எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
கல்யாண தரகர் - Others

கல்யாண தரகர் 

கல்யாண தரகர்

கல்லூரி வாயில்
திரைப்பட கொட்டகை
நவீன மால்கள் நடை பாதைகள்
நெடுஞ்சாலை, பூஞ்சோலை என

பல காலம் தவம் கிடந்தும்
பலனற்று மனம் உடைந்து
தாரம் ஒன்று தருவீரா என
தரகரிடம் நான் கேட்டேன்;
தலையிலிருந்து கால் வரை நோக்கி
வெற்றிலை வாயில் மென்றபடி
முகத்தை முன் சுளித்து
தரகர்தம் கூறுகிறார்:

படிப்பற்ற பெண்களும் உண்டு
பள்ளி படி ஏறியவர் உண்டு
மேற் பள்ளி சென்றவருண்டு
கல்லூரி கடந்தவருமுண்டு;


பேரழகி பலரும் உண்டு
வேலை தெரிந்த சிலரும் உண்டு
அருகதையற்ற அண்டையாரிடம்
சண்டையிடும் குண்டரும் உண்டு;

மேல் நாட்டிர்க்குகந்த பெண்டிரும் உண்டு
பொய் பல் மாட்டிய கிழவியும் உண்டு
மரபுடைய பல மாதரும் உண்டு
மரபற்ற விலை மாதரும் உண்டு;
மாத வருமானத்தை நாளொன்றிலேயே
கரைய வைக்கும் விரயவருண்டு;
காந்தலை போல் கருஅழகியுமுண்டு
பிறை சந்திரன் போன்ற பேரழகியும் உண்டு;

பேராசை உடைய பெரு வீடும் உண்டு
சிற்றாசை தரும் சிறு வீடும் உண்டு;
பரந்த மனமுடைய பெருமனும் உண்டு
இடுப்பளவே உயர ஸ்பெஷல் சைசும் உண்டு;

மற்ற ஆசையிருப்பின் வேறு சிலவும் உண்டு
அரும்பு மீசை அழகனும் உண்டு;
இலவச பட்டியல் இத்துடன் தீர்ந்தது
இனிமேல் கூறுதல் செலவுடன் ஆகும்;

கண்ணளவில் காதலே
ஐயோ போதுமென
அங்கிருந்து அதிர்ந்து
அடி நான் பெயர்ந்தேன்!

சம்பத்




மொத்த தேர்வு :

0

x

email


எழுதியவர் :கல்கத்தா சம்பத்

நாள் :18-04-2011 04:52:12 PM
Added by :sampath kolkata
பார்வை :160


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்



நண்பர்களின் கருத்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me