அந்த ரகசியத்தைச் சொல்லுடா

ஏண்டா நீயும் வசதி இல்லாதவன். உம் பொண்ண ஒரு ஏழைக் குடும்பத்திலெ கல்யாணம் பண்ணிக் குடுத்த. இப்ப வசதியா வாழறாங்கன்னு சொல்லற ரொம்ப சந்தோஷமா இருக்குதடா. அவுங்க. எப்படி வசது ஆனாங்கன்ற ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுடா.

எல்லாம் எம் பொண்ணோட பே ர் ராசி தாண்டா. அவ பொறந்ததும் அவளுக்கு செல்வி-ன்னு பேரு வைக்கலாம்ன்னு இருந்தேன். ஒரு ஜோசியரைப் பார்த்தென். அவருக்கு எண் கணிதமும் தெரியும். அவரு எம் பொண்ணுக்கு ஐஸ்வர்யான்னு பேரு வைக்கச் சொன்னாரு. ஆங்கிலத்லே எழுதற போது
Aisshvarrrya ன்னு எழுதணும்னு சொன்னாரு. அவரு சொன்னபடி செஞ்சதால எம் பொண்ணு இப்ப வசதியா வாழ்ந்திட்டிருக்கா.



* ஐஸ்வர்யா என்ற இந்திச் சொல்லுக்கு செல்வம் என்று பொருள். wealth

எழுதியவர் : மலர் (16-Feb-15, 8:47 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 213

மேலே