===+++பொங்கல் கவிதை போட்டி+++===

அனைவருக்கும் வணக்கம்,

ஐந்து வருடங்களாக இந்த தளத்தில் நான் இருந்துகொண்டு இருக்கிறேன். இதுகொஞ்சம் நீளமான கட்டுரையாகும். கொஞ்சம் சிரமம் மேற்கொண்டு பொறுமையாக வாசித்தால் மிக்க நலம்.

இந்த ஆண்டு பொங்கல் கவிதைபோட்டி, உங்களின் மேலான ஆதரவோடு சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது, இன்னும் ஓரிரு நாட்களில் பரிசை வென்ற படைப்புகள் எது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். எது எப்படி இருந்தாலும் பரிசை வெல்லப்போவது நீங்களாகவோ அல்லது உங்கள் தோழர்களாகவோதான் இருக்கப் போகிறார்கள், ஆகையினால் உங்கள் தோழர்களை வாழ்த்தி அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த தயாராகவே இருங்கள்.

இந்தமுறை தம்பி கலை அவர்களின் தலைமையில் பொங்கல்விழா கவிதைபோட்டி சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது, ஆகையினால் தம்பி கலையின் இந்த தமிழ்ப் பணியினை ஒவ்வொருவரும் பாராட்டியே ஆகவேண்டும்.

அய்யா காளியப்பன் எசக்கியேல், துறைவன், சிவகவிதாசன், தமிழ்தாசன், ரௌத்திரன், புதுயுகன், மெய்யன், இப்படி மிக அபாரமான திறமைசாலிகளான படைப்பாளிகள், இன்னும் சொல்லப்போனால் நல்ல சமுதாய நோக்கத்திற்காக ஆழமான கருத்தியலை புகித்தி எழுதப்பட்ட பல திறமையான படைப்பாளிகள் தளத்தில் இருக்கிற இடமே தெரியாமல் இருக்கின்றது.

நல்லப்படைப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுமாரான படைப்புகள் முன்வரிசையில் நிற்கின்றன, அதுவே மாத பரிசையும் வெல்கின்றன. இதற்கு முக்கிய காரணம் மதிப்பெண் மற்றும் பார்வைகள் அடிப்படையிலும், கருத்துக்கள் அடிப்படையிலும், பகிர்வுகள் அடிப்படையிலும் கணணித் தேர்வு மூலம் படைப்பாளிகளை தேர்வு செய்வதே முழுக்காரணமாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கை.

திறமை வாய்ந்த நடுவர்களின் மூலம் நல்ல படைப்புகளை தேர்வு செய்து அதற்கு அங்கீகாரம் வழங்க தளத்தால் முடியாத சூழ்நிலையே இன்றும் தொடருகிறது என்றே நான் நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்லப் படைப்பாளிகளை வெளியே கொண்டுவந்து அனைவருக்கும் அறிமுகபடுத்த வேண்டும் என்ற எனது முதல் முயற்சியை நான் தொடங்கினேன். அதன் விளைவுதான் 2012 ஆம் ஆண்டு தளத்தில் நான் நடத்திய முதல் கவிதைப்போட்டி ஆகும்.

புரட்சியாளர் சே குவேராவின் பிறந்தநாளை முன்னிட்டும், உழவர்களின் நல்லேர் தினத்தை முன்னிட்டும் இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியின் முடிவில் நல்ல திறமையானப் படைப்பாளிகளை நாங்கள் இனம் கண்டதோடு அவர்களை உலகறிய அனைவருக்கும் அறிமுகம் செய்தோம்.

