சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 23 சோபி ல்லு ஸப்த ஸ்வர – ராகம் ஜகன்மோஹினி

'ஜகன்மோஹினி' என்ற ராகத்தில் அமைந்த 'சோபி ல்லு ஸப்த ஸ்வர' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

பிரகாசிக்கும் ஏழு சுரங்களென்னும் அழகிகளைத் துதிசெய் மனமே!

நாபி, இதயம், கழுத்து, நாவு, நாசி ஆகியவற்றில் பிரகாசிக்கும் ஏழு சுரங்களென்னும் அழகிகளைத் துதிசெய் மனமே!

இருக்கு, சாமம் முதலிய வேதங்களிலும், சிறந்த காயத்ரி மந்திரத்தின் இதயத்திலும், தேவர், அந்தணர் ஆகியோரின் மனத்திலும், தியாகராஜனிடத்திலும் பிரகாசிக்கும் (ஏழு சுரங்களைத் துதிசெய்).

பாடல்:

பல்லவி:

சோபி ல்லு ஸப்த ஸ்வர
ஸுந்த ருல ப ஜிம்பவே மநஸா (சோ)

அனுபல்லவி:

நாபி ஹ்ருத் கண்ட ரஸந
நாஸாதுல லயந்து (சோ)

சரணம்:

த ர ருக்ஸாமாது லலோ
வர கா யத்ரீ ஹ்ருத யமுந
ஸுர பூ ஸுர மாநஸமுந
சுப த்யாக ராஜுநியெட (சோ)

இப்பாடலை CARNATIC VOCAL | SONGS OF THYAGARAJA | JUKEBOX என்று கூகிலில் பதிந்து, பிரபல குரலிசைக் கலைஞர் P.உன்னிகிருஷ்ணன் பாடுவதைக் கேட்கலாம்.

இப்பாடலை MS Subbulakshmi:sobhillu saptaswara என்று யு ட்யூபில் பதிந்து, பிரபல குரலிசைக் கலைஞர் M.S. சுப்புலட்சுமி பாடுவதைக் கேட்கலாம்.

இப்பாடலை sObhillu saptaswara - Dr. M. Balamuralikrishna – Carnatic என்று யு ட்யூபில் பதிந்து, பிரபல குரலிசைக் கலைஞர் M.பாலமுரளிகிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

இப்பாடலை Sobillu Saptaswara(Album- Gaana Ranjani)- Chinmaya Sisters என்று யு ட்யூபில் பதிந்து, குரலிசைக் கலைஞர்கள் சின்மயாஆ சகோதரிகள் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Dec-14, 10:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 121

மேலே