மதங்கள் என்ன செய்தது குப்பையில் கொட்ட

மதங்கள் என்ன செய்தது .....? குப்பையில் கொட்ட........ ஐன்ஸ்டீன் தெரியும் என நினைக்கிறேன் ஆக்கபூர்வமாக அவர் ஒரு சமன்பாட்டை நிறுவினார் ஆம் நிறையாற்றல் சமன்பாடு E=MC2 அருமையான விசயம் உலகே வியந்து போற்றியது........ ஆனால் விளைவு ஈரோசிமா நாக்கசாக்கியை நாசப்படுத்திய அணுகுண்டாகியது........... கண்டுபிடித்த ஐன்ஸ்டீனுக்கே தெரியாது தனது கண்டுபிடிப்பு இப்படியாகும் என கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் தவறு ஐன்ஸ்டீன் மீது என குற்றம் சொல்ல இயலுமா........? இல்லை அந்த சமன்பாடு என சொல்ல முடியுமா.........? இரண்டும் இல்லை இடையில் வந்த இ(ம)டையர்களை சொல்ல வேண்டும். நீங்கள் செய்வது அணுகுண்டை அழிக்க சொல்லவில்லை மாறாக ஐன்ஸ்டீன் ஒழிக என்றும் சமன்பாடு ஒழிக என்றும் கூறுகிறீர்கள் இதுதான் பகுத்தறிவா........? மதங்களை நல்வழி படுத்த தேவையேயில்லை அவை நல்வழி படுத்தவே உண்டாக்கபட்டன ஆனால் அதை பின்பற்றியவரில் சிலரால் நிகழ்ந்த தவறுகளால் இந்த இழிநிலை வந்தது அவைகளை கூறாது கடவுளையும் மதத்தையும் குற்றம் சாடி என்ன பயன்........? இதனால் நல்லிணக்கம் ஏற்படாது மதங்கள் வேண்டாம் என ஒரு மதமும் மதங்கள் வேண்டும் என ஒரு மதமும் வேண்டுமானால் உருவாகலாம். ........

மதங்களை எதிர்ப்போர் பகுத்தறிவாளிகள் என சொல்லிக்கொள்கிறார்கள் இருக்கலாம் ஆனால் எதிர்க்கும் முறையை சரியாக கையாள்கிறார்களா என்பது ....?

மதங்களை அழிக்க வேண்டும் என துடிப்போர் அவை அழிவின் காரணம் என்பதை தவிர வேறு எதையும் முன்வைத்ததாய் தோன்றவில்லை.
குற்றம் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது. நன்கு யோசித்தால் ஒருவிஷயம் விளங்கும் இருவேறு பிரிவினை உள்ள நாடுகளில் தான் மதங்கள் தவறானவையாக தோற்றம் தருகின்றன. காரணம் மனிதனுள் எது சிறந்தது எனும் கேள்வி எழுந்ததால்.

இந்த பகுத்தறிவுவாதிகள் இதை பின்பற்றலாம் மதங்களை அழிக்க நினையாமல் அனைத்து மதமும் ஒன்றே ஒரு குறிக்கோளே. அது இறைவனை அடையும் வழி என மனிதனை நல்லொழுக்க நெறியில் நடக்க வைக்க உருவானது. எனவே அனைவரும் குறுக்கீடு அற்று வாழுங்கள் என வெள்ளைக்கொடி வேந்தர்களாக மாறுவது சால சிறந்ததாகுமோ என தோன்றுகிறது.

எனவே பகுத்தறிவு வாதிகளே
அணுகுமுறையை மாற்றுங்கள் அனைத்தும் நிறைவேறும்.

எழுதியவர் : கவியரசன் (31-Jan-15, 1:39 pm)
பார்வை : 225

மேலே