போட்டி இந்த தளத்தில்தானே நடக்கிறது இது ஒரு பெரிய விடயமா என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இந்த போட்டியை உலக தமிழ்ச் சமுதாயமே கண்டுகொண்டுதான் இருக்கிறது என்பதை நீங்கள் முதலில் உணர்ந்து படைப்புகளை எழுதுவீர்களேயானால், விளையாட்டுத்தனமில்லாத நல்லத் திறமையானப்படைப்புகளை உங்களால் உருவாக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

முதல் போட்டியிலிருந்து அடுத்தடுத்து வந்த நான்கு போட்டிகளிலும் எங்களோடு கலந்து செயலாற்றியவர்கள் அனைவருமே திருவிழாக்குழுவை சேர்ந்தவர்களே ஆவார்கள். இந்த போட்டியில் யார் யார் எல்லாம் இணைந்து செயல்பட்டார்கள் என்பது எனக்கு தெரியாது, தம்பி கலையின் நன்றிமடளுக்குப் பிறகே அதை யாவரும் அறியமுடியும். ஆனாலும்,,, வருடம்தோறும் பொங்கல் விழாவின் நினைவாக, முதல் போட்டியில் இருந்து என்னோடு பணியாற்றி எனக்கு உறுதுணையாய் இருந்தவர்களை அனைவருக்கும் அடையாளம் காட்டி மரியாதை செலுத்துவது எனது முக்கிய கடமை ஆகும்.

அந்த வகையில்தான் இந்த கட்டுரையை நான் இங்கே பதிவிடுகிறேன்.

2012 ஆம் ஆண்டு மாவீரன் சே குவேராவின் பிறந்தநாளையும், உழவர்களின் நல்லேறு திருவிழாவையும் முன்னிட்டு தளத்தில் கவிதைபோட்டி நடத்தி, நல்ல படைப்பாளிகளை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவானது.

உடனே ஐந்து நடுவர்களை தேர்வு செய்து அவர்களின் சம்மதத்தைப் பெற்றேன், அவர்களிடம் இருந்து ஐந்து தலைப்புகளை வாங்கி, அந்த தலைப்புகளில் கவிதைகள் எழுதும்படி தளத்தில் அறிவித்தேன்.

ஒரு ஒரு நடுவரையும் அவர் அவர்கள் அறிவித்த தலைப்புகளில் பதிவாகின்ற படைப்புகளை கவனித்துக் கொள்ளும்படி கூறினேன். இந்த போட்டி ஒருமாத காலம் நடந்தது. நடுவர்கள் மிக சிரமபட்டார்கள் ஒரு மாத காலமும் தளத்தில் இரவுப்பகலாக வேலை செய்தார்கள். அப்படிப்பட்ட ஒப்பற்ற மாமனிதர்களின் தியாகமே இந்த போட்டி வருடம்தோறும் நடைபெற வழி வகுத்தது என்றால் அது மிகையாகாது.

அவர்கள் அன்று சோர்வடைந்து இருந்து இருந்தால், இந்த போட்டி இதுவரை தொடர்ந்து இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்றே நான் கூறுவேன், இந்த போட்டிக்கு அவர்கள்தான் ஆணிவேர் நாங்கள் கிளைகளாகவும் இலைகளாகவும் இருக்கிறோம்.

ஒரு சிறுவனின் துணிச்சலையும், ஆர்வத்தையும் இவ்வளவுப்பெரிய இடத்திற்கு வளர்த்துவிட்ட அந்த அன்பு உள்ளங்களுக்கு நான் எனது இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

அந்த ஐந்து முதன்மை நடுவர்கள (2012)
******************************************************
1. இலக்கியச்சுடர் - மருத்துவர் அய்யா வ. க கன்னியப்பன் அவர்கள்

2.இலக்கிய உளி அய்யா - காளியப்பன் எசக்கியேல் அவர்கள்

3. சமூக ஆர்வலர் அண்ணன் - மு. ராமச்சந்திரன் அவர்கள்

4. முற்போக்கு சிந்தனையாளர் அண்ணன் - பொள்ளாச்சி அபி அவர்கள்

5. இலக்கிய சுவையாளர் அய்யா - சங்கரன் அய்யா அவர்கள்

இவர்கள் ஐவரும் ஒருமாத காலம் எனக்காக ஒதுக்கி என்னோடு வாழ்ந்தவர்கள்.

மேலும் எனக்கு உந்து சக்தியாகவும் ஊக்கசக்தியாகவும் இருந்த நடுவர்கள்.

1. முற்போக்கு சிந்தனையாளர் அன்பிற்கினிய அண்ணன் - முத்துனாடான் அவர்கள்.

