தீமீர் பிடித்தவன்

(ஒரு பக்கம் கதைகள்)



அரச பேருந்தில் ஏறினான் பார்த்தசாரதி. பேருந்தின் உள்ளே பார்த்தான் பெண்கள் என்று எழுதிருயிக்கும் அமர்வுகளில்(சீட்டில்)பெண்களே அமர்ந்திருந்தார்கள் ஆண்கள் என்று எழுதியிருந்த அமர்வில்(சீட்டில்)ஆண் பெண்யென்ற பேதமின்றி இருவருமே அமர்த்திருந்தார்கள்.ஊனமுற்றோர்/முதியோர் என்று எழுதியிருந்த சீட்டில் இரண்டு இளைஞசர்கள் அமர்த்திருந்தனர்.அதில் ஞாயமாக அமரவேண்டிய வயதானவர்கள் நான்கு பேருக்கும் மேல் நின்றுக்கொண்டு வந்தார்கள்.

பேருந்தில்- அன்பளிப்பாக வந்த எப்ம் ரேடியாவில் வைரமுத்துவின் நர்முகையே நர்முகையே பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. தமிழ்படித்த பார்த்தசாரதி பொதுவாக பாடல்களை இரசிப்பதை தாண்டி ஆழ்ந்து அனுபவிக்கும் பழக்கமிருந்ததால் அந்த பாடலை ஆழ்ந்து அனுபவித்தபடி பயணம் செய்தான்.

பேருந்தில் பயணசீட்டுகளை தனக்குரிய சீட்டில் அமர்த்த நபரை எழுப்பிவிட்டு அமர்த்தார் நடத்துனர்.

தன்னை எழுப்பிவிட்ட நடத்துனரை முரைத்து கோபத்தோடு எழுந்து நின்றார் ஒரு வயசானவர்.அவர் முகத்தை ஏறிட்டு பார்த்த நடத்துனருக்கு அவர் கோவம் புரிந்தது. இருந்தாலும் தனது பணியை செய்தப்படியிருந்தார் நடத்துனர்.

ஊனமுற்றோர்,முதியோர் சீட்டின் பக்கம் நகர்த்து வந்து நின்றார் அந்த ஆசாமி. பார்த்த சாரதி எதிர்ப்பார்த்தது போல் இது ஊனமுற்றோர்முதியோர் சீட்டு இதில்இளைஞசர்கள் நீங்கள் அமர்த்திருக்கிறீர்களே என்று கேட்கும் வக்கில்லாமல் அமைதியாய் நின்றார்.

இதே கேள்வியை பார்த்தசாரதிக்கு கேட்க தோன்றியது,ஆனால் மனதுக்குள் ஒரு தடை. முதியோர்தானே நீங்கள் ஏன் இதை சொல்லி அந்த சீட்டை பெறக்கூடாது, வயதானால் என்ன? ஏன் அந்த ஞாயமான கோபம் வரவில்லை.எல்லா விஷியத்திலும் சினிமா ஹீரோ போல் ஒரு இளைசன்தான் போரடவேண்டுமா? என்ற நியமான ஆதங்கத்தோடு ஊற்றோர் முதியோர் சீட்டை நோக்கி இரண்டடி நகர்த்தான் பார்த்தசாரதி.

நடத்துனர் அமர்விலிருந்து எழுந்த அந்த ஆசாமி பார்த்தசாரதியை தவிர நின்று வந்த அனைவருமே இறங்கினார்கள். இவர்கள் இரண்டுபேர் மட்டுமே நின்றுக்கொண்டிருந்தார்கள். அடுத்த நிறுத்தம் வந்தது, ஊனமுற்றோர் முதியோர் சீட்டின் பின் சீட்டு ஒருவர் அமரும் சீட்டு காலியாகியது.அந்த ஆசாமி முன்புறம் பார்த்துப்படியிருக்க ஓட்டுனர் சீட்டின் இடபுறமிருக்கும் சீட்டில் அமர்த்தவர்கள் அவருக்கு அந்த இடத்தை காட்டினார்கள்

அருகிலிருந்த பார்த்தசாரதி அந்த சீட்டில் அமர்ந்தான்.

தோற்று வீட்டால் எழும் கோவம் போல் அந்த ஆசாமிக்குள் கோவம் வந்தது. பார்த்த சாரதியைப் பார்த்து டேய் எழுந்திடுடா என்றார். வயதனவர் எழுந்திட வேண்டும் என்று தோனினாலும் டா யென்று சொல்லிய வன்மத்தால் சீட்டில் அழுத்தி அமர்த்தான்.

பக்கத்து சீட்டில் அமர்த்திருந்தவர் எப்பா வயசனவறோடு போட்டிப்போடுரியே,அவர் உட்காரட்டும் விடுப்பா யென்றதும் நெற்றிக்கண் திறந்த கோவத்தோடு இவ்வளவு நேரம் நீங்க அமர்த்திருந்திங்க ,வயசனவர்தானே இடம் கொடுக்க வேண்டியதுதானே எங்கு போச்சி உங்க மனிதாபிமானம் என்று கேட்க தோனினாலும் எழுந்து நின்று இவர் முதியோர்தானே? ஊனமுற்றோர் முதியோர் சீட்டு தனிய ஒழுக்கியிருக்க அத கேட்டு பெறலாமே? இந்த சீட்ட கேட்க எல்லா கூடுறீங்க என்ற நியாத்தை கேட்க அடுத்த கனம் தீமிர் பிடிச்சவன் என்று அடித்தார்கள். அடித்தவரில் ஊனமுற்றோர் /முதியோர் சீட்டில் அமர்ந்து வந்தவர்களும் அடங்கும்.

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (19-Dec-14, 11:03 pm)
சேர்த்தது : தேஇராகுல்ராஜன்
பார்வை : 379

மேலே