குண்டக்க மண்டக்க

எஜமானி ;;;இந்தாப்பா பொட்டிக் கடையில போய் சாவி வாங்கிட்டு வா ...
வேலைக்காரன் ;;ம்ம் சரிங்கம்மா .மனதிற்குள் முனகினான் ..என்ன இது 5 ரூபாய்க்கு போய் சாவி வாங்கச் சொல்றாங்க சரி கேக்கலாம் ...
இந்தாங்க சாவி இருந்தா கொடுங்க ..சாவிக்கு பூட்டு இருக்கா?
எதுக்கு கேக்றீங்க ?
இந்தா தம்பி பெட்டிக் கடையில வெறும் சாவி எப்டி தருவாங்க பூட்டு இல்லாம ...
அவங்க 5 ரூபா கொடுத்து வாங்கியாரச் சொன்னாங்க பூட்டு கேக்றீங்களே ..
எஜமானியிடம் ..அம்மா ! பூட்டு இருந்தாதான் தருவாங்களாம்
எஜமானி; நீ எந்த கடைக்குப் போனே ?
அதாம்மா ! நிறையா பெட்டில்லாம் வச்சுருக்காங்களே ஆனந்தக் கடைல கேட்டேன்
அட கடவுளே ! நா கேட்டது படிக்கிற புத்தகம்தா
??????
######################################################################################################
இந்தாப்பா இதையாவது போய் ஒழுங்கா வாங்கிட்டு வா இந்தா 15 ரூபா
போய் குங்குமம் வாங்கிட்டு வா
பெட்டிக் கடைக்குப் போனான் 15 ரூபாய்க்கு குங்குமம் கொடுங்க
இந்தாப்பா பேப்பரில் மடித்து கொடுத்தார் ..
இந்தாங்கம்மா
என்னடா ! பொட்டலத்ல வாங்கிட்டு வர ?... இதுவும் உனக்கு தெரியாதா ?
என்னதும்மா
அதுவும் படிக்கிற புத்தகண்டா
?????
######################################################################################################
சரி போய் இதயம் வாங்கிட்டு வா இந்தா 15 ரூபா
அதே பெட்டிக் கடையில் ....
இதயம் தாங்க ..அம்மா கேட்டாங்க
கடைக்காரர் ...என்னது இதயமா?
அதுக்கு நா எங்கடா போவேன்
கேக்ராங்களே
யாரு ?
எஜமானியம்மா
அந்தம்மா கேட்டா நீ இங்க வந்து கேப்பியா ?
ஒழுங்கா ஓடிப் போய்டு
எஜமானியிடம் ... அம்மா தரமாட்டேன்க்ராங்கம்மா அடிக்க வர்றாங்க
என்னது எது கேட்டாலும் தர மாட்டேன்க்ரானா? ...அவன் பொட்டிக் கடயா காலி பண்றேன் பாரு
என்னய்யா இதயம் கேட்டா தரமாட்டேன்குற ?
இந்தாம்மா ! என்ன விளையாடற? உன் புருசன்ட்ட சொல்லிடுவேன்
யோவ் ...! புத்தகம் கேட்டேன்யா
புத்தகமா ? சரியாப் போச்சு ... அவன் அப்டி கேட்டதனே.... அம்மா கேட்டாங்க நு சொன்னான்
முதல்ல உங்க வேலைக்காரன் மாத்துங்க
######################################################################################################
மறுநாள் ...அம்மா ராணி கேட்டாங்க
எந்த ராணி ?
உங்ககிட்ட அதுவாது இருக்கா
என் பொண்ணு பேர் ராணி எதுக்கு கேக்கற ?
யோவ் உலகத்ல ராணி உன் பொண்ணுதானா ?
புத்தகம் கொடுய்யா இல்ல நடக்றதே வேற...
ராணிலாம் இல்ல ஒழுங்கா போய்டு
அம்மா! ராணியத் தரமாடெங்க்ரான்
இவன் சரிபட்டு வரமாட்டன் பொட்டிக் கடை வைக்ரதுக்கு லாயக்கில்ல
யோவ் ஒழுங்கா கேட்டதை கொடு
அம்மா! ராணி ...இங்க வாம்மா
யோவ் நா என்ன சொல்றேன்னு புரியாதா?
எங்க வீட்டு ராணியத்தானே கேட்டீங்க ..
யோவ் எங்க வீட்டு நாய் இங்க வந்துடுச்சு அத்தான் கேட்டேன்
சரியான லூசுய்ய நீ
உங்க வேலைக்காறன மாத்துங்க அவன் ஒழுங்கா சொன்னா நா ஏன் அப்டி சொல்றேன்
சரியாப் போச்சு ..வேலைக்காறன மாத்த வேண்டியதுதான்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-Dec-14, 1:38 pm)
பார்வை : 565

மேலே