2. தமிழாசிரியர் மதிப்பிற்குரிய அய்யா - பொற்செழியன் அவர்கள்

3. சமத்துவச்சங்கிலி அன்பிற்கினிய அக்கா - நா வளர்மதி அவர்கள்

இவர்களோடு கவிதை தொகுப்பாளர்களாக இருந்த தோழி பிரியாராம், மற்றும் அன்பு தம்பி ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ஆகியோர்களையும் இந்தநாளில் நான் நியாகமூட்டிக்கொள்கிறேன்.

முதல் போட்டியின் தலைப்புக்கள்(2012)
*****************************************************

1. தேவை ஒரு விவசாயப்புரட்சி (வ. க. கன்னியப்பன்)

2. சே. குவேரா ஒரு மாமனிதன் (காளியப்பன் எசக்கியேல்)

3. சமூக அவலங்கள் (மு. ராமச்சந்திரன்)

4. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் (பொள்ளாச்சி அபி)

5. ஒப்பிலா உழவு (சங்கரன் அய்யா)

ஒரு மாதங்களுக்குப் பிறகு அவரவர் தலைப்புகளில் வந்த கவிதைகளை மாற்றி மாற்றி அனுப்பி தேர்வு செய்யப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசு பெற்ற படைப்புகள்.
*********************************
முதல் பரிசு 3000
திரு ரமேஷாலம் அவர்கள் (சே. குவேரா ஒரு மாமனிதன்)

சிறப்பு பரிசுகள்.
திரு மோசே அவர்கள் (ஒப்பில்லா உழவு)

ஊக்கப்பரிசு 1000
திரு விநாயக முருகன் அவர்கள் (இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்)

ஊக்கப்பரிசு 1000
திரு சுகன்யா அவர்கள் (சமூக அவலங்கள் )

பரிசு த்தொகையை பகிர்ந்து அளித்தவர் எனது மதிப்பிற்குரிய அய்யா பரிதி முத்தரசன் அவர்கள்.

====================

முதல் போட்டியில் பரிசை வென்று அடையாளம் காட்டப்பட்ட படைப்பாளிகள் திருவிழக்குழுவில் இணைக்கப்பட்டு அடுத்த போட்டிகளில் எங்களுக்கு துணையாக நடுவர்களாக செயல்பட்டார்கள். இது மேலும் திறமையானப் படைப்பாளிகளை அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணமே ஆகும்.

இரண்டாவது பொங்கல் கவிதை போட்டி 2013
*************************************************************

தலைப்புகள்
*****************

1. தைமகளே வருக
2. உழவின்றி உலகில்லை
3. உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே.

முதல் போட்டி நடந்த போது இந்த போட்டி என்ற தனிபகுதி தளத்தில் இல்லை, இரண்டாவது போட்டி நடந்த போதும் அந்த வசதி இல்லை. தளம் தனிப்பக்கம் ஒதுக்கி தரவும் இல்லை, அதனால் மிகுந்த சிரமத்திற்கு இடையிலேதான் இரண்டு போட்டிகள் நடந்தன.

இந்த இரண்டாவது போட்டியின் நடத்துனராக நான் இருந்தேன். இந்த போட்டியின் மேலாளரகாக இருந்து போட்டியை செம்மையாக நடத்தியவர் எனது மதிப்பிற்குரிய அண்ணன் பெங்களூர் மு. ராமச்சந்திரன் அவர்களே ஆவார். இரண்டாவது போட்டி சிறப்பாக நடைபெற அண்ணன் மு. ராமச்சந்திரன் அவர்களே மூலக்காரணமாக இருந்தார்.

