நீலக்குயில் தேசம்16---ப்ரியா

கடந்த 4வருடங்களாக தொடர்ந்து அடிக்கடி இந்த கனவுதேஷம் வருவது வழக்கமே அந்த காதலனின் முகத்தை இதுவரைக்கயல் காணவில்லை........ஆனால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அந்த கனவுக்காதலனாக ராகேஷ் தெரிந்தான்.......ஆனால் மறுபடியும் இப்பொழுது அந்த ஆசிரியர் முகம்......?என்ன செய்வது ஏன்தான் இப்படி என்று குழப்பத்தோடு குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தாள் கயல்..........

தன் பேத்திக்கு எந்த பிரச்சனையுமே வரக்கூடாது என்றும் நாளைக்கு சாமியார் என்ன சொல்லப்போகிறாரோ என்ற எண்ணத்திலும் பயந்துகொண்டே அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார் இன்னொருபுறம் கயலின் தாத்தா........

இதற்கான முடிவு நாளைக்கு தெரியும் என்ற நம்பிக்கையில் போய் படுத்தார் கயலின் தாத்தா......

ஆனால் கயலுக்கு மட்டும் தூக்கமே வரவில்லை இந்த கனவு இனிமேல் வரக்கூடாது என்று மனதில் தனது இஷ்ட தெய்வமான முருகனை மனதில் நினைத்துவிட்டு நிம்மதியாய் போய் தூங்கினாள்.

அடுத்தநாள் அதிகாலையில் சூரியன் கண்விழிக்கும் முன்னே தான் கண்விழித்து தன அம்மாவுடனும் பாட்டிகளுடன் அமர்ந்து அவர்கள் சமையல் செய்யும் போது இவளும் பேசிக்கொண்டிருந்தாள் தாத்தா மற்றும் இரண்டு பாட்டிகளுக்குமே கயல்னா உயிராய் இருந்தது.அவ்வள்வு செல்லம்.

சரியாக 7மணிக்கு அனைவருமே கொல்லிமலை சாமியாரைப்பார்க்க காரில் கிளம்பினர்.....பயணம் வெகுதூரமாய் இருக்க......தாத்தா இப்பவாது சொல்லுங்க நாம எங்க போறோம் என்று விசாரித்தாள் கயல்விழி........?

ம்........உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கப்போறோம் என்று கிண்டலடித்தார் தாத்தா.....மாப்பிள்ளையா எனக்கா என்ன தாத்தா விளையாடுறீங்ககளா?நாள் ஏற்கனவே பார்த்துட்டேன் என்றாள் கயல்....என்னடி சொல்றா என்று அம்மா ஆவேசப்பட....அதில்லமா நான் கனவுல பார்த்துட்டேன்னு சொல்லவந்தேன் என்று எப்படியோ சொல்லி சமாளித்தாள்.

இப்போதுதான் அனைவருமே நிம்மதியடைந்தார்கள்....!

அப்போது தாத்தா.....இன்னிக்கு நம்ம ஒரு கோவிலுக்கு போறோம் கயல்குட்டி அங்கிருக்கும் சாமியாரை ஒருமுறை நான் மட்டுமே பார்க்க வந்தேன் அந்த சமயம் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்து வரவேண்டும் என சொல்லியிருந்தார் அதற்கான சரியான நேரமாய் இன்று அமைய அழைத்து வந்துவிட்டேன் என்று பெருமையாய் சொன்னார் தாத்தா........

ஓ இதுவா மேட்டர் "கொல்லிமலை" பெயரை கேட்கவே அழகா இருக்குது தாத்தா அது காடு மலை போன்ற பகுதியா? எல்லா இடமும் சுற்றி பார்த்துவிட்டு வரலாமா? என்று கெஞ்சலாய் தாத்தாவிடம் கேட்டுவிட்டு தாத்தாவின் இருக்கைக்கு பக்கத்தில் வந்தமர்ந்து ஒட்டிக்கொண்டாள் கயல்................சரிமா எல்லா இடமும் பார்த்துட்டு நிதானமா வரலாம் என்று அந்த இடத்தின் அழகினையும் ரசித்து ரசித்து சொல்லி ஆசைக்காட்டினார் தாத்தா.......!

