சனி செய்வது சரியே

சனியின் சித்தம் விதியின் சித்தம். மனிதனுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு மாறாக வாழும்போது விதியின் சித்தத்தின் மூலம் சனியின் சித்தம் நடக்கிறது. சனியின் சித்தத்தில் அகப்பட்ட மனிதர்கள் சனியை பலவாறு தூஷிக்க ஆரம்பித்துவிடுகின்றான். இவன் செய்கின்ற தவறுகளுக்கு ஏற்றவாறு சனி தனது சித்தத்தை இவனது வாழ்க்கையில் நடத்திக்காட்டுகிறான். இதை மறுக்கின்ற மனிதன் சனியின் திருவிளையாடலில் சந்திக்கின்ற சோதனைகளை அனுபவிக்கின்றான். சனியைப் போல் கொடுப்பானும் இல்லை. சனியைப் போல் கெடுப்பானும் இல்லை என்பது ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடர்கள் சில மனிதர்களின் ஜாதகங்களை பார்த்தவுடன் மேலும் சில பயத்தினை அந்த மனிதனுக்கு தூண்டிவிடுகின்றனர். இவர்களின் தூண்டுதலால் மேலும் சனியின் மேல் உள்ள வெறுப்பு அதிகரித்து விடுகிறது. எவராலும் வெல்ல முடியாத ராவனேஸ்வரனின் மகன் அபிமன்யுவை சனி தன் சித்தத்தின் ஆதிக்கத்தின் போது தீராத வேதனையை ராவனேஸ்வரனுக்கு தருகின்றான். அபிமன்யு பிறப்பதற்கு முன் ராவணேஸ்வரன் தன் குல ஜோதிடரை அழைத்து ஜாதகம் கணிக்க சொல்கின்றான். ஜோதிடரும் கணிக்கின்றார். அபிமன்யு பிறக்கும்போது எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் இருந்தால் அபிமன்யு நீண்ட ஆயுளுடன் இருப்பான் என்று கணித்துவிட்டார். அந்த கணிப்பின் அடிப்படையில் ராவணேஸ்வரன் ஒன்பது கோள்களையும் தன் சபைக்கு அழைத்து வருகின்றான். அந்த ஒன்பது கோள்களுக்கும் கட்டளை இடுகின்றான். ஒன்பது கோள்களும் அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து, ஜோதிடரின் கணிப்பின்படி அவைகள் அமர்ந்து விட்டன. ஆனால் சனி மட்டும் பிரம்மனிடம் ஞான திருஷ்டியின் மூலம் காரணம் அறிகின்றான். அதற்க்கு பிரம்மனும் விளக்கு- கின்றார். இதை கேட்டதும் சனிக்கு தன் சுய ரூபத்தை அபிமன்யு பிறந்ததும் காட்டிவிட்டார். மறுகணம் ராவணேஸ்வரன் மீண்டும் ஜோதிடரை அழைத்து மறு கணிப்பு நடத்து என்று கட்டளை இடுகின்றான். ஜோதிடரும் மறு கணிப்புக்கு ஆயுத்தமாகி கணிக்கின்றார். ஏற்கனவே கணிக்கப்பட்டதற்கும், தற்போது
கணிக்கப்பட்டதற்கும் வித்தியாசம் இருப்பதை அறிந்து நடுங்கிவிட்டார். இவரது நடுக்கத்தை அறிந்த ராவணேஸ்வரன் கடுங்கோபமுற்று அவரை எரிப்பதைப் போல் பார்த்தான். ஜோதிடர்,"பிரபு...... தங்களது மகனது பிறப்பில் விதி விளையாடிவிட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை.என்று தயக்கத்துடன் கூறினார். இதைக் கேட்டதும் ராவணனுக்கு அந்த விதி எந்த கிரகத்தின் மூலம் விளையாடியுள்ளது என்பது சொல்லுங்கள் என்றான். அவரும் "பிரபு.........சனி தன் சித்தத்தின் அடிப்படையில் தவறு செய்துள்ளது. இனி அந்த சனியின் சித்தத்தை எவராலும் மாற்ற முடியாது. தங்களது மகன் அபிமன்யு அற்ப ஆயுளில் மாண்டுவிடுவான் என்கிறது மறு கணிதம்படி.