இரண்டாவது போட்டியின் நடுவர்கள் 2013
*********************************************************

1. இலக்கியச்சுடர் மருத்துவர அய்யா - வ. க. கன்னியப்பன் அவர்கள் (மதுரை)

2. இலக்கிய முனைவர் உயர்திரு க. பஞ்சாங்கம் (புதுச்சேரி)

3.இலக்கிய உளி அய்யா - காளியப்பன் எசக்கியேல் (சென்னை)

4. முற்போக்கு சிந்தனையாளர் அண்ணன் - பொள்ளாச்சி அபி அவர்கள் (பொள்ளாச்சி)

5. தமிழ் ஆசிரியர் உயர்திரு அய்யா பொற்செழியன் அவர்கள் (திருநெல்வேலி)

6. இலக்கிய சுவையாளர் உயர்திரு அய்யா சங்கரன் அய்யா அவர்கள்.

7. பொதுநல ஆர்வலர், இலக்கிய முரசு எனது அன்பிற்குரிய அய்யா அகன் அவர்கள் (புதுச்சேரி)

8. முற்போக்குப் படைப்பாளி எனது அன்பிற்குரிய அண்ணன் முத்துநாடான் அவர்கள் (மதுரை)

9. சமத்துவச்சங்கிலி எனது அன்பிற்குரிய அக்கா நா. வளர்மதி அவர்கள்( மதுரை).

10.சமுதாய விழிப்புனர்வாளார், வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அய்யா மோசே அவர்கள் (திருநெல்வேலி)

11. சமூக ஆர்வலர், ஆசிரியர் உயர்திரு தோழர் கோவை ஆனந்த் அவர்கள் (கோயமுத்தூர்)

12. பொதுநல ஆர்வலர் எனது மதிப்பிற்குரிய உயர்திரு சேதுராமலிங்கம் அவர்கள் ( ஏர்வாடி).

ஆகிய அனைவரும் சிறப்பாக பணியாற்றி போட்டியை சிறப்பித்தார்கள். இந்த சிறுவனின் தலைமையை சிரமமின்றி ஏற்று பொதுப் பணியாற்றிய இந்த உன்னத மனிதர்கள் என்றும் என் மதிப்பிற்கு உரியவர்களாகவே இருப்பார்கள் என்பதை இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன்.

மேலும் இந்த போட்டி சிறப்பாக நடக்க மூலகாரணமாக இருந்த கவிதை தொகுப்பாளர்கள் மூன்று பேருக்கும் எனது நன்றிகள் என்றும் உரிதாகவே இருக்கும்.

அவர்கள்

தோழி பிரியாராம் அவர்கள்
தோழி ஜெயந்தி அவர்கள்
தோழி சுகன்யா அவர்கள்

மேலும் இந்த 2013 ஆம் ஆண்டு போட்டியில் படைப்பாளிகளுக்கு ஆலோசகராக இருந்த எனது தம்பி கலைக்கும். தளத்திற்கு வெளியே இருந்து போட்டி சிறப்பாக நடக்க எனக்கு உறுதுணையாய் இருந்து எனது அன்பு தம்பி ஈஸ்வர் தனிகாட்டு ராஜாவிற்கும் எனது அன்பான நன்றிகள் அணிவகுத்தே நிற்கும்.

2013 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது போட்டியில் பரிசு வென்ற படைப்புகள்.

முதல் பரிசு - நிலவை பார்த்திபன் 4000

சிறப்பு பரிசு - த. மலைமன்னன் 1500

சிறப்பு பரிசு கே. ரவிச்சந்திரன் 1500

இந்த போட்டியில் முதல் கவிதை எழுதியதற்காக தோழர் கவிகன்மணி அவர்களுக்கு சிறப்பு பரிசு 500

இந்த போட்டியில் படைப்பாளிகளுக்கு அதிக ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்ததற்காய் தம்பி சு ரவி அகார்களுக்கும் சிறப்பு பரிசு 500 வழங்கப்பட்டது.

மேலும்

ரஞ்சிதா
ஆயிஷா பாருக்
மேரி ஜெசிந்தா
ஜோசப் ஜூலியட்

ஆகியோர்களுக்கு சிறந்த படைப்பாளர்களுக்கான சான்றிதழ்கள்அளிக்கப்பட்டன.

பரிசையும் தாண்டி சிறந்த படைப்பாளிகளை அனைவருக்கும் அடையாளம் காட்ட வேண்டும் என்பதுதான் இந்த போட்டிகளின் ஒரே நோக்கமாகும்.

