நலத்திட்டங்கள்

அக்பருக்கு ஒருநாள் சந்தேகம் வந்ததாம். நாம் எவ்வளவுதான் நலத்திட்டங்களை அறிவித்தாலும் அது ஏன் மக்கள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கின்றார்கள் என்று சந்தேகம். பீர்பாலை அழைத்தாராம். பீர்பால் நான் உங்களுக்கு எக்ஸ்பிளையின் செய்கின்றேன் பிரபுவே என்றாராம்.

அக்பரின் நிதி அமைச்சரை அழைத்து பீர்பால் அவன் இரண்டு கைகளையும் குவிக்க சொன்னாராம். நிதி அமைச்சர் கையில் அக்பரை விட்டு ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்ற சொன்னாராம். இப்போது நிதி அமைச்சரை அப்படியே நடந்து போகச் சொல்லி கல்வி அமைச்சரின் கையில் நிதி அமைச்சரின் கையிலிருந்த நீரை மாற்ற சொன்னாராம். இப்போது கல்வி அமைச்சர் கையில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பிறகு அவரை இன்னொரு அமைச்சர் கையில் கொடுக்க சொன்னாராம். இப்படியே அரசவை மண்டபம் முழுவதும் எல்லா அமைச்சர்களின் கையிலும் இடம் மாறி கடைசியில் அரசவையில் நின்றிருந்த குடியானவன் கையில் ஊற்ற சொன்னார்களாம். ஆனால் அந்த குடியானவன் கையில் ஊற்றும்போது கையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லையாம்.

நீதி:- இதுக்குதான் தெருவுக்கு நாலு டாஸ் மாக் திறந்து மக்களுக்கு தடையில்லாமல் சப்ளை செய்யனும்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (16-Feb-15, 10:47 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 412

மேலே