கயலுக்கு கேட்கவே இதமாய் இருந்தது அந்த சூழல் கண்களை மூடி ஒருமுறை ரசித்துக்கொண்டாள்.

கற்பனையிலேயே இவ்வளவு அழகா இருக்குதே நிஜத்தில் ஹையா.....என்று தன்னையும் மீறி சந்தோஷத்தில் கத்தினாள் கயல்.

சரியாக 3மணிநேரம் 20நிமிடங்களில் அந்த கொல்லிமலையை அடைந்தார்கள். அந்த இடம் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்தது மூலிகைச்செடிகளின் நறுமணம்தான் அதிகமாய் இருந்தது மலைப்பகுதியென்றாலும் அந்த இடம் மிகவும் சுத்தமாய் இருந்ததை நன்கு உணர்ந்தாள்.......10 நிமிடங்கள் நடந்து வந்தனர் காட்டுப்பகுதி வழியாக உள்ளே சென்றதும் எழில்பொங்கும் அழகோவியமாய் ஒரு கோவில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்தது ஆனால் அந்த கோவிலுக்கு அழைத்து செல்லாமல் அதற்கு பின்புறம் அழைத்து சென்றார் தாத்தா........."தாத்தா என் கோவில் இங்கிருக்கும் போது வேற எங்கயோ அழைத்து செல்றீங்க"என்று மனதிற்குள் நினைத்ததை கேட்டுவிட்டாள் கயல்..........சாமியார் அந்தப்பக்கம்தான் இருப்பார் என்று சொல்லி அனைவரையும் அழைத்துவிட்டு சென்றார்.

பின்புறம் சென்றவளுக்கு வியப்பு ஆஹா! இப்டி ஒரு அற்புதமான, தூய்மையான, அழகான இடமா? தூய்மை என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த இடம்தான் தாத்தா அப்டி இருக்குது என்றாள்......அழகிய குடில் போன்ற சிறு சிறு குடிசை வீடு 3,ஒன்று பெரியது மற்றது இரண்டும் சிறியது அதில் பூக்களாலும் துளசி போன்றவற்றாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது......அந்த பெரிய குடிசையிலிருந்து ஒரு அழகிய பதுமை வெளியே வந்து வரவேற்று தண்ணீரைக்காட்டி மௌன பாஷையில் ஏதோ சொல்ல தாத்தா அதன் பக்கம் சென்று அந்த தண்ணீரால் கால்களை அலம்பிக்கொண்டு மற்றவர்களையும் சுத்தம் செய்துவிட்டு உள்ளே வரும்படி சைகை செய்தார்.

"இந்த இடத்திற்கு நாம் வரத்தகுமோ....?"என்ற எண்ணம் மனதிற்குள் தோன்றியது...அப்படியான இடம்தான் அது.......!

5பேரும் உள்ளே செல்ல தியானம் செய்துகொண்டிருக்கும் முனிவர் போன்ற ஒரு சாமியார் உள்ளே அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தார் இவர்களுக்காகவே காத்திருந்தவர் போல் தலையசைத்து அழைத்தார்.....!

அனைவரையுமே ஒருமுறை பார்த்தவர் கயல்விழியை மட்டும் சிறிதுநேரம் தன் பார்வையால் ஆராய்ச்சி செய்துவிட்டு ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு அமர செய்தார்.........அவரைப்பார்த்ததுமே கயல்விழிக்கு சிரிப்பு தன்னையும் மீறி வந்தது அம்மா முறைக்க எப்படியோ கட்டுபடுத்திவிட்டு அமர்ந்தாள்.......!

கயலின் ஜாதகத்தை வாங்கியவர் அவளது முகத்தை திரும்ப திரும்ப ஜாதகத்தினோடு உற்றுப்பார்த்தார்.

ஏன் இந்த சாமியார் நம்மை இப்படி பார்க்கிறார் ஒருவேளை நமக்காகத்தான் இந்த கோவில் வருகையோ?என்று அம்மாவை சந்தேகமாய் பார்க்க அவர்களோ இவளைக்கண்டுக்காமல் அந்த சுவாமியையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

சிறிது நேர பார்வைக்குப்பிறகு பேச ஆரம்பித்தார் சுவாமிஜி......கயலைப்பற்றி என்னப்படிக்கிறாள் என்றும் தோழிகளையும் பற்றியும் விசாரித்துக்கொண்டவர் சாதாரணமாக அவர் கேட்டதால் இவளும் சாதாரணமாகவே பேசினாள்.

