நக்குல்

ந(க்)குல்


ஏண்டா அவனுக்கு அவனோட அம்மா அப்பா அறிவரசுன்னு பேரு வச்ச்சிருக்காங்க. அவனுக்கு அந்தப் பேரு பிடிக்கலையாம்?

என்னடா ஆச்சு அவனுக்கு. அது நல்ல பேரு தானே?

இல்லடா பெரும்பாலான பெற்றோர்கள் அவுங்க பிள்ளைகளுக்கெல்லாம் அழகான இந்திப் பேரா வச்சிருக்காங்கலாம். அந்தப் பசங்கெல்லாம் இவம் பேரக் கிண்டல் பண்ணறாங்களாம்.
இவன அந்தப் பசங்கெல்லாம்’நக்குல்’ன்னு .கூப்பிடறாங்களாம். அந்தப் பேரு அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்காம். இனிமே அவன் அடம்பிடிச்சாவது அவனோட அம்மா அப்பாகிட்டே சொல்லித் தன்னோட பேர நக்குல்-ன்னு மாத்திக்கப் போறானாம்..

அடப்பாவி. அவங்கிட்ட எதச் சாப்பிடக் குடுத்தாலும் நக்கி நக்கித் தான் சாப்பிடுவான். அதக் கிண்டல் பண்ணற மாதிரி இந்திப் பேரு வச்சிருக்கற பசங்கெல்லாம் அவன நக்குல்-ன்னு கூப்பிடறாங்க. அது அவனுக்குப் புரியல. சமஸ்கிருதத்திலே Nakul -ன்னா கீரிப்பிள்ளைன்னு அர்த்தம்.

Nakul in Sanskrit means Mongoose
நன்றி: கூகுல்

எழுதியவர் : மலர் (21-Feb-15, 11:42 am)
பார்வை : 137

சிறந்த நகைச்சுவைகள்

மேலே