என்றார். ஆக ஊழ்வினைப் பயனாக சனி சித்தத்தின் மூலம் அறியவே, மனிதன் தான் வாழ்கின்ற காலத்தில் செய்கின்ற தவறுகளுக்கு தன் பெயர்ச்சின் போது வழங்குகின்றார். மனிதன் தான் வாழ்கின்றக் காலத்தில் செய்கின்ற தர்ம புண்ணியக் காரியங்களுக்கு தன் பெயர்ச்சியின் போது வாரி வழங்கும் சனியாக பெயர்கின்றார். மேலும் ஒருவரது ஜாதக அடிப்படையில் சனியின் அமர்வின் நிலைக்கேற்றவாறு 2-1/2 ஆண்டுகளில் மாறுகின்ற நிலை வரும்போது இவரது சித்தம் நன்றாகவே மனிதனால் அறியமுடிகிறது. கொடுப்பதற்கு சனி சித்தம் இருந்தால் தடுக்க முடியாது. கெடுப்பதற்கு சித்தம் இருந்தால் தடுக்கவும் முடியாது. ஜோதிடர்களிடம் வாக்கு வன்மை இருந்தால் சனி விதியின் சித்தத்திற்கு சிறந்த வழிக்காட்ட முடியும். இதை அறியாத பாமரர்கள் வியாபாரத்திற்கு ஜோதிடம் பார்பவரிடம் தன் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகின்றார்கள். சனி செய்வது சரியே. ஆம் வியாபாரத்திற்கு ஜோதிடம் பார்பவரிடம் அவனை அனுப்பி வைப்பதும் சனியே. அங்குதான் சனி தன் திருவிளையாடலை ஆரம்பிக்கின்றான். அவர்கள் கூறும் வழி முறைகளைப் பின்பற்றி சனியைக் குளுரவைக்க பாடுபடுகிறார்கள். சனியைக் குளுரவைக்க எந்த சோதிடராலும் கணிக்க முடியாது. சனி தன் கடமையை செய்யும் போது மனிதனும் தன் கடமையை செய்ய வேண்டும். மனிதன் ஆற்றக் கூடிய கடமை எளியவரையும் அரவணைத்துப் போவதுதான். சனி எளிய கிரகம். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைத்தான் சனி மிரண்டால் சாமான்யனும் மிரண்டு போவான் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். மேலும் சனியைப் பற்றிய வரலாறு. ஒருமுறை சனி கைலாயத்திற்கு சென்று ஈசனை வழிப்பட்டு, தான் செய்யப் போகும் காரியத்தை ஈசனிடம் சொன்னார். "கைலாயப் பிரபுவே..............இக்கணம் முதல் தங்களை ஆட்கொள்ள வேண்டிய விதியின் கட்டளையில் உள்ளேன். தங்களை நான் ஆட்கொள்ளும் போது தாங்கள் என் வலிமையை அறிவீர்கள் என்றார். அதற்கு ஈசன், "நீர்! என்னை ஆட்கொள்ளப் போகிறாயா? உம்மால் என்னை என்ன செய்ய முடியும் என்று மமதையுடன் கோபமுற்று பேசினார். இதை உணர்ந்த சனி அங்கிருந்து நகர்ந்து விட்டார். சில நாழிகைக் கழித்து, ஈசன் தன் மனைவியிடம், நான் சில காலம் கடுந்தவம் இருக்கப் போகின்றேன். எப்போது வருவேன் என்று தெரியாது. எனவே என்னைப் பற்றிக் கவலைக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார். ஈசனின் தவம் முடிந்ததும், அவருக்கு எதிரில் சனி நின்றிருந்தார். ஈசன் சனியிடம் வினவினார். சனியே .............உம்மால் என்னைப் பேடிக்க முடியாது என்பதை இப்போதேனும் அறிவீரோ? என்றார். அதற்கு, சனி ........அய்யனே!. விதி இட்டக் கட்டளையை உம்மிடமும் நடத்தி விட்டேன் என்பதைத் தான் சொல்ல காத்திருந்தேன் என்றாராம். என்ன.....நீர் எம்மை எப்போது பிடித்தீர்? எப்போது நான் உம்மிடம் சரணடைந்தேன்? கூறும் என்றார். அய்யனே......நீர் உமது மனைவியை விட்டுப் பிரியவேண்டும் என்பதுதான் விதி. அந்த விதியை என்மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் சனி. ஈசனே நெகிழ்ந்து,சனியைப் போற்றி, இனி நீர் சனி மட்டும் அல்ல, சனீஸ்வரர் என அழைக்கப்படுவீர். உம்மோடு நானும் இணைந்து மனிதர்களுக்கு வரக்கூடிய நன்மை தீமைகளை முன் கூட்டியே நிகழ்த்துவோம் என ஆசீர்வதித்துள்ளார்.ஆக சனி செய்வது எல்லாம் நன்மைக்கே என்று இருந்தால் அவரால் யாதொரு தீங்கும் வாராது என்பது திண்ணம்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (20-Dec-14, 10:37 am)
சேர்த்தது : சந்திர மௌலி
பார்வை : 259

சிறந்த கட்டுரைகள்

மேலே