சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 28 மாறு பல்க – ஸ்ரீரஞ்சனி

'ஸ்ரீரஞ்சனி' என்ற ராகத்தில் அமைந்த 'மாறு பல்க' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

திருமகளின் மனத்திற்கினியவனே! நீ மறுமொழி கூறாமல் இருப்பதேன்?

அயோத்தியில் உறைபவனே! விட புருடரையும், திருடர்களையும் போற்றி நான் பஜனை செய்தேனா?

வெகுதூரத்திலும், (சமீபத்தில்) என் இதயத் தாமரையிலும் அமர்ந்திருக்கும் உன் வழியையறிந்து மகிழ்ச்சியுற்றிருக்கும் எனக்கு (நீ மறுமொழி கூறாமல் இருப்பதேன்?)

பாடல்

பல்லவி:

மாறு ப ல்ககுந்ந வேமிரா
மாமநோரமண (மா)

அனுபல்லவி:

ஜார சோர ப ஜந ஜேஸிதிநா
ஸாகேதஸத ந (மா)

சரணம்:
தூ ரபா ரமந்து நாஹ்ருத
யாரவிந்த மந்து நெலகொன்ன
தா ரிநெறிகி ஸந்தஸில்லி நட்டி
த்யாக ராஜநுத (மா)

Marubalka - Masterpiece Vol. 1 (Live 1984) By Nedunuri Krishnamurthy என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் நெதுனூரி கிருஷ்ணமூர்த்தி பாடுவதைக் கேட்கலாம்.

Marubalka. Thyagaraja, Sriranjini Prince Rama Varma என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் இளவரசர் இராம வர்மா பாடுவதைக் கேட்கலாம்.

Marubalka - Sriranjani - Smt.Ranjani. Smt.Gayathri என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர்கள் ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் பாடுவதைக் கேட்கலாம்.

SANJAY SUBRAHMANYAN-MARUBALGA என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் சஞ்சய் சுப்ரமணியம் பாடுவதைக் கேட்கலாம்.

Marubalka என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் நித்யஸ்ரீ மஹாதேவன் பாடுவதைக் கேட்கலாம்.

Sikkil Mala Chandrasekar -Flute -Marubalka- Sreeranjani என்று பதிவு செய்து குழலிசைக் கலைஞர் சிக்கில் மாலா சந்திரசேகர் புல்லாங்குழல் வாசிப்பதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Dec-14, 10:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே