சாதி ஒழி மதம் சாதி அழி

அவசரமாய் கூடினோம், அறிமுகப்படுத்திக்கொண்டோம்
சாதி மதம் இனம் தாண்டி நமக்கொரு குணமிருப்பதாய்
சொல்லாடலில்,கருத்துப்பகிர்வில் இன்ன பிறவிலும்-தனிப்பட்டோம்
சங்கங்கள் கண்டோம் –கண்டம் கடந்தும் கூடினோம் –சாதியை
ஒழிப்பதா? முன்னிலும் வலிதாய் புதுப்பிபதா ?
வரலாற்றை சாதகமாக்கி முன்னேறினோம்- இப்போது, ஒழிப்பதெனில், எதை? ஏன்?
உயிரோடெரிக்கும் காதல் கொலைகள் ஒழி- சாதி ஒழியும் தானாய்
மனிதர் அழுக்கை மனிதர் அள்ளும் முறை மாற்று – சாதி ஒழியும்
கடவுள்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்- சடங்குகள் செய்யும்
பூசாரியால் அல்ல கடவுள் – சாதி ஒழியும் – பூசை குறை
உணவும் கல்வியும் வேலையும் அனைவருக்கும் சமமாயின்- தானே
ஒழியும்-கொஞ்சம் பொறுங்கள் வளருது அடுத்த தலை முறை
சாதியும் மதமும் அற்று .... தானே ஒழியும், அழியும்

எழுதியவர் : Sethu (15-Jan-15, 3:09 pm)
சேர்த்தது : ரிஷி சேது
பார்வை : 287

மேலே