இன்று டிசம்பர் 25 -இறை இயேசுபிரான் பிறந்தநாள் -கிறிஸ்மஸ் பெருநாள்

ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னம் காட்டும்
வண்ணம் புதுமொழிகள்
பல பகர்ந்த பாலகன்
இயேசு பிறந்தநாள் இன்று !

பசியினால் வாடி வேதனை
உற்றோரை காக்கும் பொருட்டு
தன் வலி பொறுத்து
சிலுவை சுமந்த
இறை இயேசு பிரான்
பிறந்தநாள் இன்று !

மனிதத்தைத் தொலைத்துவிட்ட
மகத்தான பூமியிலே
தனிமனித நேயத்தை
தரனியெங்கும் விதைத்திடவே
வித்தகர் இயேசு
அவதரித்த நாள் இன்று !

வன்முறைகள் சூழ்ந்த இந்த
வக்கிர பூமியிலே
துன்பநிலை மாற்றி
அன்புநெறி நிறைத்திடவே
அய்யன் இயேசு அகிலத்தில்
உதித்த நாள் இன்று !

ஆயுதமே வேதமென்றும்
அடக்குமுறையே கொள்கையென்றும்
அன்பை வெறுப்பவர்க்கு
நற் பண்பைத் தருவதற்கு
நல்ல மேய்ப்பன்
பிறந்த நாள் இன்று !

ஒளியாக வந்த இந்த
உத்தமனாம் இறை மைந்தன்
நம் துயரை துடைத்திடவே
மனத் துணிவைத்
தந்திடவே உதயத்து விடிவெள்ளி !
நம் இதயத்தைப் புதுப்பிக்க
இறை பாலன் பிறந்தநாள் இன்று ...!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Dec-14, 10:18 pm)
பார்வை : 129

மேலே