==========================

மூன்றாவது பொங்கல் கவிதைபோட்டி 2014.
*************************************************************

பரிசு பெற்றவர்கள்
*************************
முதல் பரிசு
உயர்திரு அய்யா மெய்யன் நடராஜன் அவர்கள் (சமத்துவப்பொங்கல் பொங்கட்டும்)

இரண்டாம் பரிசு
உயர்திரு அய்யா கிரிகாசன் அவர்கள் (உலவும் நிலவே ஓடிச்சொல் )

மூன்றாம் பரிசு
உயர்திரு சிவகாவிதாசன் அவர்கள் (தமிழனென்றால் உரைக்கணும் புத்தி)

இந்த போட்டிக்கு நாங்கள் யாரும் தலைப்பு தரவில்லை, உலகெங்கும் 12 கோடி மக்கள்தொகையோடு பறந்து விரிந்து வாழுகின்ற தமிழ் தேசியத்தையும், அதன் ஒற்றுமையின் அவசியத்தையும் கருவாகக் கொண்டு கவிதை எழுதி அதற்கு ஏற்ற தலைப்பையும் படைப்பாளிகளையே வைத்துகொள்ளும்படி கூறினோம். அதே போலவே அனைவரும் செய்தார்கள். இப்படிப்பட்ட போட்டியை உருவாக்கி நடத்தியதில் எனக்கு தற்பெருமையும்கூட உண்டுதான். ஆனாலும் இப்படிப்பட்ட போட்டியை நடத்தியதன்மூலம் தளத்தின் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை, மாறாக தளம் செம்மையே அடைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த மூன்றாவது போட்டிக்கு தளம் சில வசதிகளையும் எங்களுக்கு செய்து தந்தது, ஆகையினால் போட்டியும் சிறப்பாக நடத்த முடிந்தது.

2014 மூன்றாவது போட்டியின் நடுவர்கள்
*******************************************************

முதல் கட்ட நடுவர்கள்
******************************

தம்பி கே.எஸ் கலை அவர்கள்
தோழர் கோவை ஆனந்த் அவர்கள்

இரண்டாம்கட்ட நடுவர்கள்
**************************************
உயர்திரு கே.பி அய்யா அவர்கள்
உயர்திரு அய்யா ஜோசப் ஜூலியட் அவர்கள்
எனது மதிப்பிற்குரிய அக்கா சொ. சாந்தி அவர்கள்
மதிப்பிற்குரிய திருமதி தாரகை அவர்கள்

மூன்றாம்கட்ட நடுவர்கள்
***********************************

உயர்திரு தோழர் நிலவை பார்த்திபன் அவர்கள்
உயர்திரு தோழர் வெள்ளூர் ராஜா அவர்கள்

சிறப்பு நடுவர்கள்
************************
மதிப்பிற்குரிய அய்யா அகன் அவர்கள்
மதிப்பிற்குரிய அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்கள்

இறுதிகட்ட நடுவர்கள்
*******************************
புகழ்பெற்ற மெய்ப்பு நோக்கு அறிஞர், பதிப்பகத்தார் உயர்திரு விழி. தி. நடராசன் அவர்கள்.

புகழ்பெற்ற துளிப்பா படைப்பாளி உயர்திரு சீனு தமிழ்மணி அவர்கள்.

ஆகியோர்களினால் போட்டி சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.

இனி நான்காவது பொங்கல்கவிதை போட்டி 2015 பற்றியும், நடுவர்கள் பற்றியும் மட்டுமல்ல, இறுதி முடிவுகளையும் தம்பி கலை அவர்கள் விரைவில் தளத்தில் அறிவிப்பார். தன்னலம் கருதாமல் இந்த பணியில் என்னோடு பணியாற்றிய பணியாற்றுகின்ற அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியினை தெரிவித்து, மேலும் இணைந்து செயல்படுவோம் என்று கூறி விடை பெறுகிறேன்.


நன்றிகளும், வணக்கங்களும்.
----------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (26-Jan-15, 5:57 pm)
பார்வை : 327

சிறந்த கட்டுரைகள்

மேலே