சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 19 சநி தோடி தேவே - ராகம் ஹரிகாம்போஜி

'ஹரிகாம்போஜி' என்ற ராகத்தில் அமைந்த 'சநி தோடி தேவே' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

மனமே! நீ சென்று அவனை அழைத்து வா.

தயையுடன் என்னை நோக்கிக் கைகொடுத்து, என்றென்றும் சுகம் அனுபவிக்குமாறு விரைவாக அழைத்து வா.

அவன் வீழ்ந்தவரை (எளியவரை)க் காப்பதெனப் பட்டம் கட்டிக் கொண்ட பிரபு. பரமார்த்தத்தையே மதமாகவுடைய வசிஷ்டனைப் பின்பற்றுபவன். ஒளியினால் நூறு மன்மதரை வென்றவன். தியாகராஜன் இதயத்தில் சஞ்சரிப்பவன். (மனமே! நீ சென்று அவனை அழைத்து வா)

பாடல்:

பல்லவி:

சநி தோடி தேவே வோ மநஸா (ச)


அனுபல்லவி:

கநிகரம்முதோ கநி கரமிடி சிர
காலமு ஸுக மநுப விம்ப வேக மே (ச)

சரணம்:

பதிதுல ப் ரோசே பட்டாதி காரி நி
பரமார்த்த மத வஸிஷ்டா நுஸாரிநி
த் யுதி நிர்ஜித சதசம்ப ராரிநி
து ரீண த்யாக ராஜ ஹ்ருச்சாரிநி (ச)

குறிப்பு:

Alathoor Brothers-IndianCarnatic Music-ChaniTodi-HariKamboji என்று யு ட்யூபில் பதிவு செய்து ஹரிகாம்போஜி ராகத்தில் அமைந்த ‘சநி தோடி தேவே’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஆலத்தூர் சகோதரர்கள் பாடுவதைக் கேட்கலாம்.

செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் ஸகாமாராவ் என்ற வித்வானிடம் குருகுலவாசம் செய்து வந்த பொழுது, கீவளூர் ராமச்சந்திர ஐயர் என்ற வித்வான் ஸகாமா ராவிடம் ’சநி தோடி தேவே’ என்ற கிருதி ஹரிகாம்போஜி ராகத்தில்தான் அமைந்திருக்கிறது என்று வாதாடியிருக்கிறார்.

குருகுலம் செய்து வந்த ஸ்ரீநிவாசய்யர் அப்பாடலைப் பாடி, ஸ்வரவிஸ்தாரம் செய்து அது ’கமாஸ்’ ராகத்தில்தான் அமைந்திருக்கிறது என்றாராம். எனவே, இப்பாடலைக் ’கமாஸ்’ ராகத்திலும் பாடலாம் எனத் தெரிகிறது.

எழுதியவர் : டி.எஸ்.பார்த்த ஸாரதி (12-Dec-14, 10:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே