வழிப்போக்கன் புகட்டிய பாடம்

சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபல நடிகரின் திரைப்படம் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனா நம்ம இப்ப அந்த திரைப்படம் பற்றி பாக்கபோறது இல்ல.

இரண்டு நாட்களுக்கு முன்னால் என் நண்பர்களோடு இந்த திரைப்படம் பார்க்க இரவு காட்சிக்கு கோவையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு சென்றேன். அங்கே சில பல சின்ன சின்ன சம்பவங்கள் நடந்தவாறு இருந்தது. அனைத்தையும் கவனித்தவாறு திரையரங்கு படிக்கட்டில் அமர்திருந்தேன். என் நண்பன் ஒருவன் டிக்கெட் வாங்கிவிட்டு வந்து என்னருகில் அமர்ந்தான். அவன் அமர்ந்த ஒரு சில நொடிகளில் "மச்சா அங்க பாருடா வெளிநாட்டு தலைவர் ரசிகர்கள் வராங்கனு" சொன்னான்.

நான் அந்த வெளிநாட்டுவர்களை கவனித்தேன் அதில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர்கள் இருந்தனர். நாங்கள் அமர்ந்திருக்கும் படிக்கட்களுக்கு இரண்டு படிக்கட்டுகளுக்கு அடுத்துள்ள படிக்கட்டுகளில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.அதில் ஒருவர் தனது இடது கையில் ஒரு சிகரெட்டை வைத்து புகைப்பிடித்து கொண்டிருந்தார்.அவரை பார்த்து என் நண்பன் ஒருவன் இங்க வந்து புகைபிடிக்கிறான், அவனுக்கு அறிவே இல்லையா என்று அவரை திட்டினான்.நான் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவரையே உற்று பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் புகைபிடித்து முடித்தவுடன், எதையோ தேடிக்கொண்டுருந்தார் நான் சற்றும் இடைவிடாமல் அவரையே பார்த்துக்கொண்டிருநெதேன். அவர் முகத்தில் சிறிய மாற்றம் நிகழ்ந்தது தேடியதை கண்டுபிடித்துவிட்டார் என்று நினைத்தேன்.அவர் புகைத்த சிகரெட் துண்டை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்துவிட்டு வந்து அமர்ந்தார்.

இந்த சம்பவம் என்னை பெறும் பாதிப்பை ஏற்படுத்தியது.நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் முழுவீச்சில் பரவிருக்கும் இந்த நேரத்தில் நாம் வெளிநாட்டவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிவை இது தான்.அவர்களிடமிருந்து உணவு முறை, பழக்க வழக்கங்கள், அடைகள், பொது இடத்தில் முத்தமிடுதல் என அனைத்தையும் நாம் முறையாக கடைபிடிக்கின்றோம். ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் தூய்மை மற்றும் சுகாதாரங்களை நாம் ஏன் கடைபிடிக்க முன் வரவில்லை. அவர்களின் வாழ்க்கை முறைகளுக்கு நம்மையும் மாற்றிக்கொள்ள நினைப்பவர்கள் ஏன் தூய்மையை கடைபிடிக்க முடியவில்லை என்று தெரியவில்லை. நாம் அவர்களிடமிருந்து இதையும் கடைபிடிக்க வேண்டும், இதுவே நம் சமுகத்திற்கும் நம் வருங்கால சந்ததியினர்களுக்கும் மிகவும் நன்மை தருவதாக இருக்கும். இனியாவது அவர்களிடமிருந்து தூய்மையை கடைபிடிப்போம்.

எழுதியவர் : கோபி (18-Dec-14, 12:10 am)
பார்வை : 515

மேலே