நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுறவேண்டும் கவிதை போட்டி

பெண்கள் உடை கண்டாலே ஆணுறை
தேடும் ஆண்மை கொண்ட விலங்குகளே
உறுப்புகளுக்காக உணர்வு இழக்கும் மிருகங்களே

இந்து முஸ்லிம் கிருஸ்துவம்
மதப் பெயரில் மாய்த்து கொண்டீரே
ஆயினும் ஏனடா காம கலியாட்டத்தில் சமத்துவம்


வெட்கம் அற்ற பதர்களே!
பெண் சிலை காணினும் சபலம் கொள்ளும் அற்பனே!

தன் பாட்டிப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் தாய்ப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் சகோதரிப் போல் பெண்டீரை சீண்டினாய்

விடுத்தோம் மறந்து தொலைத்தோம்
நெஞ்சு பொறுக்குதில்லையே! நெஞ்சு பொறுக்குதில்லையே!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வரிகள் காண நேருகையில்

ஏனடா மானுடா உன் மகளாய் துள்ளித் திரியும்
சிறு குழந்தைகளை சீண்டுகிறாய்
சதை மீது பற்றூ கொண்ட ஆணாதிக்கவாதிகளே!

ஓ கடவுளே வேற்றுக்கிரக உயிர்களில் பெண்கள் உண்டோ
இருப்பின் மறைத்து வைத்து விடு
இவர்களின் ஆண்மை தொய்வுறும் வரை.....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (8-Feb-15, 9:15 pm)
பார்வை : 279

மேலே