என்னம்மா உன்னை கனவிலோ இல்லை நெஜத்திலோ யாராவது மிரட்டுவது போலவோ இல்லை எங்கோ அழைத்து செல்வது போலவோ கனவு வருகிறதா என்று அவர் கேட்டார்?

ஆம் என்றாள் கயல்.

விளக்கமாக சொல்லுமா என்று தாத்தா சொல்ல............நீங்களெல்லாம் சிறிது நேரம் வெளியில் இருங்கள் என்று சாமியார் சொன்னார்.......அதன்பிறகு இவளிடம் பேச ஆரம்பித்தார்.

நீ சொல்லுமா...என்றவர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்........

கனவு வரும் ஆனா யாரும் மிரட்டுவதில்லை.......என்று சுருக்கமாய் சொன்னாள் கயல்.

எதையும் மறைக்காதம்மா அப்போதுதான் அதற்கான பதில் கிடைக்கும் என அவர் சொல்ல.!

தனது கனவைப்பற்றி விளக்கமாய் சொன்னாள் அவள்.

அவள் சொல்லிமுடித்ததும் வெளியில் அமர சொன்ன இவள் குடும்பத்தை உள்ளே வர சொன்னார்........அவர்கள் முன்னிலையில் பேசினார் சாமியார்........!

உங்கள் பொண்ணுக்கு வரும் கனவு சாதாரண கனவு இல்லை ஜாதகத்தையும் அவள் நடவடிக்கைகளையும் இந்த கனவின் சூழலையும் வைத்துப்பார்க்கும் போது நிச்சயம் இவளுக்கு முன்ஜென்மத்துல ஏதோ ஒன்று நடந்திருக்குது......இவளோட பழக்க வழக்கத்தை வைத்து பார்த்தால் கண்டிப்பா இவள் 2பேர்ல ஒரு ஆளாதான் இருக்கணும்........1.அரசகுமாரி,2.ஆதிவாசி.

முன்ஜென்மத்துல இவளோட வாழ்க்கையில் ஏதோ விபரீதம் நடந்ததால இவளும் இவளுடைய காதலன்/கணவன் ஒன்று சேராமலே பிரிந்திருக்கணும் அதனால இந்த ஜென்மத்துல இப்டி கனவுல கடந்த கால உண்மைகளை சொல்லுது அவனது பழைய ஆன்மா ஆனால் இவளேதான் அவனை சந்திக்கவேண்டுமென விதி இருக்கிறது அதனால்தான் இந்த கனவு தினமும் இவளுக்கு வருகிறது என்று அழுத்தமாய் சாமியார் சொன்னார்.........!

இதற்கு என்னதான் முடிவு ஐயா என்று கயலின் அம்மா கேட்டுவிட்டார்...?

தொடக்கமும்......முடிவும் இவளிடம்தான் உள்ளது என்று கயலைக்காட்டினார் சாமியார்.......மற்றவர்களுக்கு கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் விளித்துக்கொண்டிருந்தனர்.........

கயல் இன்னும் ஆர்வமாய் அவரை நோக்க அவர் சில வழிமுறைகளை அவளுக்கு சொல்லிக்கொடுத்தார்.......அதாவது கயல் அந்த கனவில் வரும் பையனை இப்போதே பார்த்தும் இருக்கலாம் பார்க்காமலும் இருக்கலாம் பார்த்திருந்தாலும் அவன்தான் உன் கனவு காதலன் என்று உன்னால் இப்போது உறுதியாக சொல்லமுடியாது.......உனது 21-ம் வயதில்தான் நீ அவனை அறிவாய் அதுவரைக்கும் நீ பொறுமையாய் இரு இந்த கனவுப்பற்றி யாரிடமும் வெளியில் சொல்லவேண்டாம் என்று கண்டிப்பாய் சொன்னார் சாமியார்.......!

21-ம் வயதிலா?அப்போ இந்த ராகேஷ்.....?என்று மனதிற்குள் கேள்விக்குறியாய் அவரைப்பார்த்தாள் கயல்?????




தொடரும்.......!

எழுதியவர் : ப்ரியா (22-Dec-14, 3:11 pm)
பார்வை : 333

மேலே