
வர சிவாட்சர யுக ஜபமு ஸேயனைதி சிவ (த)

3. ஹாடக ஸமம்பை ந அத் பு தாக்ருதிநி நே
நாட ஜேஸிகொநி ஹ்ருந்நாளீகமுநநு
மாடி மாடிகி ஜூசி மைமறசி யுண்டே தி
ஆடலா த்யாக ராஜார்ச்சித ஸூபாத சிவ (த)

மதுரை சோமுவின் குருநாதர் குரலிசை வித்வான் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை இப்பாடலை, பல்லவி, அனுபல்லவியோடு மூன்றாவது சரணத்தை அருமையாகப் பாடியிருக்கிறார்.

Chittoor Subramanya Pillai - Compilation of musical Gems part 1 என்று பதிவு செய்து யு ட்யூபில் கேட்கலாம்.

எழுதியவர் : டி.எஸ்.பார்த்த ஸாரதி (10-Dec-14, 8:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே