மூட்டைச் சுமையாளிகளின் உழைப்பு

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பசிப் பாவங்களுக்கு நீ ஆளாகி விடுவாய் என்று"

"உடைந்து விழும் மணற்சரிவில் சிக்கிய
ஒரு எறும்பும் என் எலும்பும் ஒன்றுதானே!
அது உயிர் இழந்துவிடும் வலித்-தாங்காமல்
நான் உயிர் பிழைத்துவிடுவேன் என் பிள்ளையின் பசித்-தாங்காமல் "



" வலியால் கண்கள் கலங்கக்
கண்ணீரால் ஆறுதல் சொல்லும்
எத்தனைச் சுமையாளிகள் தெரியுமா இந்த தேசத்தில்?

"மறந்து விடாதீர்!அவர்களைப் -போல
உழைப்பாளிகள் எங்குமே இல்லை என்பதை மட்டும்"

"தங்கமோ,வைரமோ,
இவைகளைவிட உயர்ந்த எத்தனையோப்
பெட்டியில் பல உழைப்பாளிகளின் வியர்வை அடையாளம்தான் இருந்து(க்) கொண்டே இருக்கும்"

"வருவது நறுமணமோ,
வேதியியலின் உபகாரணமோ,
என்பதைக்கூட அறியாமல்
தன் பிள்ளையின் பசிக்காகத்
தன் தொழில் சுமந்து செல்லும்
எத்தனையோ உழைப்பாளிகளின்
எண்ணங்களும் மிகச்சிறந்த வண்ணங்கள்"
"இந்த கவிதையின் தொகுப்பில்"...


"இறுதியாக ஒன்றை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்

விடுமுறை இல்லாத உழைப்பு!
இந்த மூட்டைச் சுமையாளிகளின் உழைப்பு மட்டும்தான் என்பதை மட்டும்"


"எத்தனையோ கவிஞனைப் பற்றிக்
கவிதை எழுதுவதை விட
இந்த மூட்டைச் சுமையாளிகளின் உழைப்பைப் பற்றிக்
கவிதை எழுதுவதையே நான் சிறந்ததாக நினைக்கிறேன்"""""""""""...............




இப்படிக்கு

J.MUNOFAR HUSSAIN,
1ST YEAR CIVIL DEPARTMENT,
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE,
AVADI,
CHENNAI............

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (18-Feb-15, 6:09 pm)
பார்வை : 1202

மேலே