தலைமுறைகள் விமர்சனம்

தலைமுறைகள்... தமிழ் சினிமாவின் அடையாளம் பாலுமகேந்திரா எழுதி இயக்கிய படம். தற்செயலாக அல்லது வேண்டுமென்றே அல்லது விளம்பரம் இல்லாமை என எப்படி வேண்டுமானாலும் காரணம் வைத்துக்கொண்டு சுய சமாதானம் சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் இந்தப் படத்தை பார்த்த பிறகு சமாதானங்கள் இந்தப் படத்தையா பார்க்காமல் விட்டோம் என குற்ற உணர்வுகளாகிப் போவது நிச்சயம்.
நான்கூட அதே குற்ற உணர்வோடுதான் எழுதுகிறேன்.

காவேரிக்கரை கிராமத்தின் பழமை ஊறிய முதியவர் வேடத்தில் இறுகிப் போனவராக நடித்திருக்கிறார் பாலு மகேந்திரா அவர்கள். தனது வைராக்கியத்தையும் இறுமாப்பையும் ஒரு குழந்தை அதாவது அவரது பெயரன் வந்து நெகிழ்த்து உடைப்பதுதான் படம். தன் பெயரனுக்கு தமிழ் தெரியாது என்று வருத்தப்படும் இடங்களிலாகட்டும் அதற்கான காரணங்களை அவரது மருமகள் விளக்கும் இடங்களில் ஆகட்டும் மனிதர் நாம் தமிழை எந்த இடத்த்தில் நிறுத்ததி வைத்திருக்கிறோம் என்று சாட்டையடி கொடுக்கிறார்.

ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கிறதைப் பார்க்கும் வளர்ந்த குழந்தை தன் அம்மாவிடமும் சென்று தானும் பால் குடித்தேனா எனக் கேட்கிறது .. அவளும் ஆமாம் என்று சொல்ல இப்பவும் குடிக்கலாமா எனக் கேட்க நீ குழந்தையாக இருக்கும்போதே எல்லாம் குடித்து விட்டாய் எனச் சொல்லும் தாயை வாரி முத்தமிட்டு ஓடுகிறது அக் குழந்தை ... இதைவிட பெண்மையை எப்படி போற்றிவிட முடியும். பெண்களுக்கெதிரான சமூக அவலங்களை சுட்டிக்காட்ட முடியும்...?

குழந்தையோடு குழந்தையாக மழையில் ஆடி துவண்டு வீழும் வேளையில் " தாத்தாவை மறந்து விடாதே .. தமிழை மறந்து விடாதே " என்று தன் பெயரனுக்குச் சொல்லி வைக்கும் அந்தக் காட்சி அவரை தீர்க்க தரிசி என்றே நினைக்கத் தோன்றுகிறது .

படத்துக்கு இசை.... ராஜா சார்.. ரொம்ப முக்கியமானது தேவையான இடங்களில் மட்டும்.. இசை கேட்கும் பொழுதெல்லாம் இனம் புரியாத எதுவோ ஒன்று உள்ளில் உருள்கிறது.....

தலைமுறைகள் ..... சொல்லிக் கொடுத்துவிட்டு போயிருக்கும் வாழ்க்கை.. கண்டிப்பாக பார்க்க வேண்டும்....

எழுதியவர் : நல்லை .சரவணா (9-Jan-15, 1:33 pm)
பார்வை : 338

மேலே